You are here : ARCHAEOLOGY

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நாகம் வழிபட்ட நாயகி

June,18,2018


மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டி நிற்கும் அன்னை நாகபூஷணியின் இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின. 
அகில உலகமெல்லாம் நிறைந்து நின்று உயிர்கள் எல்லாம் உய்யும் வண்ணம் அருள்சுரந்து காப்பவளான அன்னையின் வழிபாடுதான் சக்தி வழிபாடு. இச்சக்தி வழிபாடு மிகவும் பழமை வாய்ந்தது.  காஞ்சியில் காமாட்சியாகவும், காசியில் விசாலாட்சியும், மதுரையில் மீனாட்சியாகவும் பல திருநாமங்களைக் கொண்ட சக்தியானவள். நயினையில் புவனேஸ்வரியாக வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகின்றாள். வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளுகின்ற காரணத்தினால் சக்தியானவள் அகில உலகங்களுக்கெல்லாம் அன்னையாக தாயாக விளங்குகின்றாள். 
மணிமேகலாத் தெய்வம் நயினாதீவுக்கு விஜயம் செய்தபோது இது மணிபல்லவமாக இருந்திருக்கின்றது. சக்திபீடமாகத் திகழும் ஸ்ரீநாகபூஷணி அம்மன் சக்தி பீடம் ஒன்றே இலங்கையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 
அடியார்கள் பலர் தங்கள் நேர்த்திக் கடனாக நாகசாந்தி செய்வதற்கு நயினாதீவுக்கு வருகின்றார்கள். நாகதோஷத்தை இங்கு நிவர்த்தி செய்து பிள்ளைப் பேறடைந்தவர்கள் பலர். பிள்ளைப்பாக்கியம் பெற்றவர்கள். தங்கத்தால் தொட்டிலும் – பிள்ளையும் செய்து அம்பாளுக்குக் கொடுத்து நேர்த்திக் கடன்களை நிறைவு செய்கின்றனர்.


மூர்த்தி,தலம்,தீர்த்தம் என்னும் சிறப்புக்களைக் கொண்டமைந்த நாகபூஷணி அம்பாள் பயபக்தியுடன் வழிப்படக்கூடிய வழிபாட்டுக்குரிய தெய்வமாகவும் சிறப்புற்று விளங்குகின்றாள். மூலஸ்தானத்தில் அம்பாள் உருவம் போல இருப்பது பழைய நாகப்பிரதிஷ்டை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். இதற்குப் பின்புறத்தில் ஐந்து தலை நாகப்பிரதிஷ்டை காணப்படுகின்றது.

 
அலைகடலில் நீந்தி அருட்கடலை நாடி வருகின்ற அடியார்களின் துன்ப துயரங்களையெல்லாம் நீக்கியருளுகின்றாள் அன்னை. சாந்தியும், அருளும், அநுக்கிரகமும் நிறைந்த அற்புதநாயகி நாகபூஷணியை அனுபூதியாளர்கள் தங்கள் இதயத்தில் இருத்தி தினமும் பூஜித்து வருவதனால் ஆன்மபலம் பெறுகின்றனர். 
அந்நியர் இக்கோயிலை அழித்தபோது  கோயில் தேர் தானாகவே உருண்டு கடலில் அமிழ்ந்து விட்டதாம். பௌர்ணமி தினங்களில் தேர்முடி கடலில் தெரிவதாகவும் சரித்திர வரலாறுகள் கூறுகின்றன. 
ஆண்டுதோறும் ஆனி மாதம் பிறந்துவிட்டால் நயினையம்பதி நாகபூஷணி அம்மனுடைய ஆலய நினைப்பு சைவ நன்மக்களுக்கு வந்துவிடும். அடியார்கள் நித்தம், நித்தம் கூடி நின்று மணியோசையால் தங்கள், தங்கள் கவலைகள் எல்லாம் மறக்கச் செய்யும் அம்மன் ஆலய உற்சவமென்றால் மிகையாகாது. 
உலகமெல்லாம் வாழுகின்ற சைவநன்மக்கள் எல்லாரும் கரங்குவித்து வரம் வேண்டி நிற்கும் உற்சவகாலத்தில் பக்தர்களின் வேண்டுதல்களை ஏற்று அவர்களின் நேர்த்திக் கடன்களைப் பூர்த்திசெய்து அருள்மாரி பொழிகின்றாள் அன்னை. அடியார்களுக்கு அருள் சுரந்து கொண்டு நயினையம்பதியில் வீற்றிருக்கும் அம்பிகை "அமுதசுரபி"யில் அன்னபூரணியாக நின்று அமுது சுரக்கின்றாள். 


நயினையில் "இந்திரலோகம்"  எனக் கூறக்கூடிய வகையில் அன்னையின் ஆலயம் சிறப்புற அமைந்துள்ளது. நாள்தோறும் நயினை ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலயத்திற்கு வருகின்ற அடியார்களுக்கு அமுதூட்டும். “அன்னபூரணி"யாக நாகபூஷணி அம்பாள் திகழ்கின்றாள்.இன்றுவரை தினந்தோறும் நித்திய அன்னதானப்பணி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 
நயினை ஸ்ரீநாகபூஷணி அம்பாளை ஆண்டுந்தோறும் நடைபெறும் திருவிழாக் காலங்களில் தரிசிக்க வருகின்ற பல்லாயிரக்கணக்கான அடியார்களுக்கு அன்னதானப்பணி கடந்த 1960ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்து இன்று வரையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.