You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
தேன் சிட்டு - ஒரு பார்வை...!

December 14, 2015


மீன்­பாடும் தேன் நாட்டில் “தேன் சிட்டு” என்னும் பெயரில் சர்­வ­தேச சிறுவர், சர்­வ­தேச பெண் பிள்­ளைகள் தினம், சர்­வ­தேச முதியோர் வாரம் இவை­களை ஒட்­டி­ய­தாக மட்­டக்­க­ளப்பில் வெளி­யி­டப்­பட்ட சிறப்பு மலர்.

சீரற்ற கால­நிலை மற்றும் தொடர்ச்­சி­யான மழை­யி­னாலும் திட்­ட­மிட்ட படி குறித்த தினத்தில் மட்­டக்­க­ளப்பு மாநகர், மண்­முனை வடக்கு பிர­தேச செய­லாளர் வெ.தவ­ரா­ஜாவின் தலை­மையில் நடை­பெற்ற இந்த சிறப்பு  மலர் மட்­டக்­க­ளப்­பிலே பெரும் வர­வேற்­பினை வாச­கர்கள் மத்­தியில் பெற்­ற­தாகும்.

கிழக்கு மாகா­ணத்தின் தலை­ந­கராம் மட்­டக்­க­ளப்பு “மீன்­பாடும் தேன்­நாடு” என­பல முன்­னோர்­க­ளினால் பெயர் போன மட்­டக்­க­ளப்­பிலே தேன் என்னும் பெய­ருடன் தலைப் பெய­ருடன் உரு­வாக்­கப்­பட்ட இந்த 03 ஆவது மலர் பல வருட காலங்­க­ளுக்குப் பின்னர் மட்­டக்­க­ளப்­பிலே “மீன்­பாடும்” தேன் நாட்டின் பெயர் என்னும் வர­லாறு மறந்­து­விட முடி­யாத நிலையில் கொடி கட்டிப் பறக்­கி­றது.
மீன் மகள் பாடு­கிறாள். வாவி மகள் ஆடு­கிறாள்.

மட்டு நகர் அழ­கான மேடை அம்மா என்னும் கவிஞர் காசி ஆனந்­தனின் இப்­பா­ட­லிற்கு உயிர் கொடுத்து மட்­டக்­க­ளப்பு தேனின் இனிமை இந்த மலர் மூலம் வாச­கர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக இந்த மலரின் மலர் குழு­வி­ன­ரையும் வாச­கர்கள் பாராட்­டு­கின்­றனர்.

சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள் அதி­க­ரித்துக் கொண்டு வரும் இன்­றைய கால­கட்­டத்தில் சிறுவர் தொடர்­பான விழிப்­பு­ணர்­வையும் சங்­கத்தின் மத்­தியில் ஏற்­ப­டுத்தும் நோக்­குடன் மிக முக்­கி­ய­மான விட­யங்­களை ஆவ­ணப்­ப­டுத்தும் நோக்­குடன் சிறுவர் மற்றும் முதி­யோர்கள் தொடர்­பான பல விட­யங்­களைத் தாங்கி வந்­துள்ள இந்த “தேன் சிட்டு” என்னும் பெய­ரி­லான மலர் மறைந்து போன “மீன்­பாடும் தேன் நாடு” என்னும் பெயரின் இன்­றைய புதிய தலை­மு­றைக்கு இனிமை ஊட்­டு­வ­தாக அமைந்து பல­ரு­டைய பாராட்­டு­க­ளையும் பெற்­றி­ருப்­பதும் இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

மட்­டக்­க­ளப்­பிலே ஒவ்­வொரு வீடு­க­ளிலும் தேன் மிக முக்­கிய மருந்­தாக தாய்­மார்கள் வைத்துக் கொள்­வார்கள். அது­போல வைத்­தி­யர்­களும் தேனை வைத்துக் கொள்­வார்கள்.

அது போல தேன் என்­பதை எவரும் மறந்து விட­மாட்­டார்கள்.

சர்­வ­தேச சிறுவர் தினம் சர்­வ­தேச பெண்­பிள்­ளைகள் தினம் சர்­வ­தேச முதியோர் வாரம் ஆகிய மூன்று நிகழ்­வு­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தான இந்த 03ஆவது மல­ரான “தேன் சிட்டு” மலர் மட்­டக்­க­ளப்பு மாந­க­ரத்தின் மண்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டி­ருப்­ப­திலே கடந்த மாத காலத்­தி­லி­ருந்து சீரற்ற கால நிலையும், தொடர்ச்­சி­யான மழையும் பெய்து சிறப்­பான நிகழ்­வு­க­ளுக்கு இடைஞ்­சல்­களை ஏற்­ப­டுத்­திய போதிலும் இந்த மண் முனை ­வ­டக்கு பிர­தேச செய­லா­ளரும், எழுத்­தா­ளரும், இதன் தலை­வ­ரு­மான வெ. தவ­ராஜா சிறந்த ஆலோ­ச­னை­க­ளையும் வழி­காட்­டு­தல்­க­ளையும் வழங்­கி­ய­மையும் மிகவும் பொருத்­த­மாக அமைந்­தி­ருந்­தது.

மலரின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக சிறுவர் உரிமை மேம்­பாட்டு உத்­தி­யோ­கத்தர் சி. உத­யராஜ் பொறுப்­பான பணி­யினை மேற்­கொண்­டி­ருக்­கிறார்.

அதே­போல மலர் ஒருங்­கி­ணைப்பு குழு­வி­னர்­க­ளாக பெ. திருச்­செல்வம் சமூ­க­சேவை உத்­தி­யோ­கத்தர்,  மேகராஜ் முன்­பிள்­ளைப்­ப­ருவ அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர், இ. நிரோசன் சிறுவர் பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர், ம. சந்­தி­ர­வாணி, மகளிர் அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர், திரு­மதி ச.ரேனுகா உள­வ­ளத்­துறை உத்­தி­யோ­கத்தர் திரு­மதி. வி. காமலா விட­ய­மு­கா­மைத்­துவ உத­வி­யாளர், அட்­டைப்­பட ஓவியர் க.கோகுல்ராஜ், த.சங்கர் கணினி வடி­வ­மைப்பு ஆகி­யோர்­க­ளி­னு­டைய ஒன்­று­பட்ட செயற்­பா­டு­களும் மிகவும் பொருத்­த­மா­ன­தாக அமைந்­துள்­ளன.

இம் மலரின் வாழ்த்துச் செய்­தி­யிலே மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சாங்க அதிபர் திரு­மதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் “தேன் சிட்டு” 03 மலர் தொடர்ந்தும் ஒவ்­வொரு வரு­டமும் தொடர்ச்­சி­யாக வெளி­வந்து சமூ­கத்­திற்கு நல்­ல­தொரு ஆவ­ண­மாகத் திகழ வேண்டும். இம் முயற்­சிக்கு வழி­காட்­டிய பிர­தேச செய­லா­ள­ருக்கும், அவர் சார்ந்த உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் தனது மனம் கனிந்த பாராட்­டு­தல்­க­ளையும், வாழ்த்­துக்­க­ளையும் தெரி­வித்­துள்ளார்.

மலரின் உள்ளே வாழ்த்துச் செய்­தியில் மலர் வெளி­வ­ரு­வ­தற்கு நிதி­யு­தவி வழங்­கிய மட்­டக்­க­ளப்பு (CERI) நிறு­வ­னத்தின் (இலங்கை) தேசிய இயக்­குநர் திரு­மதி ர.அனிற்கு விசேட விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

மேலும் மல­ரிலே ஆக்­கங்கள் தெரி­விப்பு விட­யத்­திலே மட்­டக்­க­ளப்பின் சிறந்த எழுத்­தா­ளர்கள், மட்டக்களப்பின் மூத்த ஊடகவியலாளர் மற்றும் சிறந்த ஆசிரியர்களினுடைய கருத்துக்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இவ்வருட “தேன் சிட்டு” மலர் 03 வெளிவருவதற்கு அனுசரணை வழங்கிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களம், நிகழ்வு சிறப்புற நடைபெறுவதற்கு உதவிய மட்டக்களப்பு ESCO நிறுவனத்திற்கும் மலர்குழு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளது. 
கே. வாமதேவன்