You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா (1911-1997)

October 01, 2014


வித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா (1911-1997) அவர்கள் நிரப்பப்பட வேண்டிய வரலாற்றுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்தவர். ஏடுகளை ஆராய்ந்து நூல்களை ஆக்கி, அச்சேற்றுதல் என்ற பெரும் மரபின் தொடர்ச்சியைப் பழுதின்றி மேற் கொண்டவர். ிமட்டக்களப்பு மான்மியம்ீஅவர் மேற்கொண்ட முயற்சியால் மேலெழுந்தது.வடக்கையும் கிழக்கையும் தமது புலமைச் செயற்பாடுகளால் இணைத்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகியவற்றை வரன்முறையாகக் கற்றதுடன் தமது சேவைக்காலத்தில் சிங்கள மொழியிலும் தேர்ச்சி பெற்றவர்.அவரது தேடல் முயற்சியினால் உருவாக்கம் பெற்ற ஆக்கங்களுள் ிஈழமும் தமிழும்ீ (கலைமகள் வெளியீடு) என்ற நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நாட்டில் வெளிவந்த நூல்களின் பட்டியல் ஒன்றின் தொகுப்பு, ஆய்வு நிலையிலும் மதிப்பீட்டு நிலையிலும் வேண்டப்படுவதாக இருந்தது.                                      தமக்கிருந்த அகன்று ஆழ்ந்த வாசிப்புத் தேடலை அடியொற்றியும் புலமையாளரின் தொடர்புகளை அடியொற்றியும் அவர் அந்தத் தொகுப்பு முயற்சியை மேற்கொண்டார்.அக்காலத்தில் ிமானிடவியல்ீ என்ற அறிவுப்புலம் விரைந்து வளர்ச்சியுறத் தொடங்கியது. தமக்குரிய ஆங்கில வாசிப்புக்களினால் பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களும் வித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா அவர்களும் மானிடவியற் கல்வி ஊட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். வித்துவான் எப்.எக்ஸ்.சி. அவர்களும் ிமட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும்ீ என்ற நூலைத் தொகுத்தார். ிமட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும்ீ பற்றிய பன்முகப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஆக்கமாக அது அமைந்தது. அதில் எழுதியவர்கள் அனைவரும் குறித்த துறைகளில் புலமை உடை யவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.எவ்.எக்ஸ்.ஸி. அவர்கள் வரலாற்றுக் கல்வியோடு வாழ்ந்தவர்.