You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கலைமாமணி மதுரை எம்.எஸ்.பொன்னுத்தாய்

November 21, 2014


முதல் பெண் நாதஸ்வரக் கலைஞரான, கலைமாமணி
மதுரை எம்.எஸ்.பொன்னுத்தாய்


இவ்வுலகில் ஆண், பெண் என்ற பேதங்கள் இருக்கின்ற போதிலும், புதிய படைப்புக்களிலும் சாதனைகளை நிகழ்த்துவதிலும் ஆணுக்குப் பெண் நிகரே என இசைத்திறமையின் மூலம் உலகிற்கு நிரூபித்தவரே கலைமாமணி எம்.எஸ்.பொன்னுத்தாய்.

இசை ஞானமும் கலைச்செழிப்பும் பல்வகைச் சிறப்புக்களும் பொருந்திய மதுரையில் பிறந்த பொன்னுத்தாய் எவ்வகையான இசைப்பாரம்பரியமோ, கலைச்சூழலையோ கொண்டிருந்தவர் அல்ல. இருந்த போதிலும் ஆண்களுக்கே கையாள்வதில் கடினமாகவிருந்த நாதஸ்வரத்தை இச்சிறுமி ஒன்பது வயதிலே  மூச்சை அடக்கி, சுருதி சுத்தமாகத் தாளக் கட்டுக்கேற்றவாறு கையாளத் தொடங்கினார். 

மதுரையில் சித்திரைத் திருவிழா ஒன்றிலே முதன்முதலாக தனது நாதஸ்வர இசைப் பயணத்தை ஆரம்பித்தார். அன்றே பல மாபெரும் இசை மேதைகளின் பாராட்டையும் பெற்றுக் கொண்டார். மிக வறுமைக்கு மத்தியில் வாழ்ந்த பொன்னுத்தாயின் வாழ்க்கை, 1953 ஆம் ஆண்டு அவரின் திருமணத்தின் பின்னர் செல்வச் செழிப்பாக மாற்றம் பெற்றது.

என்ன தான் அவருக்கு வசதிவாய்ப்புக்கள் பெருகினாலும் இசையில் அவருக்கிருந்த நாட்டம் குறையவில்லை.1972 ஆம் ஆண்டு அவரது கணவரின் மறைவின் பின்னர் இசை வாழ்க்கை இருள் சூழ்ந்தது. விதவைக் கோலத்துடன் நாதஸ்வரம் இசைப்பதை சமூகம் விரும்பவில்லை. எவ்வாறாயினும், 17.01.2012 அன்று அவரின் இறுதி மூச்சு வரை இசையோடு இசையாக வாழ்ந்து மறைந்தார். மேலும் மதுரை எம்.எஸ்.பொன்னுத்தாய் குறித்து,-_ பத்மா சோமகாந்தன் அவர்களின் கட்டுரையை படிப்பதற்கு....        

இக்கட்டுரையை முழுமையாக வாசிக்கவும், மேலும் சில அரிய கட்டுரைகளை வாசிக்கவும் 2014 நவம்பர் மாத கலைக்கேசரியை வாங்குங்கள். தொடர்புகளுக்கு :  ‘கலைக்கேசரி’.