You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
‘பெண்­ணியப் போராளி’ ராஜம் கிருஷ்ணன்

November 25, 2014


இன்­றைய வாழ்க்கை முறையில் பெண் புதிய பொறுப்­புக்­களை ஏற்­கிறாள். அதற்கு அவ­ளு­டைய சுமை­களை ஆணும் பகிர்ந்து கொள்­ளலாம் என்றும் பெண்ணே நினைப்­ப­தில்லை. காலம் கால­மாகப் பெண் என்­பவள் தியாகம் செய்ய வேண்­டி­யவள். சுமக்க வேண்­டி­யவள் என்ற பண்பில் ஊறி­யி­ருக்­கிறாள். குடும்பம் என்­பது ஓர் ஆணின் சுக வச­தி­க­ளுக்­காக இயங்­கு­வ­தாக நினைக்­கி­றார்கள். ஆண் குழந்­தைதான் மோட்சம் தரக் கூடி­ய­தென்ற மானோ­பா­வமும் இன்னும் மாற­வில்லை. இத­னா­லேதான் பிரச்­சி­னைகள் என ஒரு பாத்­திரம் வாயி­லா­கவும் இலக்­கியம் படைப்­பவர் சாமா­னிய மக்­களை விட்டு விலகி நிற்கும் போது அங்கு கலை மலர்­வ­தற்­கில்லை.

நாவல் இன்­றைய நெருக்­கடி மிகுந்த சமூகச் சூழ்­நி­லையில் மக்­களின் சிந்­தையை ஆரோக்­கி­ய­மான நிலையில் ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­களில் நம்­பிக்கை கொள்ளச் செய்யும் ஓர் இனிய சாத­ன­மாக அமைய வேண்டும் என்றும் வாழ்வின் போக்­கு­க­ளையும் சமூகச் சார்­பு­க­ளையும் கணித்து நிகழ்­காலப் பிரச்­சி­னை­களைப் பற்றிச் சிந்­திப்­பதும் ஆக்­க­பூர்­வ­மான முடி­வு­களை ஆராய்­வ­துமே எனது இலக்­கிய நோக்கம் என்றும் சமு­தாய மேம்­பாட்டுச் சிந்­த­னை­க­ளிலே குறிப்­பாகப் பெண்­ணி­னத்தின் சிக்­கல்­களை, தாழ்­நி­லையின் இருப்­பினை வெளிப்­ப­டுத்திச் சம­நி­லையை ஏற்­ப­டுத்தும் சமு­தா­யத்தை வளர்த்­தெ­டுப்­ப­தற்கே தன் பேனா முனையை தன் வாழ்­நா­ளெல்லாம் பயன்­ப­டுத்­திய பெண்­ணியப் போராளி இன்று நம்­மோடு இல்லை. இயற்கை அவ­ரைத்­தன்­னோடு இணைத்துக் கொண்­டது என எண்ணும் போது நமது நரம்­பு­க­ளெல்லாம் செய­லி­ழந்து சோர்­வுறும் தன்­மையை எப்­படி வெளிப்­ப­டுத்­து­வது.

இவ­ரது மறைவு இலக்­கிய உல­கிற்குப் பேரி­ழப்பு மட்­டு­மல்ல பெண் இனத்­திற்கே கற்­பனை பண்ண முடி­யாத மாபெரும் நஷ்டம் என்­பதைப் பதிவு செய்தே ஆக வேண்டும்.

தமிழ் நாட்டில் ஈடி­ணை­யற்ற எழுத்­தா­ள­ரான ராஜம் கிருஷ்ணன் திருச்சி மாவட்­டத்­திலே முசிறி என்ற இடத்தில் 1925 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பிறந்தார். சிறு­மி­யா­யி­ருக்கும் போது சுறு­சு­றுப்பும் எதையும் தோண்டித் தோண்டிப் பார்க்க வேண்­டு­மென்ற விடுப்­பூக்­கமும் மிக்­க­வ­ராக இருந்தார். அவ­ரு­டைய குழப்­ப­டி­களை அவ­தா­னித்த தந்­தையார் பல்­வேறு நூல்­க­ளையும் தெரிவு செய்து எடுத்துப் படிக்கும் படி கொடுத்தார். அவர் ஊட்­டிய ஆர்­வத்தால் பல­வ­கை­யான நூல்­களை வாசித்துப் பழ­கி­ய­தோடு தமிழ், வட­மொழி, ஆங்­கிலம், மலை­யாளம் எனப் பல்­வேறு மொழி­க­ளையும் கற்றும் தேறினார் ராஜம் கிருஷ்ணன் .

வாசிப்பு, அவ­தா­னிப்பு மூலம் பெற்­றுக்­கொண்ட அறிவு சிந்­தனை உணர்­வு­களைத் தட்­டி­யெ­ழுப்பத் தானும் சில கட்­டு­ரைகள், கதை­களை எழு­தத்­து­ணிந்தார். அவை வெளி­யா­னதும் பலர் இவரைப் பாராட்­டினர். எழுத்­தா­ளர்­க­ளுக்கு, கலை­ஞர்­க­ளுக்குப் பாராட்­டுக்­களே பெரும் ஊக்­கமும் உற்­சா­கமும் அளிப்­பவை. பல­ரது புகழ் மாலைகள் இவரை மகிழ்ச்­சிப்­ப­டுத்த இவர் தனது கருத்­துக்­களை மென்­மேலும் கூர்­மைப்­ப­டுத்திக் கொள்ளத் தொடங்­கினார். சமு­தா­யத்தில் நில­வு­கின்ற மூடக்­கொள்­கைகள் குடும்பப் பெண்கள் வித­வைகள் கன்­னிப்­பெண்கள் என்போர் படும் அவஸ்­தைகள் இவர் மனதைக் கறை­யா­னா­கவே அரித்­துக்­கொண்­டி­ருந்­தது.

இவர் பேனாவைத் தூக்கும் முன்பே வை.மு. கோதை­நா­யகி அம்மாள் மூவலூர் இரா­மா­மிர்தத் தம்­மையார் கிருபை சத்­தி­ய­நாதன் குகப்­பி­ரியை டி.பி. இரா­ஜ­லெட்­சுமி போன்றோர் எழு­தி­யி­ருந்­தாலும் இவரைப் போலக் குடும்­பங்­களின் நிலையை நுட்­ப­மா­கவும் பெண்­களின் பிரச்­சி­னை­களைத் துல்­லி­ய­மா­கவும் தமது படைப்­பு­களில் உள்­வாங்கிக் கொண்­டார்­களோ என்றால் இல்லை.

அல்­லா­மலும் அவர்­க­ளது நாவல்கள் சமு­தா­யத்தில் விழிப்­பு­ணர்­வையோ எழுச்­சி­யையோ ஏற்­ப­டுத்தும் என்று கூறு­வதில் அர்த்­த­மே­யில்லை. பிற்­கா­லத்­தி­லேயே பெண்­களின் பிரச்­சி­னை­களும் உரி­மை­களும் போராட்­டங்­களும் உலக நாடு­களால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு ஐ.நா. சபை 1975 லிருந்து தொடர்ந்து பத்து ஆண்­டுகள் மகளிர் ஆண்­டாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது. இதன் பின்­னரே அனைத்­து­லக நாடு­க­ளிலும் பெண்­களின் பிரச்­சி­னைகள் அச­மத்­துவ நிலை போன்­ற­ன­வற்­றோடு அவற்­றிற்­கான தீர்­வு­களும் ஆரா­யப்­பட்­டன. இந்த நிலையில் தான் சகல கலை­களும் படைப்­புக்­களும் பெண்கள் பற்­றிய விட­யங்­களைக் கூர்மைப்­ப­டுத்­தின.

இது சமு­தாய மேம்­பாட்­டிற்­கான ஒரு படி­மு­றை­யாகும். இத்­த­கைய சிந்­த­னையில் மூழ்கித் திளைத்த ராஜம் கிருஷ்ணன் அவர்கள் தனது பேனாவை முற்று முழு­தாக பெண்கள் மேம்­பாடு தொடர்­பான மாற்­றத்­திற்­கா­கவே அர்ப்­ப­ணித்தார். என­வேதான் இவ­ரு­டைய படைப்­புக்கள் அத்­த­னை­யுமே அறி­வு­பூர்­வ­மா­ன­தா­கவும் மனி­த­நே­யத்­து­டனும் சமூகப் பொறுப்­பு­டனும் புரட்­சி­க­ர­மா­ன­தா­கவும் மிகத் துல்­லி­ய­மாகத் தீர்வைச் சுட்­டு­வ­ன­வா­கவும் அமைந்­துள்­ளன.

கவிதை, கதை, கட்­டுரை, நாவல், நாடகம் ஆராய்ச்சிக் கட்­டு­ரைகள் எனப் படைப்­பு­லகின் பல்­வேறு துறை­க­ளிலும் உலா வந்து கொடி நாட்­டிய ராஜம் கிருஷ்ணன் ஏரா­ள­மான பரி­சு­க­ளையும் பெற்­றுள்ளார்.

1952 இல் அகில உலகச் சிறு­கதைப் போட்­டியில் ஊசியும் உணர்வும் என்ற சிறு­க­தைக்கும் 1953 இல் பெண்­கரல் என்ற நாவ­லுக்கும் (கலை­மகள் நாரா­ய­ண­சாமி ஐயர் நாவல் போட்­டி­களில்)

1958 இல் மலர்கள் என்ற நாவ­லுக்கும் (ஆனந்­த­வி­கடன் நடத்­திய நாவல் போட்டி)

1973 ஆம் ஆண்டு சாகித்­திய அக்­க­டமி விருது. ‘வேருக்கு நீர்’ என்ற நாவ­லுக்­கா­கவும்

1975 இல் கோவா விடு­தலைப் போராட்­டத்தைச் சித்­த­ரிக்கும் ‘வளைக்­கரம்’ என்ற நாவ­லுக்கும் (சோவியத் நாடு நேரு பரிசு)

1979 இல் ‘கரிப்பு மணிகள்’ என்ற நாவ­லுக்கும் (இலக்­கியச் சிந்­தனைப் பரிசு)

1982 இல் ‘சேற்றில் மனி­தர்கள்’ என்ற நாவ­லுக்கும் (இலக்­கிய சிந்­த­னையும் பார­தீய பாஷா­ப­ரி­ஷத்தும் இணைந்து)

1987 இல் ‘சுழலில் மிதக்கும் தீபங்கள்’ (தமிழ் நாடு அரசு)

இப்­படி எத்­த­னையோ அற்­பு­த­மான படைப்­பு­களை வெளிக்­கொ­ணர்ந்த ராஜம் அம்­மையார் அவர் தனது பன்­மொழி ஆற்­றலை நன்கு பயன்­ப­டுத்தி இந்­தியப் பெண்கள் தொடர்­பாகக் காலந்­தோறும் பெண் – காலந்­தோறும் பெண்மை என அரிய ஆராய்ச்சி கட்­டு­ரைகள் அமைந்த நூல்­க­ளையும் வெகு­தீ­வி­ர­மாக ஆராய்ந்து தந்­துள்ளார்.

இவ­ரு­டைய எழுத்­துக்­களில் முக்­கி­ய­மாகக் குறிப்­பிட வேண்­டிய விஷயம் எழுத்­தா­ள­ரென்றால் உலகின் வெளியே நடப்­ப­தென்­ன­வெனத் தெரி­யாது குளி­ரூட்­டிய அடைக்­கப்­பட்ட அறையில் உட்­கார்ந்து கொண்டு கற்­பனைக் குதி­ரையைப் பாய­விட்டு எழு­து­பவர் எனச் சாதா­ர­ண­மாகப் பலரும் குறிப்­பி­டு­வ­துண்டு. ஆனால் அம்­மையார் வங்­காளம், சோவியத் யூனியன் எனப் பல நாடு­க­ளுக்கும் பய­ணித்­தவர். அது மட்­டு­மன்றி தன் நாவல்­களை அந்­தந்த இடங்­க­ளுக்குச் சென்று அந்­தந்த மண்ணில் வாழும் மக்­க­ளுடன் பேசிப் பழகி வாழ்­வது அவர்­க­ளு­டைய மொழி, வாழ்க்கைப் போக்­குகள், பிரச்­சி­னைகள் பற்­றி­யெல்லாம் உற்றுப் பார்த்து அவ­தா­னித்தே எழுத்தில் சமர்ப்­பித்­துள்­ளா­ரென்றால் அவ­ரு­டைய ஆளு­மையை என்­ன­வென்­பது?

இத்­த­கைய பெரு­மாட்­டியைச் சென்­னை­யிலே 1963 களில் மவுண்ட் ரோடில் ராஜாஜி மண்­ட­பத்தில் இடம்­பெற்ற அகில உலக எழுத்­தாளர் மாநாட்­டிற்கு இலங்கை முற்­போக்கு எழுத்­தாளர் சங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளாக நானும் எனது துணை­வரும் சென்­றி­ருந்த போது சந்­தித்தோம். அம்­மா­நாட்­டிற்கு அம்­மையாருடன் எம்.எஸ். கமலா கோமகள், கம­லா­வி­ருத்­தா­சலம், புது­மைப்­பித்­தனின் மனை­வியார், மகள் தின­கரி எனப் பல பெண்­களும் வருகை தந்­தி­ருந்­தனர். அப்­போது இவர்­களைச் சந்­திக்கக் கிடைத்­த­துடன் 1982 இல் இலங்கை மு.எ.ச. பாரதி நூற்­றாண்டு விழாவை வெகு விம­ரி­சை­யாகக் கொண்­டா­டிய போது அவ்­வி­ழாவில் பங்­கேற்­ப­தற்­காக ராஜம் கிருஷ்ணன் அம்­மையார் சிதம்­பர ரகு­நா­தனை பேரா. திரு. திரு­மதி ராஜம்­கி­ருஷ்ணன் அம்­மையார் – சிதம்­பர ரகு­நாதன் பேரா திரு திரு­மதி இரா­ம­கி­ருஷ்ணன் ஆகியோர் வருகை தந்­தி­ருந்­தனர். இவர்கள் யாபேரும் எமது இல்லம் வந்து விருந்­துண்டு மகிழ்ந்த காட்சி இன்றும் என் மனதை விட்டு நீங்கவில்லை.

திருமதி. ராஜம் அம்மையாருடைய தலைமையில் பெண்களுக்கான கலை இலக்கிய மன்றம் ஒன்றினையும் அப்போது ஸ்தாபித்தோம். 83 கலவரத்தோடு அவையெல்லாமே கலைந்து விட்டன.

பெண்ணுக்கு விடுதலை நீரில்லை யென்றால் பின் னிந்த உலகிலே வாழ்க்கையில்லை என்று கூறி வைத்த பாரதியின் நூற்றாண்டு விழாவிற்கு வருகை தந்து உரையாற்றிச் சிறப்பித்த அம்மையார் புரட்சிக் கவி பாரதியின் கருத்துக்கு வலுவூட்டிச் செயற்பட்ட பெண்ணியப் போராளி என்பதை எவருமே மறுக்க முடியாது.

கணவனை இழந்த பின் குழந்தை பேறற்ற இவர், தனிமையில் நீண்ட காலம் சுகவீனமாக இருந்து கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி இயற்கை எய்திய வெற்றிடத்தை இனி யாராலுமே நிரப்ப முடியாது என்பது திண்ணம்.