You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வில்லிசை விற்பன்னர் : உடப்பூர் பெரி . சோமாஸ்கந்தர்

October 01, 2015





இலங்கை புத்தளம் மாவட்டத்தின் வடமேற்கரையிலுள்ள முந்தல் என்ற கடல் நீர் ஏரியின் அருகேயுள்ள கிராமமே உடப்பூர் ஆகும்.



இக்கிராமத்தின் பெருமையை ஈழத்தின் பட்டி தொட்டி எங்கணும் மட்டுமன்றி , தமிழ்நாடு , சிங்கப்பூர் , மலேசியா என அயல்நாடுகளில் எல்லாம் தமது வில்லிசை, சொற்பொழிவு, நாடகம் , நாட்டியம் , பாட்டு , நெறியாள்கை என்ற கவித்துவத்தால் அறியச் செய்த பெருமை உடப்பூரானான வில்லிசை விற்பன்னர் பெரி .சோமாஸ்கந்தருக்கே உரித்தான சிறப்பாகும்.

இந்த வில்லிசை விற்பன்னர் இறை பக்தியும் சிறந்த ஒழுக்கமும் அன்பும் பண்பும் அடக்கமும் கொண்டவர்.

மொழிப் பற்றும் சமூக நோக்கும் கொண்ட கவிஞர் , பாடகர் , பட்டிமன்ற நடுவர் , ஓதுவார் இசையமைப்பாளர் என அவரது திறமைகளை மென்மேலும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆலயங்களில் சேவை செய்வதில் பெருவிருப்புடன் இயங்கும் இவர் சுவாமியை அலங்காரம் செய்வதில் , இறைபாடல்களை ஓதுவதில் சமயப் பேருரைகைளை நிகழ்த்துவதில் எல்லாம் பெருவிருப்புடன் பங்கு கொண்டு நிறைவேற்றுவார்.

இவருக்கு ' முத்தமிழ் வித்தகர் ', 'வில்லிசை வேந்தன்', 'கலாசூரி', 'பல்கலை வேந்தன்' ,' கலைமாமணி' , 'இசைஞான மணி ' எனச் சுமார் 45 பட்டங்கள் வரை சூட்டிப் பாராட்டிக் கெளரவித்தும் பரிசில்களை வழங்கியும்.போற்றியுள்ளனர்.

இத்தகைய மேன்மை கொண்ட கலைச்சுடர் 2003 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம்  27 ஆம் நாள் தனது ஔியை அணைத்துக் கொண்டமை கலை உலகையே இருளில் தடுமாற வைத்துள்ளது.

மேலும்   வில்லிசை விற்பன்னர் உடப்பூர் பெரி . சோமாஸ்கந்தர் குறித்து பத்மா சோமகாந்தன் அவர்களின் கட்டுரையைப் படிப்பதற்கு....
 

இக்கட்டுரையை முழுமையாக வாசிக்கவும், மேலும் சில அரிய கட்டுரைகளை வாசிக்கவும் 2015 செப்டெம்பர்  மாத கலைக்கேசரியை வாங்குங்கள். தொடர்புகளுக்கு :  ‘கலைக்கேசரி.

Contact : 
+11-7322700/746 / kalaikesari@expressnewspapers.lk