You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஊத்துக்காட்டு வரகவி வேங்கட சுப்பையர்

February 25, 2015.


கர்நாடக இசையை இறைவன் மீது கொள்ளும் பக்தியை வெளிப்படுத்தும் சாதனமாக 16 , 17 நூற்றாண்டுகளின் முன்னரும் பின்னரும் இசை வல்லார் பயன்படுத்தினார்.

ஆகையினாலன்றோ கர்நாடக இசையில் ஊற்றித்திளைத்த மகான்கள் இசை கனியும் இனிய பாடல்களைப் பாடிப் பரவிக் களித்தனர்.

அத்தகையோருள் வரகவியாகக் கர்நாடகக் இசையுலகம் போற்றும் பெரும் கவியாக விளங்கியவரே ஊத்துக்காடு வரகவி வேங்கட சுப்பையர் அவர்கள் . பரம்பரையாக அறிவாற்றல் , நல்லொழுக்கம்,அஞ்சாமை , நேர்மை என்ற சிறப்பான பண்புகளால் தஞ்சை மன்னரின் மதிப்பையும் பேரன்பையும்  பெற்றிருந்த  இராமசந்திர வாதுலர் என்பரின் பேரரே வரகவி வேங்கட சுப்பையராவர்.

இவருக்கு அறச்செயல்களோடு இசையிலும் மிகுந்த ஈடுபாடு இருந்தது.

சுப்பையாவுக்குத் தான் மென்மேலும் இசையை பயில வேண்டுமென்ற ஆவல் பெருகவே தாயாரிடம் சென்று நிலமையை கூற தாம் பரம்பரையாக  வணங்கி வந்த கண்ண பிரானின் திருவுருவம் விளங்கும் வீட்டு மாடத்தில் அமர்ந்து உள்ள முருகன் மீது பாடிப் பயிலும் படி தாயார் ஊக்குவித்தார்.

கண்ணன் கருணையிலேயே மன மொருமித்த சிந்தையராக லயித்துப் பாடுவதையே பொழுதாகச் செலுத்தலானார். கண்ணபிரனையே தன் ஆசானாக வரித்து  தெய்வத்தன்மை தோய்ந்த இசையை மெருகேற்றி பாடல்களை ஆக்கும் திறனைக் கொண்டார்.

சில நாட்களின் பின்னர் சுப்பையாவின் தாயார் இறக்கவே தாயன்பும் மறந்துவிட உலகியலிருந்து விடுபட்டு துறவியாக இறைவன் மீது பாடுவதே தொழிலாக கொண்டார். பலரும் இவரது இசையை கேட்க ஆவல் கொண்டுள்ள போதும் தான் துறவி , தனியன் கண்ணன் திருவருளே போதுமானது.

இறை இசை வழிபாடே எனது வாழ்வு எனக் கூறி விடைபெற்றுச்சென்றார். மேலும் ஊத்துக்காட்டு வரகவி வேங்கட சுப்பையர்  குறித்து -_ பத்மா சோமகாந்தன் அவர்களின் கட்டுரையை படிப்பதற்கு...........

இக்கட்டுரையை முழுமையாக வாசிக்கவும், மேலும் சில அரிய கட்டுரைகளை வாசிக்கவும் பெப்ரவரி 2015 மாத கலைக்கேசரியை வாங்குங்கள். தொடர்புகளுக்கு : ‘கலைக்கேசரி, Contact : +11-7322700/746 / kalaikesari@expressnewspapers.lk