You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




முறையாக தயாராகுங்கள் நாளை நவராத்திரி விரதம் ஆரம்பம்

2018-10-04


புரட்டாதி மாத வளர்ப்பிறைப் பிரதமை முதல் நவமி முடியும் வரையான காலப்பகுதியில் அம்பிகையை மூன்று வடிவமாக கொண்டு வழிபடும் விரதம் நவராத்திரி விழா.
எமது வாழ்விற்கு மிக முக்கியமான  தேவைகளான கல்வி, செல்வம், வீரம் வேண்டி ஆலயங்கள், பாடசாலைகள் மற்றும் பணிபுரியும் இடங்களில் கொழுவைத்து அனுஸ்டிக்கப்படும். 


பூஜைக்கு தயாராகும் முறை
பூஜைக்கான இடத்தை நீரினால் சுத்தம் செய்து 1, 3, 9 ஆகிய ஏதாவது ஒரு எண்ணிக்கையில் படி அமைத்து படிகளின் மேல் தூய துணி விரிக்கப்பட்டு, அம்பிகையின் கலசமும் விநாயகர் சிலையும் முதலில் வைக்க வேண்டும்.  பின்னர் மற்ற தெய்வங்களின் பொம்மைகள் மற்றும் பழங்கால பாரம்பரிய பொம்மையாகிய மரப்பாச்சிகளும் வைக்து அலங்கரிக்க வேண்டும். 

கொலுப்படிகள் :
கொலு படிகளில் ஓர் அறிவு உள்ள உயிரினங்கள் கொண்டு தேவர்கள் வரை வரிசைபடுத்தி வைக்க வேண்டும்.

கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்

 முதலாம் படி :

ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகள்.

இரண்டாம் படி:

ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

மூன்றாம் படி :

மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.

நாலாம்படி :

நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.

 ஐந்தாம்படி :

ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள.

ஆறாம்படி :

ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.

ஏழாம்படி :

மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.

எட்டாம்படி :

தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.

ஒன்பதாம்படி :

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.

கெலுவைச் சுற்றி  கரும்பு மற்றும் வாழை இலை மர பந்தலிட்டு மாவிலை தோரணம் கட்டி அம்பிகையின் இருப்பிடத்தை அலங்கரிக்க வேண்டும்.

கும்பம் வைத்து நவதானியங்கள் சட்டிகளில் இட்டு கொலுவின் முன்னால் வைத்து தினதோறும் பூஜித்தல் சிறப்பு தரும்.
   

தினமும் பூஜிக்கும் முறை
காலை
தினமும் காலையில் குளித்து தூய்மையுடன் கொலுவின் முன்னால் சுத்தப்படுத்தி, கோலம் இட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும். அன்றைய நாளுக்குறிய நைவேத்தியத்தை தயார் செய்து படைத்து தோதிரங்கள் பாடி வழிபட வேண்டும். 

மாலை
இந்த ஒன்பது நாட்களும் மாலைவேளைகளில் குறித்து விளக்கேற்றி, நவதான்யங்களைக் கொண்டு தினமொரு சுண்டல் செய்து, பழம் தேங்காய் இவற்றை நைவேத்யம் செய்து தேவி மகாத்மியம், துர்கா ஸ்பதசதீ, லலிதா சஹஸரநாமம், மஹிஷாசுரமர்த்தினி ஸ்லோகங்களை முடிந்தவரை பாராயணம் செய்யலாம்.

நவராத்திரியை சிறப்பிக்கும் கன்னிப்பூஜை 
 கொலு வைக்கும் இல்லத்தரசிகள் தினந்தோறும் இளம் பெண்கள், கன்னிப்பெண்களைப் பூஜைக்கு அழைத்து, பூஜை முடிந்தவுடன் தன் கையாலேயே ஐவ்வாது, கஸ்தூரி, சந்தனம், குங்குமம், சாந்து, ஸ்ரீசூர்ணம், மை ஆகியவற்றை இட்டு அவர்களையும் தேவியாகவே பாவித்து வணங்க வேண்டும்.
அவர்களை வழியனுப்பும் போது வெற்றிலை பாக்கு, மஞ்சள் இயன்ற தட்சணை வஸ்திரம்  ஆகியவற்றைக் கொடுத்து அனுப்புவது விசேடமாகும்.

தினம் தோறும் பூஜை முடிக்கும் முறை
ஒவ்வொரு நாளும் இரவில் கொலுவுக்கு ஆரத்தி எடுத்து, அன்றைய பண்டிகையை முடிக்க வேண்டும். .