You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வீணை வாசிப்பில் சிறுவர்களும் சேர்ந்து நன்கு வாசிப்பது மகிழ்வைத் தருகிறது இந்து சமய அலுவல்கள் பணிப்பாளர் பாராட்டு


 

சங்கீதபூஷணம் திருமதி இந்திரா குமாரசிவத்தை அதிபராகக் கொண்ட ‘பிருந்தகானம்’ வீணைப்பயிலக மாணவ, மாணவிகளின்  “வீணாகானவர்ஷினி” 2017 நிகழ்வு 01.10.2017 அன்று மாலை பம்பலப்பிட்டி சரஸ்வதி  மண்டபத்தில் சிறப்பாக  நடைபெற்றது.

இந்து கலாசார  அலுவல்கள் திணைக்களத்தின்  பணிப்பாளர் அ.உமா மகேஸ்வரன்  இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகவும், கலைக்கேசரியின் ஆசிரியரும், மூத்த ஊடகவியலாளருமான  திருமதி அன்னலட்சுமி  இராஜதுரை  சிறப்புவிருந்தினராகவும் கலந்துகொண்டனர். வரவேற்புரையை பயிலக மாணவியும் இளம் சட்டத்தரணியுமான  செல்வி ரொஷானி  நிகழ்த்தினார்.

பணிப்பாளர் ஆர். உமா மகேஸ்வரன் இங்கு உரையாற்றுகையில், தொன்மையும், தெய்வீகச் சிறப்பும் கொண்டதுமான  வீணை வாத்தியத்தினை, சிறுவர்களும் பயின்று  வாசிப்பதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளதெனவும்  இளம் சமுதாயத்தினரின் எதிர்கால  மனநிறைவான  வாழ்க்கைக்கு வீணை வாத்தியக்கலை சிறப்பான பயனை அளிக்கும் எனவும், வீணை ஆசிரியை திருமதி இந்திரா குமாரசிவத்தின் பணி பாராட்டுக்குரியதெனவும்  கூறினார். சுவாமி  விபுலானந்த அடிகளாரின்  ‘யாழ்.நூல்’ பற்றியும்  அவர் இதன்போது  குறிப்பிட்டுப் பேசினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருமதி அன்னலட்சுமி இராஜதுரை உரையாற்றுகையில், வளர்ந்து வரும் மாணவர்களது வீணைக்கலை ஆர்வத்தினையும் திறனையும் பாராட்டிப் பேசியதுடன், இத் தனித்துவமான கலையின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கப்படவேண்டும் எனவும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களமும் இது விடயத்தில் ஆர்வம் காட்டின் வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.

கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு  மாணவ, மாணவிகள்  கர்நாடக  சங்கீத பாடல்கள், கீர்த்தனைகள்,  கர்நாடக சங்கீதம் சார்ந்த  திரைப்படப்பாடல்கள் சிலவற்றையும் வாசித்து ரசிகர்களை மகிழ்வித்தனர். ஆசிரியை சங்கீத பூஷணம் திருமதி இந்திரா குமாரசிவத்துக்கு பிருந்தகானம் சார்பாக திருமதி அன்னலட்சுமி இராஜதுரை பொன்னாடை போர்த்தி  வாழ்த்துப்பத்திரமும்  வழங்கி கௌரவித்ததுடன், பங்குபற்றிய பக்கவாத்தியக் கலைஞர்களான எஸ்.சுவாமிநாத சர்மா ( மிருதங்கம்)   பிரபா (மோர்சிங்) ஆகியோருக்கும், மாணவ, மாணவிகளுக்கும், ‘பிருந்தகானம்’ வீணைப்பயிலகத்தின் விருதுகளையும் வழங்கி கௌரவித்தார். நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.