You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இசை மேதை மகாராஜபுரம் சந்தானம்

july 22 2015


‘சங்கீத பூபதி’ மகாராஜபுரம் விஸ்வநாதர் ஐயர் அவர் மகன் சங்கீத வித்துவான்  மகாராஜபுரம் சந்தானம் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரே முதன்முதலாகச் ‘சங்கீத கலாநிதி’ பட்டத்தைப் பெற்ற பெருமையைக் கொண்டவர்கள்.

இசை என்ற இந்த இனிய கலையை மக்கள் முன்னெடுத்து இசைக்க புகழ்பூத்த பக்க வாத்தியக்காரர்களோடுதான்  கச்சேரியை நிகழ்த்த வேண்டும்.

இல்லாவிடில் தனக்கோ தன் இசைக்கோ மவுசு குறைந்துவிடும் என்ற எண்ணம் இவரிடம் இல்லை.சுமாராக  இணைந்து வாசிக்கக்கூடிய எந்த வாத்தியக்காரரோடும் இசைந்து நிகழ்வுகளை முன்னெடுப்பார்.

இத்தகைய பரந்த நோக்கத்தினால் வளர்ந்து வரும் இளம் பக்க வாத்தியக் கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்களையும் துணிச்சலையும் அனுபவங்களையும் அளிக்கும் பண்பு இவரது தனித்துவம் எனலாம்.

இவர் இசைப் புலமை மிக்கவராக மட்டுமின்றி நடிப்புத்திறமையும் மேடைக்கேற்ற தோற்றப் பொழிவும் மிக்கவர் என்பதால் ‘கல்யாணி’ , ‘வள்ளி திருமணம்’ , ‘மெய் கண்டார்’ ஆகிய நாடகங்களில் முக்கிய பாத்திரங்களை ஏற்றுத் தன் நடிப்புத் திறமையை உறுதி செய்துள்ளார்.

சாரீர வளமும் சாகித்தியத் தெளிவும் சுகபாவ இனிமையும் நிறைந்த தேன் மாரியான இசைக் கச்சேரியில் பங்கு கொண்டு விட்டு  கும்பகோணத்திலிருந்து ஊர்நோக்கி 1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் விழுப்புரம் அருகே விபத்தில் சிக்கி மரணமானார் என்ற செய்தி இசையுலகில் மட்டுமல்ல சாதாரண மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வையும் அளவிறந்த துயரையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ‘’ இசை மேதை மகாராஜபுரம் சந்தானம்’’ குறித்து பத்மா சோமகாந்தன் அவர்களின் கட்டுரையை படிக்க……

இக்கட்டுரையை முழுமையாக வாசிக்கவும், மேலும் சில அரிய கட்டுரைகளை வாசிக்கவும் 2015 ஜுலை மாத கலைக்கேசரியை வாங்குங்கள். தொடர்புகளுக்கு :  ‘கலைக்கேசரி' .

 Contact : +11-7322700/788 / kalaikesari@expressnewspapers.lk