You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
இலக்கிய ரசனையோடு மருத்துவ அறிவியலை எழுதும் வைத்தியர் எம்.கே.முருகானந்தன்

June 03, 2015


மருத்­து­வரும் எழுத்­தா­ள­ரு­மான வைத்­தியக் கலா­நிதி எம்.கே.முரு­கா­னந்தன் தனது இலக்­கிய ஈடு­பா­டுகள் கார­ண­மா­கவும் மருத்­துவ அறி­வியல் கட்டு­ரைகள் ஊடா­கவும் நன்கு அறி­யப்­ப­டு­பவர்.

தவி­ரவும் ‘ஹாய் நலமா?’ எனும் தனது புளொக்கின் ஊடாக பிர­பல பதி­வ­ரா­கவும் அங்­கீ­காரம் பெற்­றவர்.

இது­வரை 13 நூல்­களை எழு­தி­யுள்ள வைத்­தியர் எம்.கே.முரு­கா­னந்­தனின் ‘மலைப்­பூட்டும் மருத்­துவ அறி­வி­யலை அறிந்­து­கொள்வோம்’ எனும் நூலின் வெளி­யீட்டு விழா கடந்த ஞாயிறு கொழும்பு – 06 பெண்கள் கல்வி ஆய்வு மையத்தில் நடை­பெற்­றது.

இலங்கை முற்­போக்கு கலை இலக்­கிய மன்­றத்தின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற இவ்­வெ­ளி­யீட்டு விழா­வுக்கு வவு­னியா பொது மருத்­துவ மனையின் மன­நல மருத்­துவர் சி.சிவதாஸ் தலைமை வகித்தார்.

நூலின் வெளி­யீட்­டு­ரை­யையும் கருத்­து­ரை­யையும் கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பேரா­சி­ரியர் செ.யோக­ராசா வழங்­கினார். இது ஒரு மருத்­துவ அறி­வியல் நூலா­யினும் கூட ஒரு இலக்­கி­யக்­கா­ர­னா­கவே  வைத்­தியர் எம்.கே.முரு­கா­னந்­த­னின் இந்த நூல் பற்­றிய எனது கருத்­து­ரையை வழங்­கலாம் என நினைக்­கிறேன்.

காரணம் எம்.கே.முரு­கா­னந்தன் ஓர் இலக்­கி­யக்­கா­ரரும் கூட. விமர்­ச­னத்­து­றை­யிலும் ஈடு­ப­டு­பவர். இலங்­கையில் வைத்­தியர் முரு­கா­னந்­தன், தி.ஞான­சே­கரன் போன்ற பல வைத்­தி­யர்கள் இலக்­கி­யத்­து­றையில் ஈடு­பாடு காட்டி எழுத்­தா­ளர்­க­ளாக வலம் வரு­கின்­றனர்.

இதில் எம்.கே.முரு­கா­னந்தன் சற்று வித்­தி­யா­ச­மா­னவர் இலக்­கிய புனைவு, விமர்­சனம் என்­ப­தற்கு அப்பால் தனது தொழில் சார்ந்து அனு­ப­வங்­க­ளையும் தான் வாசிக்கும் அறி­வி­ய­லையும் கட்­டு­ரை­க­ளாக்கி பத்­தி­ரி­கை­க­ளிலும் சஞ்­சி­கை­க­ளிலும் எழுதி வரு­பவர். இணைய வெளியில் அவ்­வப்­போது அதனை பதிவு செய்தும் வரு­பவர்.

இவ்­வாறு எழு­தும்­போது மருத்­துவ அறி­வி­யலை மருத்­துவ மொழி­யி­லேயே இறுக்­க­மாக எழு­தாது இலக்­கிய ரச­னை­யோடு வாச­கனை சென்­ற­டையும் வண்ணம் யாரையும் வாசிக்கத் தூண்டும் தலைப்­புக்­க­ளோடு எழுதி வரு­பவர். தமிழில் மருத்­துவ அறி­வியல் சார்ந்த கட்­டு­ரைகள், நூல்கள் அரி­தாக உள்ள நிலையில் வைத்­தியர் எம்.கே.முரு­கா­னந்தன் இந்த எழுத்­துப்­ப­ணி யில் ஈடு­பாடு காட்­டி­வ­ரு­வதும் இவ­ரது நேர­மு­கா­மைத்­து­வமும்  மிகவும் போற்­று­தற்கு உரி­யது என தலை­மை­யு­ரை­யிலே பேரா­சி­ரியர் செ.யோக­ராசா குறிப்­பிட்டார்.

நூலின் முதற்­பி­ர­தியை நூலா­சி­ரியர், மூத்த எழுத்­தாளர் நீர்வை பொன்­னையனுக்கு வழங்­கி­வைத்தார். 

தொடர்ந்து கருத்­துரை வழங்­கிய பிர­பல விஞ்­ஞான ஆசி­ரி­ய­ரான கே.கே.உத­ய­குமார், இந்த நூலின் தலைப்பு இன்னும் சுருக்­க­மா­கி­யி­ருக்­கலாம். ‘மலைப்­பூட்டும் மருத்­துவ அறி­வியல்’ என்­ப­து­கூட போது­மா­ன­தாக இருந்­தி­ருக்கும்.

அதே­போல இந்த நூலின் அட்­டைப்­படம் குழப்­ப­க­ர­மாக நவீ­ன­மல்­லாத வகையில் அமைந்­தி­ருப்­ப­த­னையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது. நூலில் உள்­ள­டங்­கி­யுள்ள கட்­டு­ரைகள் வெவ்வேறு காலப்­ப­கு­தியில் நூலா­சி­ரி­யரால் ‘சம­காலம்’ இத­ழுக்கு எழு­தப்­பட்­டவை இங்கு தொகுப்­பாக்­க­ப்பட்­டுள்­ளது.

தவி­ரவும் இன்­னு­மொரு தொகுப்பு வெளி­யிடும் அள­வுக்கு அவ­ரிடம் கட்­டு­ரைகள் கைவசம் இருக்கும் என நினைக்­கிறேன். இந்த நூலில் அடங்­கி­யுள்ள 18 கட்­டு­ரைகள் வெவ்வேறு மருத்­துவ அறி­வியல் விட­யங்­களை அலசி ஆராய்­கின்­றன.  

தனது வாசிப்பு தேடல் அனு­ப­வங்­களை ரச­னை­மிக்க எழுத்து நடையில் எழு­து­வது இவ­ரது சிறப்பு. இந்த நூலில் கூட ஈ.சிகரெட், சுண்­டெலி பற்­றிய கட்­டுரை, புற்­றுநோய் பற்­றிய கட்­டுரை, பாலியல் குற்­ற­வா­ளிகள் மறைந்த சங்­க­திகள் போன்ற கட்­டு­ரைகள் மிகவும் புதிய விட­யங்­களை தமிழ் வாச­கர்­க­ளுக்கு தர­வல்­லன.

குறிப்­பாக மாண­வர்கள் வாசித்து அறிந்து கொள்­ள­வேண்­டிய அரிய தக­வல்­களை இவர் தமிழில் எழு­து­வது முக்­கி­ய­மா­னது என தெரி­வித்தார்.

    இன்­னு­மொரு கருத்­துரை வழங்­கு­வ­தற்­காக அழைக்­கப்­பட்­டி­ருந்த மூத்த எழுத்­தாளர் மு.பொன்­னம்­பலம் அவர்­களின் மக­னான கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் வைத்­தியர் பொ.மனோ­கரன் தவிர்க்க முடி­யாத கார­ணத்தால் வர முடி­யாத நிலையில் அவ­ரது கருத்­துரை கட்­டு­ரை­யாக வைத்­தியர் எழில் முரு­கா­னந்தன் பிருந்தனால் வாசிக்­கப்­பட்­டது. 

அந்த கட்­டு­ரையில் ‘புற்­றுநோய் ஒரு வியாதி மட்டும் தானா..?, மற்றும் மர­ணப்­ப­டுக்­கையின் தரி­ச­னங்கள்.. ஆகிய கட்­டு­ரைகள் பற்றி சற்று விரி­வாக ஆரா­யப்­பட்­டி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.

அதே­நேரம் மருத்­துவ துறை­சார்ந்த விரி­வான சில விட­யங்­களை எதிர்­பார்ப்­போரின் தேவை­க­ளுக்கு சில வேளை இந்த நூல் ஏமாற்­ற­ம­ளிக்­கலாம். இச்­சி­றிய நூலில் அவற்­றைக்­கொண்­டு­வருவது சிரமம்.

ஆனால், மருத்­துவ அறி­வி­யலை சிர­ம­மில்­லாமல் எல்­லோரும் புரிந்­து­கொள்­ளக்­கூ­டிய வகையில் மிக அழ­காக சிறிய கட்­டு­ரை­க­ளாக தந்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது என குறிப்­பி­டப்­பட்­டது.

நூலா­சி­ரியர் எம்,கே.முரு­கா­னந்தன் ஏற்­புரை வழங்­கினார். ஒரு மன­நல மருத்­து­வ­ரா­கவும் விமர்­ச­க­ரா­கவும் புகைப்­படக் கலை­ஞ­ரா­கவும் புகழ்­பெற்ற வைத்­தியர் சி.சிவ­தாசன் ஒவ்­வொரு உரை­க்கு இடை­யேயும் தனது கருத்­துக்­க­ளையும் சுவை­பட பதிவுசெய்து தலை­மை­யேற்று நிகழ்ச்­சி­களை தொகுத்­த­ளித்தார்.

வாசிப்பு பழக்கம் பற்றி குறிப்­பிட்ட வைத்­தியர் சி.சிவ­தாசன் தான் தன்­னு­டைய வீட்­டிலும் பணி செய்யும் இடத்­திலும் வாசிப்­ப­தற்­கான வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்து சிறு ஆய்­வினை மேற்­கொண்டு, ஒரு­வாரம் கழித்து புத்­த­கத்தில் எத்தனை வீதம் வாசித்திருக்கிறீர்கள் எனக் கேட்ட போது தனது பிள்ளைகள் கூட 20 வீதம் - 30 வீதம் என பதிலளிக்கையில் தனது வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் கடமையாற்றும் தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழராகிவிட்ட பெண் 100 வீதம் என பதிலளித்தாராம்.

ஆச்சரியமடைந்த வைத்தியர் எப்படி சீக்கிரமாக உம்மால் 100 வீதம் வாசித்து முடிக்க முடிந்தது எனக் கேட்டபோது, தனது வீட்டில் தொலைக்காட்சி வசதி இல்லாததனால் தான் அதிகம் வாசிப்பதாக அந்தப் பெண் கூறியதாக வைத்தியர் எடுத்துக்கூறியது சுவாரஷ்யமான உண்மையாகின்றது. நவீன தொழில்நுட்பசவால்களுக்கேற்ப எழுத்தாளர்களும் மாறவேண்டும்!