You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இசை அரசி எம்.எஸ்.எஸ் : சிறப்புத் தொகுப்பு..!

January 21, 2016



கர்நாடக இசை உலகில் அரசியாக இருந்து கோலச்சியவர் திருமதி.எம்.எஸ்சுப்புலட்சுமி  அவர்கள். 'எம்.எஸ்.' என்று சுருக்கமாக அனைவராலும் அழைக்கப்பட்டவர்.

அவரது நூற்றாண்டுவிழாவில் (1916­-_ 2016) இக்கட்டுரையை எழுதுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். நான்கு ஆண்டுகள் (1965_1969) அவரது கச்சேரிகளை நேரடியாக ரசித்தவன் எனும் ரீதியில் சில சம்பவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனது சிறு வயதில் வானொலி மூலமாகத் தான் இவரது கச்சேரிகளைக் கேட்பதுண்டு. 1960 ஆண்டு முதல் சென்னை வானொலியில் அடிக்கடி ஒளிப்பரப்பாகும் இவரது கச்சேரிகளை தவறாது கேட்டு ரசிப்பதுண்டு.

இவரது கச்சேரிகளை நேரில் கேட்போமா என்றொரு ஏக்கமுமிருந்தது. அதற்கான சந்தர்ப்பமும் வந்தது.

சென்னையின் முக்கிய சங்கீத சபாக்களில் வெள்ளி,சனி, ஞாயிறு கிழமைகளில் கச்சேரிகள் நடந்து கொண்டே இருக்கும். பல வித்துவான்கள் பங்கேற்பர்.

இந்நிலையில் சென்னையின் புகழ் பெற்ற மியூசிக் அக்கடமியின் இசைவிழா டிசம்பரில் (1966) ஆரம்பமானது.

முதன் முதலாக எம். எஸ். அம்மாவின் கச்சேரியை நேரில் ரசிக்கப் போகிறோம் எனும் ஆர்வத்தால் இருப்புக் கொள்ள முடியவில்லை. மேலும் இசைமாமேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டை முன்னிட்டு இலங்கையின் சங்கீத வித்துவான் ஏ.கே கருணாகரன்அவர்களால் வெளியிடப்பட்ட பரவசங்கள் தந்த அனுபவங்களை படிப்பதற்கு......       
 

இக்கட்டுரையை முழுமையாக வாசிக்கவும், மேலும் சில அரிய கட்டுரைகளை வாசிக்கவும் 2016 ஜனவரி மாத கலைக்கேசரியை வாங்குங்கள். தொடர்புகளுக்கு :  ‘கலைக்கேசரி.

Contact : 
+11-7322700/746 / kalaikesari@expressnewspapers.lk