You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இலங்கையில்த் தமிழர் பண்பாட்டுப் பதிவுகளைத் தேடிய முதலியார் குல. சபாநாதன்

October 18, 2014


பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தமிழர் வரலாற்றுப் பதிவுகளை மேற்கொண்டவர்களுள் முதலியார் குல. சபாநாதனுடைய முயற்சிகள் தனித்துவமுடையவை. அவருடைய முழுப்பெயர் குலசேகரம்பிள்ளை சபாநாதன். இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலே கல்வி கற்றவராவார். தமிழ்மொழி கல்வியின் முக்கியத்துவம்,  பண்பாட்டு அடையாளங்களைத் தேடல், வரலாற்று பதிவுகளை பாதுகாத்தல், போன்ற சமூகம் சார்பான  விழிப்புணர்வுகளுடன் செயற்பட்டவராவார். தமிழ்மொழி சார்ந்த விடயங்களை மொழிபெயர்த்து, அது தொடர்பான சிந்தனைகளையும் இற்றைக்கு அரை நூற்றாண்டுக்கு முன்னரே முன்வைத்தவர்களுள் இவரும் ஒருவராவார். சமய, கலாச்சார, நூல்களை குல. சபாநாதன் அதிகம் வெளியிட்டிருந்தார்.                                                                                                                                                                                                                                            அத்தோடு ஆரம்பக்கால இலங்கையின் இதழ்களான ‘ஸ்ரீலங்கா’, ‘வித்யா போதினி’ போன்ற இதழ்களுக்கு ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் வெளியிட்டிருந்த நூல்களுள் அதிக முக்கியத்துவம் பெறுவது, ‘யாழ்ப்பாண வைபவமாலை’ எனும் நூலாகும். இந்நூல் அனைவரினதும் பாராட்டை பெற்றமை சிறப்பம்சமாகும். அவருடைய  நூல்கள் வசன நடை, இலக்கண வழுக்கள் அற்ற செந்தமிழ் நடையாக அமைந்துள்ளமையே இதற்கு காரணமாகும். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இவருடைய சேவையை கௌரவித்து, 1947 ஆம் ஆண்டில் ‘முதலியார்’ பட்டமும், 1951 ஆம் ஆண்டு ‘முகாந்திரம்’ பட்டமும் பிரித்தானிய மன்னரால் வழங்கப்பட்டது.  மேலும் குல. சபாநாதன்  குறித்து, பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களின் கட்டுரையை படிப்பதற்கு…