You are here : Archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சிதைகிறதா தஞ்சை பெரிய கோயில்?

November 30 , 2017


தஞ்சை பெரி­ய­கோயில் தமி­ழனின் சிற்­பக்­கலை மற்றும் கட்­ட­டக்­கலை அறி­வுக்கு ஒரு உன்­னத எடுத்­துக்­காட்­டாகத் திகழ்­கி­றது.

உலக மக்கள் அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்தி, ஆயிரம் ஆண்­டுகள் கடந்தும் இன்­ற­ளவும் கம்­பீ­ரமாய் உறு­தி­யுடன் நிற்­கி­றது தஞ்சை பெரிய கோயில். இதன் உறு­தித்­தன்­மை­யில்தான் தற்­போது பல­ருக்கும் கேள்­விகள் எழத்­தொ­டங்­கி­யுள்­ளன.

மிகப் பெரிய நிலப்­ப­ரப்பில் அமைந்­தி­ருப்­பது தஞ்சை பெரிய கோயில். அக்­கா­லங்­களில் தஞ்சை மக்­களின் மாலை­நேர சர­ணா­ல­ய­மாகத் திகழ்ந்­தது பெரிய கோயில்.

சந்­தி­யா­கால பூஜை­யின்­போது பெரு­வு­டை­யாரை தரி­சித்­து­விட்டு, பரந்த புல்­வெ­ளியில் அமர்ந்­த­படி நெடு­நேரம் இறை­வனை தியா­னித்­து­விட்டு எழும்­போது, அவர்­களின் மனங்கள் பர­வ­சத்தால் நிறைந்­தி­ருக்கும். பின்னர், இரவு உணவு முடித்து உறங்கச் செல்லும் அவர்­களின் மறுநாள் விடியல் அத்­தனை உற்­சா­க­மாகத் தொடங்கும்.

ஆனால்... இன்று..?

பெரிய கோயிலும் இருக்­கவே செய்­கி­றது. நாளும் பக்­தர்கள் வரு­வதும் வாடிக்­கை­யா­கவே இருக்­கி­றது. ஆனால், நாளை பெரிய கோயிலின் நிலை? காரணம் பெரிய கோயிலைச் சுற்றி நிற்கும் சர்ச்­சை­கள்தான்.

தஞ்சை கோயிலில் நடை­பெறும் விழாக்­களில் கலந்­து­கொள்ளும் ஆட்­சி­யா­ளர்­களின் பதவி நிலைக்­காது என்று ஒரு தவ­றான நம்­பிக்கை காலம்­கா­ல­மா­கவே நிலவி வரு­வது பலரும் அறிந்த விஷ­யம்தான்.

அதேபோல், 1997-ஆம் வருடம் தஞ்சை பெரிய கோயிலில் கும்­பா­பி­ஷேகம் நடை­பெற்­ற­போது, யாக­சாலை பூஜை­யின்­போது பந்­தலில் பற்­றிய தீ கோயில் முழு­வதும் பரவி, 48 பேர் உயி­ரி­ழந்­ததும், பலரும் படு­காயம் அடைந்­ததும் நடை­பெற்­றது.

இத­னா­லெல்லாம், தஞ்சை பெரிய கோயில் பற்­றிய விஷ­யங்­களில் ஆட்­சி­யா­ளர்கள் போதிய கவனம் செலுத்­து­வ­தில்லை. அதன் கார­ண­மா­கவே, தஞ்சை பெரிய கோயி­லுக்குக் கும்­பா­பி­ஷேகம் நடை­பெற்று 20 வரு­டங்­க­ளுக்கு மேலா­கியும் இன்னும் கும்­பா­பி­ஷேகம் நடை­பெ­றாமல் இருக்­கி­றது. அதற்­கான முயற்­சி­கள்­கூட மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

பொது­வாக 12 ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை கும்­பா­பி­ஷேகம் நடத்­தப்­ப­டு­வது வழக்கம். அதன்­படி 2009ஆம் ஆண்டு நடை­பெற்­றி­ருக்க வேண்­டிய பெரிய கோயில் கும்­பா­பி­ஷே­க­மா­னது 20 ஆண்­டுகள் ஆகியும் நடத்­தப்­ப­டாமல் இருக்­கி­றது.

தற்­போது கோயிலின் ஒரு­சில இடங்­களில் விரி­சல்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. பெரிய கோயிலின் வழி­பாட்­டு­மு­றைகள் திட்­ட­மிட்டு மாற்­றப்­ப­டு­வ­தா­கவும், கோயில் கட்­டு­மா­னங்கள் சிதைக்­கப்­ப­டு­வ­