You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
கலாமின் நினைவுகளோடு

October 21, 2015


 

பிறப்­ப­வர்­க­ளி­லேயே மற்­றோரால் நினைக்­கப்­ப­டு­ப­வரே சிறந்­த­வர்கள். இறந்­தாலும் சிறப்­ப­வர்கள் இவ்­வா­றா­ன­வர்கள் மிக அரி­தா­ன­வர்­களே!காலக்­க­ரங்கள் இவர்­களைக் கவி­தை­க­ளாலும், கட்­டு­ரை­க­ளாலும் வாழச் செய்­து­வி­டு­கின்­றன.மையிட்ட உண்­மைகள் மறக்­கப்­ப­டு­வ­தில்லை. அவ்­வாறே நமது இலங்கைக் கவிஞர் கனி­வு­ம­தியின் விரல்­களால் வரை­யப்­பட்ட கவி­தைகள் மண்­ணை­விட்டு மறைந்த இந்­திய விஞ்­ஞா­னி­யான அப்துல் கலாமை ‘அக்­கினிக் குஞ்­சாக' அழ­கான நூலுக்குள் அடக்கம் செய்­தி­ருக்­கி­றது.‘அக்­கினிக் குஞ்சு’ கவிதை நூலின் வெளி­யீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை மாலை நேர­மான ஒரு மழை நேரத்தில்   கொழும்புத் தமிழ்ச் சங்­கத்தில் நடை­பெற்­றது. தகைமை எழுத்­தா­ளரும், கல்வி அமைச்சின் பிரதி ஆணை­யா­ள­ரு­மான லெனின் மதி­வானம் தலைமை வகிக்க இலக்­கி­ய­நே­சர்கள் பங்கு கொண்ட இனிய நிகழ்­வாக மண்­டப அலங்­கா­ரங்கள் புதுப் பொலி­வுடன் வந்­த­வர்­களைக் கவர்ந்­த­தா­கவும் இருந்­தது.  

வழமைப்போல மங்கல விளக் கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், தலை­மை­யு­ரை­யாற்­றிய கல்வி வெளி­யீட்டுத் திணைக்­கள பிரதி ஆணை­யாளர் விமர்­சகர் லெனின் மதி­வானம் அப்துல் கலாம் இந்­தி­யாவின் குடி­ய­ரசு தலை­வ­ரான அறி­வு­ஜீவி.அவ­ரது எளி­மையும் நற்­கு­ணங்­களும் வாழ்­வியல் கோலமும் அவரை மக்கள் மத்­தியில் ஜன­ரஞ்­ச­க­மிக்­க­வ­ரா­கவும் இளை­ஞர்­க­ளி­டத்தில் ஒரு முன்­மா­திரி ஆளு­மை­யா­கவும் அடை­யாளம் காண வைக்­கி­றது.

அதே­நேரம் இந்த விஞ்­ஞானி ஏகா­தி­பத்­திய அர­சு­களின் அணு­வா­யுத ஆக்­கி­ர­மிப்புத் திட்­டத்­திற்கு ஆத­ர­வாக நின்­றமை கடும் விமர்­ச­னத்­துக்கு உட்­பட்ட ஒரு விட­ய­மாகும்.

கூடங்­குளம் அனல் மின்­நி­லையம் அத­னா­லான மக்கள் மீதான பாதிப்­புகள் குறித்த அவ­ரது பதில் மனி­த­நேயம் கொண்­ட­தாக இருக்­க­வில்லை.

ஆண்­டு­தோறும் 1500 பேர் விமான பய­ணத்தில் இறக்­கி­றார்கள்.

அதற்­காக விமா­னத்தில் பய­ணிக்­கா­மலா இருக்­கிறோம் என அணு­வா­யுத உற்­பத்­தியில் மக்கள் அழிவை நியா­யப்­ப­டுத்­திய அவ­ரது கருத்­துகள் ஏகா­தி­பத்­தி­யத்­துக்­கான சேவ­க­ன­ா­கவே அப்துல் கலாம் அவர்­களை அடை­யாளம் கண்­டது என தெரி­வித்தார்.

சிறப்­பு­ரை­யாற்­றிய நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கவி­ஞ­ரு­மான மல்­லி­யப்­பு­சந்தி திலகர், கனி­வு­மதி காலத்­திற்கு காலம் தன்­பெ­யரை மாற்­றிக்­கொண்டு முன்­னோக்கிச் செல்லத் துடிக்கும் இளைஞர். பட்­டுக்­கோட்டை கல்­யா­ண­சுந்­தரம், பழ­னி­பா­ரதி, அறி­வு­மதி என ஆளு­மை­களின் பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­னவர் இன்று அப்துல் கலாம் எனும் அறி­ஞனின் பாதிப்பில் அவ­ரது இறப்பின் நினை­வாக கவிதை நூலாக தந்­துள்ளார்.

அப்துல் கலாம் இளை­ஞர்­களை எழுப்­பி­வி­டு­வதை குறிக்­கோ­ளாகக் கொண்­டி­ருந்­தவர். அந்த இலக்கு கனி­வு­ம­தியின் கவி­தைகள் ஊடாக வெளிப்­பட்டு நிற்­கி­றது. கனி­வு­ம­தியின் ‘அக்­கினிக் குஞ்சு’ கவிதை தாக்­கத்­துக்கு அப்துல் கலாமின் ‘அக்­கினி சிற­குகள்’ எனும் சுய­ச­ரிதை நூலும் அதில் ஆங்­காங்கே தூவப்­பட்­டி­ருக்கும் கவி­தை­களும் காரணம் என நினைக்­கிறேன்.

கலாம் அறிஞர், விஞ்­ஞானி, குடி­ய­ரசு தலைவர் என்­ப­தற்­கெல்லாம் அப்பால் ஒரு கவிஞர், கவி­தா­ர­சிகர்.

அவ­ரது சுய­ச­ரிதை நூலில் அவ­ரது கவி­தை­க­ளையும் அவர் ரசித்த கவி­தை­க­ளையும் இணைத்­து­விட்­டுள்ளார்.

அந்­தக்­க­வி­தைகள் அனைத்தும் எதிர்­காலம் குறித்த நம்­பிக்கை தரும் கவி­தை­க­ளாக, இளை­ஞர்­களை உற்­சா­கப்­ப­டுத்தும் கவி­தை­க­ளாக அமைந்­துள்­ள­மையை அவ­தா­னிக்­கலாம் என கூறி, கனி­வு­மதி அப்துல் கலாம் பற்றி கவி­தைகள் எழு­தி­யுள்ளார்.

நான் அப்துல் கலாம் எழு­திய கவி­தைகள் சில­வற்றை உங்­க­ளுக்கு தரு­கிறேன் என கலாமின் கவி­தை­களை மேற்கோள் காட்டி உரை­யாற்­றினார்.

அதே­நேரம், லெனின் மதி­வானம் முன்­வைத்த கலாம் குறித்த விமர்­சனம் குறித்து கருத்து தெரி­விக்­கையில் அப்துல் கலாம் ஒரு அறிவு ஜீவி, மேதை என்­பதில் மாற்­றுக்­க­ருத்து இல்லை.

அவர் திருச்சி சென்.ஜோசப் கல்­லூ­ரியில் மாண­வ­னாக இருக்­கும்­போது அங்கே வைக்­கப்­பட்­டிந்த மாதிரி ரொக்கெட் ஒன்றின் முன்னால் அமர்ந்து எப்­போதும் கன­வு­கண்­டி­ருப்­பாராம்.

இது பறந்தால் எப்­ப­டி­யி­ருக்கும் என்­ப­துதான் அந்த கனவு. அதுவே பின்­னாளில் நடந்­தே­றி­யது. இந்த அரிய கண்­டு­பி­டிப்பை அணு­வா­யுத திசைக்கு திருப்பி அவரை அவ்­வாறு பயன்­ப­டுத்­திக்­கொண்­டது அர­சியல். இந்த அர­சியல் சூழல் அப்துல் கலாம் போன்ற அறி­வு­ஜீ­வி­க­ளுக்கு இப்­ப­டி­யான வாய்ப்­பு­க­ளையே வழங்­கு­கின்­றன.

அப்­ப­டி­யி­ருக்க அர­சியல் சூழல் அவரைக் கட்­டா­யப்­ப­டுத்­தி­யுள்­ளது.

 சில வேளை அணு­வா­யுதம் நோக்­கி­ய­தாக அல்­லாத வகையில் வேறு துறையில் அவ­ரது அறிவும் திற­மையும் பயன்­பட்­டி­ருக்கும் பட்­சத்தில் வெவ்­வேறு பரி­மா­ணத்­தி­லான வெற்­றி­களை அவர் பதிவு செய்­தி­ருக்­கக்­கூடும் எனவும் தெரி­வித்தார். 

நூல் நய­வுரை ஆற்­றிய கவிஞர் மு.மயூரன் அப்­துல்­கலாம் உண்­மையில் எளி­மை­யாக வாழ்ந்த அறிஞர். விஞ்­ஞானி, குடி­ய­ரசு தலைவர். இவர் போன்று வாழ்ந்த பலர் உள்­ளனர். ஆனால் எல்­லோ­ருக்கும் இவ்­வாறு கவிதை எழு­தப்­ப­டு­வதோ விழா எடுப்­பதோ இல்லை.

இரா­மா­னுஜம் எனும் கணி­த­மேதை வாழ்ந்த பூமியும் அதுதான். ஆனால் அவ­ருக்கு இவ்­வாறு விழா எடுத்­த­தாக நினை­வில்லை.

கலாமின் எளி­மையும் அவர் வகித்த பத­வி­களும் அவர் ஆற்­றிய மக்கள் பணி­களும் இந்த ஊட­கங்­க­ளினால் வெகு­ஜ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்டு அவ­ருக்கு கதா­நா­யக விம்பம் வழங்­கப்­பட்­டது.

அவரை இவ்­வாறு பார்ப்­ப­தற்கு கட்­ட­யாப்­ப­டுத்­த­பட்­டது.

இளை­ஞர்­களை கனவு காணுங்கள் என தனியார் பள்­ளி­களில் அவர் மாண­வர்­க­ளுக்கு ஊக்­கு­விப்பு உரை ஆற்­றிக்­கொண்­டி­ருந்தார்.

அதே நேரம் அர­ச­பள்­ளி­களை அரசே திட்­டமிட்டு பின்­ன­டை­வுக்கு உள்­ளாக்கிக் கொண்­டி­ருந்­தது. அப்­போது இவர் குடி­ய­ரசு தலைவர் என்­பதை நாம் மறந்­து­வி­டக்­கூ­டாது.

அதேபோல்; கலாம் ஏவு­கணை நாயகன் என போற்­றப்­ப­டு­கிறார்.

அவர் யாருக்கு ஏவு­கணை நாயகன் என்­பது கேள்­வியை ஏற்­ப­டுத்­து­கி­றது. அவ­ரது ஏவு­கணை கண்­டு­பி­டிப்பு இந்­தி­யாவின் அண்­மைய நாடு­க­ளான பாகிஸ்தான், நேபாளம், ஆப்­கா­னிஸ்தான் என்றும் இந்­திய இராணுவம் குடி­கொண்­டி­ருந்த நம் இலங்கை மண்­ணிலும் வாழும் மக்­க­ளிடம் அவர் ஏவு­கணை நாய­கன்­தானா எனும் கேள்­வியை ஏற்­ப­டுத்­து­கி­றது.

கனி­வு­மதி எந்த மன­நி­லையில் இவரை ஏவு­கணை நாயகன் என வர்­ணிக்­கிறார் என புரி­ய­வில்லை.

ஏகா­தி­பத்­திய அர­சு­களும் அதன் ஊது­கு­ழல்­க­ளான ஊட­கங்­களும் அப்துல் கலாமை இளை­ஞர்­களின் ஹீரோ­வாக இருக்க கட்­டா­யப்­ப­டுத்­தி­யுள்­ளன. கலாமின் இயல்­பான எளி­மையும் திற­மையும் குறைத்து மதிப்­பி­டக்­கூ­ட­டி­ய­ன­வல்ல.

எனினும் அவ­ரது அந்த ஆளுமை அதி­கார வர்க்க அர­சியல் ஆதிக்­கத்­துக்கு உள்­ளா­கிப்­போ­னமை விமர்­ச­னத்­துக்கு அப்­பாற்­பட்­டது அல்ல எனவும் தெரி­வித்தார்.  

அடுத்­த­தாக வீர­கே­ச­ரி நாளிதழின் பிர­தம ஆசி­ரியர் எஸ்.ஸ்ரீகஜன் ‘அக்­கினிக் குஞ்சு’ நூலை வெளி­யிட்டு வைக்க ‘புலவர் புத்­தகப் பூங்கா’ நிறு­வனர் ஹாஸிம் உமர் முதற்­பி­ர­தி­யாகப் பெற்றுக் கொண்டார்.

முதல் சிறப்புப் பிர­தியை ‘பூபா­ல­சிங்கம்’ புத்­த­க­சாலை உரி­மை­யாளர் ஆர்.பி. ஸ்ரீத­ரசிங், மற்றும் விசேட பிர­தியை ‘நியூ­கல்­யாணி’ உரி­மை­யாளர் எம்.சந்­தி­ர­சே­க­ரனும் பெற்றுக் கொண்­டனர் தொடர்ந்து கனி­வு­மதி நன்றியுறை நிகழ்த்­தினர்.

அப்துல் கலாம் மறைந்த மறு நிமி­டங்­களில் மள­ம­ள­வென தனக்குள் பிறந்த கவி­தை­க­ளையே இங்கு தான் நூலேற்றம் செய்­தி­ருப்­ப­தாக கனி­வு­மதி தனது நன்றியுறையில் குறிப்பிட்டார்.

இந்நூலுக்கு முழு ஒத்துழைப்பையும் அவரது துணைவியான பிரியா கனிவுமதி வழங்கியிருந்தமை குறிப்
பிடத்தக்கது.

அதேபோன்று மேடைப்பிரமுகர்களுக்கு தனது பிஞ்சுக் கரங்களாலேயே ‘கலாம்’ பற்றிய நூல்களை வழங்கினார். கனிவுமதியின் சிரேஷ்ட புதல்வரான புகழேந்தி.

அப்துல் கலாம் ஒரு கண்டத்தின் தலைவராகப் பார்க்கப்பட்டவர். இஸ்லா
மியர்கள் கூட மதரீதியாக அவரது சில கொள்கைகளோடு முரண்பட்டிருந்த போதும் தமிழர்கள், பொதுவாக இந்தியர்கள் அவரை உயரத்தில் ஏற்றுவதில் முன் நின்றனர்.

மொத்தத்தில் இலங்கையில் ஒரு தமிழ் இளைஞனின் பார்வையில் பாரதத்
தின் சொத்தாக இந்நூலில் பார்க்கப் பட்டிருப்பது கலாமுக்கு கிட்டிய இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் அங்கீகாரம். 

அழகு தமிழில் நிர்ஷன் இராமானுஜம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி யிருந்தமை குறிப்பிடத்தக்கது.