You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மிருதங்க, கஞ்சிரா வித்துவான் பழனி சுப்பிரமணியப்பிள்ளை

October 01, 2014


மிருதங்கம், கஞ்சிரா என்ற இரு வாத்தியங்களிலும் எவ்வித வித்துவான் பட்டங்களும் பெறாமல் பெரும் நட்சத்திரமாக ஜொலித்து எல்லா இசை மேதைகளினதும் மனதைக் கவர்ந்து கொண்டவர் ’சுப்புடு’ என்று அழைக்கப்படும் பழனி சுப்பிரமணியப்பிள்ளை. தவில் வித்துவான் முத்தையா பிள்ளையின் மகனாக 20.04.1908 ஆம் ஆண்டு சென்னிமலை என்ற ஊரில் பிறந்த சுப்புடு மிருதங்கம் வாசிப்பில் புதுக்கோட்டை பாணியை கடைப்பிடித்து வந்தார். இவரது இளைமைக் காலம் மிக பரிதாபகரமானது.                                                                                                                                                                                                                     இவருடைய தந்தையார் இரு பெண்களை மணம் செய்தவர். இவர் மூத்த மனைவியின் மகன். மற்ற மனைவி மீதே தந்தையார் பேரன்பு கொண்டிருந்தமையால் இவரும் உடன் பிறந்தவர்களும் கவனிப்பார் அற்றே வாழ்ந்தனர். ஒரு தடவை தந்தையார் வீட்டில் இல்லாதவேளை கஞ்சிரா வித்துவான் தட்சணாமூர்த்தி பிள்ளை இவர்களது இல்லம் வந்திருந்தார். குழப்படிக்கார சிறுவன் சுப்புடு பொழுது போக்குவதற்காக திருட்டுத் தனமாக தந்தையாரின் வாத்தியத்தை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தான். இதனை கேட்டு வியந்த பிள்ளையவர்கள் சுப்புடுவின் தந்தையாரிடம் மகனுடைய விரல்கள் பேசும் திறமையையும் இயல்பாகவே அவனுக்குள்ள தாள லய நுட்ப உணர்வுகளையும் வெகு பிரமிப்போடு விளக்கி இத்துறையில் அவனை ஊக்கப்படுத்தி விடுமாறு வேண்டிக்கொண்டார்.