You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உயர் கல்வியை சிறப்பித்த பேராசிரியர் வி.சிவசாமி...

February 27, 2015.


பன்முக அறிவு பரிமாணங்களோடு உயர் கல்வியை சிறப்பித்த பேராசிரியர்                                                            வி.சிவசாமி...
பன்முக அறிவுப் புலங்களில் ஆழ்ந்து தடம் பதித்து அத்துறைகளில் ஆய்வுகளையும் விரிவுரைகளையும் நிகழ்த்திய புலமையாளர் பேராசிரியர் வி.சிவசாமி (1933 – 2014) இலங்கைப் பல்கலைக்கழகச் சூழலில் பன்முகப் புலமையாளர் ஒரு சிலரே இருந்துள்ளனர்.

அறிவுத் துறைகளிலே தடம் பதித்தல் , அறிவைச் சமூக மேம்பாட்டுக்குப் பயன்படுத்தல் முதலியவை யாழ்ப்பாண வளாகத்தின் தொடக்க காலத் தலைவர்  பேராசிரியர் க. கைலாசபதியின்  முன்னெடுப்புகளாக அமைந்தன.

அத்தகைய கல்விச் சிந்தனை கூடத்துடன் இணைந்து தொழிற்பட்ட புலமையார்  பேராசிரியர் வி.சிவசாமி. வடமொழி , தமிழ் , வரலாறு , தொல் பொருளியல், சாசனவியல் , இந்து நாகரிகம் ,நுண்கலை முதலாம் துறைகளில் புலமைக் கொண்ட பேராசிரியர் அத்துறைகளில் விரிவுரைகளை ஆற்றியும்  ஆய்வுகளை மேற்கொண்டும் வந்தார்.

தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளாத அடக்கமுள்ள புலமையாளராக வாழ்ந்தார். அவருக்குரிய புலமைப்பலம் மரபு வழி மருத்துவக் கல்வி , சோதிடக் கல்வி , முதலியவற்றுடன் தொடர்பட்டு மேலெழுந்தது. பரத நாட்டியக் கலையின் ஈழத்தவர் பங்களிப்பை ஆவணப்படுத்தியமை அவர் மேற்கொண்ட ஒரு முக்கிய செயற்பாட்டாகக் கருத தக்கது.

பிரம்மசாரியாகவும் முழுநேரக் கல்விலும் ஈடுபட்ட அவருக்கு ஏற்பட்ட முக்கிய தாக்கம் தமது உழைப்பின் பெரும் பகுதியை செய்து அவர் வாங்கி வைத்திருந்த  பெருந்தொகையான நூல்களும் தொன்மையான ஏட்டுச் சுவடிகளும் இராணுவ நடவடிக்கையால் அழிந்து போயின.

இதனை எண்ணி அவர் துன்பப்பட்டதும் உண்டு . அவரின் மணி விழாவுக்கு நண்பர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து ‘’அபிக்ஞான மாலா ‘’ என்ற ஒர் ஆய்வு தொகுதியை வெளியிட்டனர் . ‘’ பன்முக அறிவு பரிமாணங்ககோடு உயர் கல்வியை சிறப்பித்த பேராசிரியர் வி .சிவசாமி ‘’ குறித்து பேராசிரியர்  சபா . ஜெயராசா அவர்களின் கட்டுரையை படிப்பதற்கு ………….....       

இக்கட்டுரையை முழுமையாக வாசிக்கவும், மேலும் சில அரிய கட்டுரைகளை வாசிக்கவும் பெப்ரவரி 2015 மாத கலைக்கேசரியை வாங்குங்கள். தொடர்புகளுக்கு : ‘கலைக்கேசரி, Contact : +11-7322700/746 / kalaikesari@expressnewspapers.lk