You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சிவராத்திரி தினத்தில் நான்கு சிவ ஆலயங்களில் அரங்கேரிய ஒரே நடனம் : நடன குழுவினரின் சாதனை

2019-06-0


சிவன் ராத்திரிதினத்தில் நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் கலைநிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டு சிவ அடியார்களை பக்திபரவசத்தில் ஆழ்த்தியிருந்தன. 


இதே தினத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இலங்கையில் பிரசித்திப்பெற்ற நான்கு கோவில்களில் ஒரே நடன குழுவினர் சிவனுக்காக நடனமாடி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். 


சிறி பரதக்ஸரா பரதநாட்டியம் நாட்டிய நிறுவனத்தின்  ஆசிரியை துர்ஷானி முத்தையா அவர்களின் மாணவிகள் ஒரே இரவில் நான்கு ஆலயங்களில்  நடனத்தை அரங்கேற்றி  சிவனை ஆராதித்துள்ளனர்.  சிறி முத்து விநாயகர் சவாமி கோவில்,  சிறி கைலேஸ்வரம் (தீவு கோவில்) , சிறி பொன்னம்பலவாணேஸ்வரம் கோவில், ஜிந்துப்பிட்டி சிறி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகியவற்றில் ஒரே இரவில் 6.00 மணி 10.00 மணி, 11.00 மணி. நள்ளிரவு 1.00 ஆகிய குறுகிய நேர இடைவெளியில் இந்த நடன அரங்கேற்றப்பட்டள்ளது.