You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
'ஈழத்துப் புலம்­பெயர் இலக்­கிய சிறப்­பிதழ் வெளி­யீட்டு விழாவில்...

December 03, 2015


 


போர்ச்­சூ­ழலில் இடம்­பெற்ற முக்­கிய விட­யங்கள் போர் இலக்­கி­யங்கள் மூலமே வெளிக்­கொ­ண­ரப்­ப­டு­கின்­றன.

போர் இலக்­கி­யத்தின் முக்­கிய பரி­மாணம் அவை போரின் சாட்­சி­யங்­க­ளாக அமை­வ­துடன் போரின் நிலை­மை­களை, கள நிலை­வ­ரங்­களை வெளி உல­கிற்குத் தெரி­யப்­ப­டுத்தி உலகின் மனச்­சாட்­சியைத் தட்டி எழுப்­பு­வ­துதான்.

'ஞானம்" சஞ்­சி­கையின் 150 -ஆவது இதழை, போர் இலக்­கியச் சிறப்­பி­த­ழாக 600 பக்­கங்­களில் வெளிக்­கொ­ணர்ந்தோம். ஒவ்­வொரு கால­கட்­டத்­திலும் எழு­தப்­படும் இலக்­கி­யங்கள் தொகுக்­கப்­படல் வேண்டும். 

சங்க கால புற­நா­னூறுப் பாடல்கள் தொகுக்­கப்­பட்­ட­தால்தான் நாம் அன்­றைய தமி­ழரின் போர்­பற்றி அறிய முடி­கி­றது. இத்­த­கைய பாரம்­ப­ரி­யத்தில் தொகுக்­கப்­பட்­ட­துதான் 'ஈழத்துப் புலம்­பெயர் இலக்­கியம்" என்ற தொகுப்­பாகும்."

இவ்­வாறு 'ஞானம்" சஞ்­சி­கையின் பிர­தம ஆசி­ரியர் தி. ஞான­சே­கரன் அண்­மையில் பாரிஸ் மாந­கரில் நடை­பெற்ற 'ஈழத்துப் புலம்­பெயர் இலக்­கியம்" ஞானம் சிறப்­பிதழ் அறி­முக நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கையில் குறிப்­பிட்டார்.

பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்­தாளர் வி. ரி. இளங்­கோவன் தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் தி. ஞான­சே­கரன் மேலும் பேசு­கையில் குறிப்­பிட்­ட­தா­வது:

'போர் இடம்­பெறும் வேளையில் உள்­நாட்டில் இருப்­பது தமது உயிர் பாது­காப்­பிற்கு ஏற்­ற­தல்ல என்று அஞ்சி பல்­வேறு நாடு­க­ளுக்குச் சென்­ற­வர்கள் தமது நாட்­டினைப் பிரிந்து சென்ற ஏக்­கத்­தி­னையும், சென்­ற­டைந்த நாடு­களில் தமக்கு ஏற்­பட்ட அல்லல் நிறைந்த அனு­ப­வங்­க­ளையும் பதிவு செய்யும் இலக்­கியம் புலம்­பெயர் இலக்­கி­யங்கள் என வகைப்­ப­டுத்­தப்­பட்­டன.

நாம் தொகுத்த இந்தச் சிறப்­பி­தழில் போர் கார­ண­மாக நாட்­டை­விட்டு வெளி­யே­றி­ய­வர்­களின் பயண அனு­ப­வங்கள், தாயக நினை­வுகள், புலம்­பெயர் வாழ்வின் அவ­லங்கள், கலா­சாரக் கலப்பு மற்றும் முரண்­பாடு, அகதி நிலை, நிற­வாதம், புதிய சூழல்சார் வெளிப்­பா­டுகள், பெண்­களின் விழிப்­பு­ணர்வு, மற்றும் விடு­தலை, அனைத்­து­லக நோக்கு, அர­சியல் விமர்­சனம் முத­லி­ய­வற்றைப் பிர­தான உள்­ள­டக்கக் கூறு­க­ளாக அவ­தா­னிக்க முடியும். இத்­தெ­ாகுப்பில் 85 சிறு­க­தை­களும், 125 கவி­தை­களும், 50 கட்­டு­ரை­களும், நான்கு நேர்­கா­ணல்­களும் அடங்­கி­யுள்­ளன.

 இந்த போர் இலக்­கியம், மற்றும் புலம்­பெயர் இலக்­கியம் இரு­பதாம் நூற்­றாண்டில் தமிழ் இலக்­கி­யத்­திற்கு வழங்­கப்­பட்ட இலக்­கிய வகை­மை­க­ளாகும்." என்றார். 

நிகழ்­வுக்குத் தலை­மை­வ­கித்து உரை­யாற்­றிய வி. ரி. இளங்­கோவன் குறிப்­பிட்­ட­தா­வது: 

'ஞானம்" 150 -ஆவது இதழ் ஈழத்துப் போர் இலக்­கியச் சிறப்­பி­த­ழாக 600 பக்­கங்­களில் வெளி­யி­டப்­பட்­டது.

175 -ஆவது இதழ் 'ஈழத்துப் புலம்­பெயர் இலக்­கியம்" என்ற மகு­டத்தில் சிறப்­பி­த­ழாக 976 பக்­கங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இலக்­கியச் சஞ்­சிகை வர­லாற்றில்; இத்­த­கைய பாரிய முயற்சி முன்­னெப்­போதும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இச்­சி­றப்­பி­தழில் புலம்­பெ­யர்ந்­துள்ள எம்­ம­வரின் கவி­தைகள், சிறு­க­தைகள், கட்­டு­ரைகள், பத்­திகள், ஓவி­யங்கள், ஒளிப்­ப­டங்கள், நேர்­கா­ணல்கள் என்­பன இடம்­பெற்­றுள்­ளன.

2000 -ஆம் ஆண்டு முதல், மாதத்தின் முதல் நாளில் தவ­றாது வெளி­வந்து சாதனை படைக்கும் 'ஞானம்" ஆசி­ரி­யர்கள் பாராட்­டுக்­கு­ரி­ய­வர்கள்.

புலம்­பெயர் சந்­த­தி­யினர் எதிர்­கா­லத்தில் வேற்­று­மொழிச் சூழலில் வாழ நேரி­டு­மெ­னினும் தமது மூதா­தை­யரின் இலக்­கிய வேர்­களைத் தேடும்­போது அம்­மூ­தா­தை­யர்­களின் இலக்­கியச் சாட்­சி­ய­மாக இத்­தொ­குதி விளங்கும் எனலாம்" என்றார்.

'ஞானம்" இணை ஆசி­ரியர் திரு­மதி ஞானம் ஞான­சே­கரன் பேசு­கையில் குறிப்பிட்டதா­வது: 

'ஈழத்து இலக்­கியச் செல்­நெ­றியைப் பதி­வு­செய்யும் நோக்­குடன் நாம் இயங்­கு­கின்றோம். ஈழத்து முத­லா­வது இலக்­கியச் சஞ்­சிகை 'மறு­ம­லர்ச்சி" வர­தரால் ஆரம்­பிக்­கப்­பட்­டது. முத­லா­வது முற்­போக்கு இலக்­கியச் சஞ்­சிகை 'பாரதி" கே. கணேஸ் அவர்­களால் ஆரம்­பிக்­கப்­பட்­டது. 

மார்க்­சிய இலக்­கி­யத்தின் பிதா­ம­கர்­களில் ஒரு­வ­ராகப் பேரா­சி­ரியர் கே. கணேஸ் கரு­தப்­ப­டு­கிறார். மலை­யக இலக்­கி­யத்தில் தெளி­வத்தை ஜோசப் முக்­கி­யத்­துவம் பெறு­கிறார்.

அதிக புகழ்­பெற்ற எழுத்­தா­ளர்­களை உரு­வாக்­கிய சஞ்­சிகை ஆசி­ரி­ய­ராகக் 'கலைச்­செல்வி" சிற்பி சர­வ­ண­பவன் கரு­தப்­ப­டு­கிறார். நற்­போக்கு இலக்­கி­யக்­கா­ர­ராக எஸ். பொ. கரு­தப்­ப­டு­கிறார்;

இவர்கள் அத்­த­னை­பே­ரையும் தொடர்­பேட்­டி­கண்டு ஞானத்தில் பதிவு செய்­தி­ருக்­கிறோம்.

இவர்­க­ளை­விட 50 -க்கும் மேற்­பட்ட முக்­கிய எழுத்­தா­ளர்­களின் பேட்­டி­களும் ஞானத்தில் வெளி­யா­கி­யுள்­ளன. இந்தப் பேட்­டிகள் யாவும் ஈழத்து இலக்­கிய வளர்ச்­சியின் பல்­வேறு கால­கட்­டங்­களைப் பதிவு செய்­வ­ன­வாக அமைந்­தன.

இவற்­றை­விட நூற்றுக்கும் மேற்­பட்ட எழுத்­தா­ளர்­களை அட்­டைப்­பட அதி­தி­க­ளாகக் கௌர­வித்து அவர்­க­ளது பணி­களைப் பதிவு செய்­துள்ளோம். 50 -க்கும் மேற்­பட்ட புதிய எழுத்­தா­ளர்­களை இனங்­கண்டு அவர்­களை வளர்த்­தெ­டுத்­தி­ருக்­கிறோம். 

வரதர், கார்த்­தி­கேசு சிவத்­தம்பி, தெளி­வத்தை ஜோசப், எஸ். பொ. ஆகி­யோ­ருக்குப் பவ­ள­விழாச் சிறப்­பி­தழ்­களை வெளி­யிட்­டுள்ளோம்.

சிறு­கதைப் போட்­டி­களை வைத்து பரி­ச­ளித்து வரு­கிறோம். எழுத்­தா­ளர்கள் அம­ரத்­துவம் எய்­தும்­போது அவர்­களை நினை­வு­கூர்ந்து அஞ்­சலிக் கூட்­டங்­களை நிகழ்த்­து­கிறோம்.

'ஞானம் பதிப்­பகம்" என்ற அமைப்பின் மூலம் 35 -க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்களை வெளிக்கொணர்ந்துள்ளோம். இவை யாவும் 'ஞானம்" சஞ்சிகையின் பல்வேறு வகைப்பட்ட பணிகளாக அமைகின்றன" என்றார்.

ச. தில்லை நடேசன், சு. கருணாநிதி, இரயாகரன், நாகேஸ் ஆகியோருட்படப் பலர் கருத்துரை வழங்கினர்.

ஞானம் தம்பதிகள் 'பாரிஸ் முன்னோடிகள் கலை இலக்கிய வட்டம்" சார்பில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.

டென்மார்க், ஜேர்மனி, சுவிஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்" ஞானம் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

- ஓவியா