You are here : தெளி­வத்தை ஜோசப்

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
பேரா­சி­ரியர் செல்வா கன­க­நா­யகம்

March 10, 2015.


அறிவு நிழல் தந்த ஆல­வி­ருட்சம்
தமிழ் கூறும் நல்­லு­லகம் முழு­வதும் ஏற்­றுக்­கொள்ளும் வகையில் அறி­வியல் பூர்­வ­மான தமி­ழி­லக்­கிய வர­லாறு (1940), தமிழ் உரை­நடை வர­லாறு (1957) ஆகிய அழியாப் புகழ் கொண்ட இரு நூல்­களைத் தந்த பேரா­சி­ரியர் வி. செல்­வ­நா­யகத்தின் இளைய மகன் கன­க­நா­யகம் கனடா டொரண்டோ பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஆங்­கிலப் பேரா­சி­ரியர்.

தமிழ்ப் பேரா­சி­ரியர் விநா­சித்­தம்பி செல்­வ ­நாயகத்துக்கு (1907 –- 1973)  பெண்கள் இரண்டு ஆண்கள் இரண்டு  என்று நான்கு பிள்­ளைகள். இந்த நான்­கிலும் கடை­சிப்­பிள்ளை கன­க­நா­யகம். ஆங்­கிலம் படித்து, பட்டம் பெற்று, ஆங்­கிலம் பேரா­சி­ரி­ய­ராகி, அறிவு நிழல் கொடுத்து அப்­பாவின் அந்தப் புல­மைத்­துவ மரபைப் பாது­காத்­தவர்.

கொழும்பில் பிறந்து கொழும்­பிலும் யாழ்ப்­பா­ணத்­தி­லு­மாக கல்­வியைத் தொடர்ந்­தி­ருந்­தாலும் கண்­டியும் பேரா­த­னை­யுமே அவரைக் கூடு­த­லாக வளர்த்த இட­மாகி விட்­டது.

தந்­தையின் தமி­ழி­லக்­கிய அறி­வுடன் ஆஷ்லி ஹல்பேவின் ஆங்­கில இலக்­கியப் புல­மையும் இணைந்து உரு­வாக்­கிய ஒரு அறிவின் நுட்பம் செல்வா கன­க­நா­யகம்.

எழு­ப­து­களில் வித்­தி­யா­லங்­காரப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் அவர் பயின்ற போது தன்­னு­ட­னான புலமைத் தொடர்பை ஏற்­ப­டுத்திக் கொண்டார் கன­க­நாயம் என்று பதிவு செய்­கிறார் பேரா­சி­ரியர் சிவத்­தம்பி. பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் கலைப்­பி­ரிவில் கன­க­நா­யகம் படித்துக் கொண்­டி­ருந்த போது கலைப்­பி­ரிவு கண்­டி­யி­லி­ருந்து வித்­தி­யா­லங்­காரப் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு மாற்­றப்­பட்­டது.


கலைப்­பி­ரிவு ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களும் மாற்­றப்­பட்ட போது செல்­வாவும் மாற்­றப்­பட்டு வித்­தி­யா­லங்­கா­ர­வுக்கு வந்து சேர்ந்தார். ஜே.வி.பி. யினரின் ஆயுதக் கிளர்ச்சி முனைப்பு பெற்­றி­ருந்த காலம் இது.

இந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் விரி­வுரை அறை­களில் சில கைது செய்­யப்­பட்ட கிளர்ச்­சிக்­கா­ரர்­களின் சித்­தி­ர­வதை முகாம்­க­ளா­கவும் பயன்­ப­டுத்­தப்­பட்­டன என்று குறிக்­கின்றார் பேரா­சி­ரியர் ஆஷ்லி ஹல்­பேயின் மகளும் செல்­வாவின் மாண­வியும் ஆங்­கில விரி­வு­ரை­யா­ளரும் கவி­ஞ­ரு­மான அபர்ணா ஹல்பே.

தன்­னு­டைய மாணவப் பரு­வத்­திலும் அதன் பின்னர் பேரா­த­னையில் பட்டம் பெற்று யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஆங்­கில விரி­வு­ரை­யா­ள­ராக பணி­யேற்ற காலங்­க­ளிலும் தொடர்ந்த வன்­மு­றை­களின் வலிகள் அவரைப் பாதித்­தி­ருக்­கின்­றன.

ஆங்­கில விரி­வு­ரை­யா­ள­ராக யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் பத­வி­யேற்று தனது கலா­நி­திப்­பட்டப் படிப்­புக்­காக பொது நல­வாய அமைப்பின் புல­மைப்­ப­ரிசில் பெற்று கன­டாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்­பியா பல்­க­லைக்­க­ழ­கத்­துக்குள் எண்­ப­து­களில் நுழை­கின்றார்

கலா­நிதிப் பட்டம் பெற்று டொறண்டோ பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஆங்­கில விரி­வு­ரை­யா­ள­ராகப் பத­வி­யேற்ற பிறகு ஆங்­கிலப் பேரா­சி­ரி­ய­ராக உயர்ந்தார். அவ­ரு­டைய பெரு­மைக்­கு­ரிய பணி­களின் ஆரம்­பமும் அப்­போ­தி­ருந்தே தொடங்­கு­கின்­றது.

இலங்கைத் தமிழன் என்று கூறு­வதில் பெரு­மிதம் கொள்­ப­வ­ரான செல்வா கன­க­நாயகத்தை கொந்­த­ளித்­துக்­கி­டந்த இலங்­கையின் சூழல் கனடா வாசி­யாக வாழ்­வேற்க நிர்ப்­பந்தம் செய்­தது. கனடா  அவ­ரது நாடா­கவும் அடை­யா­ள­மா­கவும் மாறி­யது.

தனி­நா­யகம் அடி­களார் தொடக்கி வைத்த தமிழ் ஆராய்ச்சி மாநா­டு­க­ளுக்குப் பிறகு செல்வா கன­க­நா­யகம்  டொறண்டோ பல்­க­லைக்­க­ழ­கத்­தி­னூ­டாக அமைத்து நடத்தி வந்த தமி­ழியல் ஆய்வு மாநா­டுகள் வர­லாற்று  முக்­கி­யத்­துவம் கொண்­டவை.

அந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் தென்­னா­சி­யக்­கற்­கை­க­ளுக்­கான நிறு­வ­னத் தின் பணிப்­பாளர் செல்வா கன­க­நா­யகம்   தமிழ் இலக்­கி­யத்­துக்கும் தமிழ் வாழ்­வுக்கும் உழைத்­த­வர்­களை வாழும் காலத்­தி­லேயே வாழ்த்தும் பணி­யினை மேற்­கொள்ளும் கனடா தமிழ் இலக்­கி­யத்­தோட்­டத்தின் (Canada Tamil Literary Garden)  நிறு­வு­னர்­களில் ஒரு­வ­ரா­கவும் அதன் தலை­வ­ரா­கவும் செயற்­பட்­டவர் இவர்.

ஆய்­வுக்­கட்­டுரை நூல்கள், மொழி பெயர்ப்புத் தொகு­திகள் என பத்­துக்கும் மேற்­பட்ட நூல்­களை வெளி­யிட்­டுள்ளார்.  கவிஞர் சேரன் ‘காலம்’ செல்வம் அ. முத்­து­லிங்கம், என்.கே. மகா­லிங்கம் போன்ற இலக்­கி­யக்­கா­ரர்­களின் நட்பும் இணைவும் கூட அவ­ரது செயற்­பா­டு­க­ளுக்­கான ஒரு சக்­தி­யாக இருந்­துள்­ளது.

LUFESONG AND LAMENT (2001) TAMIL WRITINGS IN SRI LANKA என்னும் தொகுதி சிறு­கதை, கவிதை போன்ற நாற்­பது இலங்கை எழுத்­தா­ளர்­களின் ஐம்­பது படைப்­புக்­களின் ஆங்­கில மொழி பெயர்ப்பு நூல் பத்­ம­நாப ஐயரின் முனைப்­பான பங்­க­ளிப்­புடன் வெளி­வந்த நூல் இது.

WILTING LAUGHTER - THREE TAMIL POETS (2009) சேரன், ஜெய­பாலன், புதுவை இரத்­தி­ன­துரை ஆகிய மூன்று கவி­ஞர்­களின் கவி­தைகள் ஆங்­கி­லத்தில்
YOU CANNOT TURN AWAY (2011) சேரனின் கவி­தைகள் ஆங்­கி­லத்தில் IN OUR TRANSLATED  WORLD (2013) 78 தமிழ்க்­க­வி­ஞர்­களின் கவி­தை­களின் ஆங்­கில மொழி பெயர்ப்பு நூல் மற்றும் எஸ். பொ. வின் சடங்கு RITUAL என்றும் நூலாகி உள்­ளன.

போர் கார­ண­மாக ஏற்­படும் பிரிவின் உணர்­வு­களைப் பாடும் சங்க இலக்­கி­ய­மான நெடு­நல்­வா­டையின் ஆங்­கில மொழி­பெ­யர்ப்பும் OXFORD UNIVERSITY PREESக்காக UPROOTING THE PUMPKIN என்னும் இலங்கைச் சிறு­கதைத் தொகுப்­புக்­கான வேலை­களும் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன.

21.12.2014 அன்று ROYAL SOCIETY OF CANADA என்னும் பிர­புக்கள் சபை கன­டாவில் பல்­க­லைக்­க­ழகக் கல்விப் புலம் சார்ந்த புல­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்கும் அதி உயர் விரு­தினை செல்வா கன­க­நா­யகத்துக்கு வழங்க அழைத்­தி­ருந்­தது.

மனைவி திரு­ம­க­ளுடன் விருது விழா­வுக்குச் சென்று விருது பெற்றுத் திரும்பும் வழியில் ஹோட்­ட­லுக்குக் காரைச் செலுத்தி நிறுத்த இடம் தேடிக் கொண்­டி­ருக்­கையில் பிறேக்கில் அழுத்­திய காலுடன் மார­டைப்பால் மர­ணத்தைத் தழு­விக்­கொண்­டுள்ளார்.

ஒரு புல­மை­யா­ளனின் திடுக்­கிட வைக்கும் திடீர் மரணம் இது. கிட்­டத்­தட்ட நாற்­ப­தாண்­டு­க­ளுக்கு முன் பேரா­சி­ரியர் செல்­வ­நா­யகம்மும் இதே போல் தான் காரை ஓட்­டிக்­கொண்­டி­ருக்­கையில் பாதி வழியில் காரை நிறுத்தி விட்டு ஸ்டிய­ரிங்கில் மர­ணித்துக் கிடந்­தாராம்.

அப்­பா­வுக்கும் பிள்­ளைக்கும் ஒரே மாதி­ரி­யான மரணம் சம்­ப­வித்­தி­ருக்­கி­றது. அப்பா 66 வயதில். மகன் 62 வயதில்.

செல்வா கன­க­நா­யகத்தின் மரணச் செய்­தியை கன­டா­வி­லி­ருந்து ‘தாய் வீடு’ ஆசி­ரியர் திலிப்பும் ‘காலம்’ ஆசி­ரியர் செல்­வமும் லண்­ட­னி­லி­ருந்து பத்­ம­நாப  ஐயரும் எனக்கு தொலை­பேசி மூலம் அறி­வித்த போது மிகவும் திடுக்­கிட்டுப் போய் விட்டேன். ஒரு இன­ம­றியா வலியின் சுமை எனக்குள் வியா­பித்துக் கொண்­டி­ருந்­தது.

என்.எஸ்.எம். ராமையா, கணேஷ், துரைவி, கார்­மேகம், சாரல், எஸ். பொ., காவலூர் பிரேம்ஜி, பேரா­சி­ரியர் சிவத்­தம்பி போன்று நெருக்­க­மான இலக்­கிய உற­வு­க­ளாக இல்லா விட்­டாலும் கூட அவ­ராற்றும் பெரும்­ப­ணிகள் பற்றி நண்­பர்கள் மூலம் அறிந்­தி­ருந்­தேன். வியப்­பூட்டும் செயற்­பா­டுகள் அவை.

பெரும்­பா­லான நமது பல்­க­லைக்­க­ழ­கங்­களே இலக்­கியம் பற்­றிய சிந்­த­னை­க­ளற்று செயற்­படும் ஒரு தமிழ்ச்­சூ­ழலில் ஒரு புல­மை­யா­ள­ரான கன­க­நா­யகத்தின் இலக்­கியப் பணிகள் எனக்கு ஆச்­ச­ரியம் தந்­தன. சாதா­ரண ஒரு­வரால் செய்ய முடி­யாத சாத­னைகள் அவ­ரு­டை­யவை.

கன­டாவின் தமிழ் இலக்­கி­யத்­தோட்டம் 2001 லிருந்து செயற்­ப­டு­கின்­றது. இலக்­கிய ஆளு­மை­க­ளுக்­கான அவர்­க­ளது முதல் விருது தமி­ழகப் படைப்­பாளி சுந்­தர ராம­சாமிக்கு வழங்­கப்­பட்­டது. 2002க்கான விரு­தினை மலை­யக முன்­னோடி கே. கணே­ஷூக்கு வழங்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாக ஐயர் லண்­டனில் இருந்து என்­னுடன் தொடர்பு கொண்டு கூறினார்.

செல்வா கன­க­நா­யகம் அல்­லது முத்­து­லிங்கம் உங்­க­ளுடன் தொடர்பு கொண்டு கே. கணேஷ் பற்­றியும் தொடர்­புக்­கான வழிகள் பற்­றியும் கேட்­பார்கள் என்றார் ஐயர்.

பிறி­தொரு நாள் செல்வா கன­க­நா­யகம் என்­னுடன் தொடர்பு கொண்டார்.  நான் அவ­ருடன் உரை­யா­டிய முதல் சந்­தர்ப்பம் இது. கணேஷின் முக­வரி தொடர்பெண் ஆகி­ய­வை­களைக் கூறினேன். ஐயரின் செய்தி கிடைத்­த­துமே கணே­ஷுடன் தொடர்பு கொண்டு விஷ­யத்தைக் கூறி வைத்­தி­ருந்தேன்.

மகிழ்ச்சி தெரி­வித்த கணேஷ்  தான் ஒரு நெஞ்­சு­வ­லிக்­காரன் என்றும் கனடா வந்து விருது வாங்கச் சொன்னால் அது சாத்­தி­யப்­ப­டாது என்றும் கூறினார்.
நீங்கள் விரு­தினை ஏற்­றுக்­கொள்­ளுங்கள் மற்­ற­வை­களை நான் பார்த்துக் கொள்வேன் என்று கணே­ஷூக்கு கூறி வைத்தேன்.

ஐய­ருடன் நட்பு ரீதியில் நெருக்­க­மாகப் பழ­கு­பவன் என்­பதால் கணேஷினால் கனடா செல்ல இய­லா­தது  பற்­றிக்­கூ­றினேன். “பிரச்­சி­னையே கிடை­யாது. செல்வா பேசும் போது கூறுங்கள் அவர்கள் கூறும் திக­தியில் கொழும்பில் நீங்கள் விழா­வெ­டுக்க முடி­யு­மென்றால் விரு­துடன் வரு­வார்கள்” என்றார்.

முத்­து­லிங்­கமும் அதன் பிறகு செல்வா கன­க­நா­ய­கமும் தொடர்பு கொண்­டார்கள். இலக்­கிய விரு­து­டனும் 1500 கனே­டிய டொலர் பண­முடிப்­பு­டனும் டொறன்டோ பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஆங்­கிலப் பேரா­சி­ரியர் செல்வா கன­க­நாயகம்   2002 ஆம் ஆண்டு டிசம்பர் கடை­சியில் கொழும்பு வந்தார்.

மலை­நாட்டு எழுத்­தாளர் மன்றம் வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்­ண­மிஷன் விரி­வுரை மண்­ட­பத்தில் 02.01. 2003 இல் கனேடிய தமிழ் இலக்­கிய தோட்­டத்தின் இயல் விருது  விழா­வினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. பேரா­சி­ரியர் சிவத்­தம்­பியின் முன்­னி­லையில் பேரா­சி­ரியர் சோ. சந்­தி­ர­சே­கரன் தலை­மையில்  நடந்த இவ்­வி­ருது விழாவில் பேரா­சி­ரியர் செல்வா கன­க­நாயகம்   விருது வழங்கி கே. கணேஷைக் கௌர­வித்தார்.

பேரா­சி­ரியர் எம்.ஏ. நுஃமான், நீர்வை, நான் உட்­பட பலர் உரை­யாற்­றி­னோம். செல்வாவை நான் சந்­தித்து  உரை­யா­டிய முதல் சந்­தர்ப்பம் இது. இயல் விருது பெறும் கே. கணேஷை கௌர­விக்­கு­மு­க­மாக காலம் சஞ்­சி­கையும் (கனடா)  நமது ஞானம் சஞ்­சி­கையும் சிறப்பு மலர்கள் வெளி­யிட்­டி­ருந்­தன.

2003 ஆகஸ்டில்  காலம் சஞ்­சி­கையின் வாழும் தமிழ் புத்­தகக் கண்­காட்சி நடை­பெற்­றது. காலம் சஞ்­சி­கையின் ஸ்தாபகர் குமார் மூர்த்தி நினைவுப் பேரு­ரைக்­காக காலம் செல்வம் என்னை கன­டா­வுக்­க­ழைத்­தி­ருந்தார்.

16.08. 2003 சனி­யன்று நடை­பெற்ற கூட்­டத்­துக்கு செல்வா கன­க­நா­யகமும்  வந்­தி­ருந்தார். பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு என்னை அழைத்து வரச் சொன்­ன­தா­கக்­கூ­றிய செல்வம் மறுநாள் காலை என்னைக் கூட்டிச் சென்றார். டொறன்டோ பல்­க­லைக்­க­ழ­கத்தின் ட்ரினிட்டிக் கல்­லூ­ரியில் தான் பேரா­சி­ரி­யரின்  அலு­வ­லகம் இருந்­தது.

எங்­களை வர­வேற்று அமரச் செய்து நீண்ட நேரம் உரை­யாடிக் கொண்­டி­ருந்தார். மலை­யக இலக்­கியம் இலக்­கி­ய­வா­திகள் பற்றி கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

“தெளி­வத்­தையைப் பற்றி எனக்கே அதி­க­மாக ஒன்றும் தெரி­யாது. பத்­ம­நாப  ஐயரும் நித்­தியும் தான் இவரை  இந்தப் பேரு­ரைக்­காக அழைக்கும் படி­கூ­றி­னார்கள்” என்றார் செல்வம். மிகவும் அமை­தி­யாகக் கேட்டுக் கொண்­டி­ருந்தார் பேரா­சி­ரியர்.  அவ­ரு­டைய அடக்கம் என்னை அச்­ச­முறச் செய்­தது.

எத்­தனை பெரிய மனிதர் அவர். எத்­தனை எத்­தனை துறை­களின் விஸ்­வ­ரூபம் அது. புலம்­பெயர் இலக்­கியம் அதன் இலக்­கிய மதிப்­பீடு, மொழி­பெ­யர்ப்பு பின் காலனித்துவம், கவிதையின் மொழி பற்றிய திறனாய்வு, பழந்தமிழ் இலக்கிய ஆய்வு,  அவைகளின் மொழிபெயர்ப்பு.... என்று எத்தனை துறைகள் போதாதற்கு நூல் வெளியீடுகள்.

பென்குவின் வெளியிட்டிருந்த நீயூ ரைட்டிங்ஸ் ஆப்  ஸ்ரீலங்கா, செல்வா வெளியிட்ட லூட்ஹோங் அன் லெமண்ட் ஆகிய இரு நூல்களையும் ஒப்பிட்டு நான் வீரகேசரியில் எழுதியிருந்த விமர்சன ரீதியான அறிமுகக் கட்டுரைக்கான நன்றியையும் பேச்சுக்களுக்கிடையே கூறிக் கொண்டார்.

தேனீர் கொடுத்து உபசரித்தார். இலங்கை திரும்பு முன் ஒரு தடவை கூட்டி வரும்படி செல்வத்திடம் கூறினார். பகலுணவு கொடுக்க வேண்டுமென்றாராம். அந்த மாமலையின் அடியில் வளரும் ஒரு சின்ன தேயிலைச் செடி மட்டுமே நான்.

இவைகள் எல்லாம் இணைந்து தந்தது தான் அவரது திடீர் மரணம் பற்றிய செய்தி தந்த சுமையின் வலி. அ. முத்துலிங்கம்   குறிப்பிட்டுள்ள­தைப் போல்  ஸ்டேசன் வருவதற்கு முன்பதாகவே பாதியில் இவரை இறக்கி விட்ட பாதகச் செயல் யாருடையது?  ஸ்டேசன் வரும் வரைக்குமான அவருடைய காலி இடத்தை யார் நிரப்பக் கூடும் என்னும் இலக்கிய ஏக்கம் தரும் இன்னும் கூடிய வலி இது.