You are here : Archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மனித எலும்புகளால் உருவான கட்டிடங்கள்!திகைக்க வைக்கும் கல்லறைகள்

January 9, 2018


மரணம் குறித்து அச்சம் எல்லாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு உயிர் இந்த உலகத்தில் பிறந்து விட்டது என்றாலே அதற்கான மரணமும் நிச்சயமாக ஒரு நாள் இருக்கும்.

அந்த ஒரு நாள், மரணம் வரப்போகிற அந்த நாள் தெரியாத வரையில் அந்த சுவாரஸ்யத்திலேயே வாழ்க்கை நகரத்துவங்கும். சில நேரங்களில் மரணித்தவர்கள் உலாவுகிறார்கள்.

அவர்கள் தான் பேய், பிசாசு என்று அடையாளப்படுத்துகிறோம். பேய் உண்மையில் இருக்கிறதா என்ன?

இந்த க்யூரியாசிட்டி நம்மில் பலருக்குமே இருக்கிறது. நம் கற்பனைகளுக்கு தீனி போடும் விதமாக சினிமாவில் வரிசையாக பேய்ப்படங்களையே காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த இடங்களும், அதனைச் சுற்றியிருக்கும் மர்மங்களும் ஒரு கணம் உங்களையே திகைக்க வைக்கும்.

ஜெவிஷ் கல்லறை : பதினைந்தாம் நூற்றாண்டில் பராகுவேவில் வாழ்ந்த மக்கள் இந்த கல்லறையை பயன்படுத்தியிருக்கிறார்கள். இங்கே எத்தனை பேர் வாழ்ந்தார்கள், எத்தனை பேர் புதைக்கப்பட்டார்கள் என்ற விவரமே கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த அளவிற்கு பிணம் புதைக்கப்பட்ட இடத்திற்கு மேலும் மேலும் பல லேயர்கள் பிணங்களை புதைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இந்த இடத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கேட்டகோம்ப்ஸ் : பாரிசில் வாழ்ந்த மக்கள் முந்தைய காலங்களில் பயன்படுத்திய ஓர் கல்லறை வழக்கம் இது. ரோம் நாட்டில் வாழ்ந்த மூதாதையர்கள் இந்த முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

 செயிண்ட் லூயிஸ் : செயிண்ட் லூயிஸ் 1 என்று அழைக்கப்படும் இந்த கல்லறை வூடூ மகாராணியான மேரி லேவ்யூவினடையது. இங்கே உறங்கிக் கொண்டிருக்கும் மகாராணியை எழுப்பினாள் அல்லது அவரை தொந்தரவு செய்தால் பேய் பிடிக்கும் என்று அந்த மக்கள் நம்புகிறார்கள்.

 போலீசாரின் உண்மை முகம் வெளிப்பட்ட உறைய வைக்கும் சம்பவங்கள்! ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சோக வரலாறு! உருளை கிழங்கை பயன்படுத்தி கருவளையத்தை போக்குவது எப்படி?

வேலி ஆஃப் கிங்க்ஸ் : எகிப்து நாட்டில் வாழ்ந்த அரசர் ஒருவரின் கல்லறையாக இது இருந்திருக்கிறது. மேற்சொன்ன மகாராணியின் கதையை விட இது பயங்கரமானதாக இருக்கிறது.

ஒரு முறை ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தை ஆய்வு செய்வதற்காக கல்லறையிலிருந்து ஒரு கல்லை நகர்த்தியிருக்கிறார்கள். நகர்த்திய சிறிது நேரத்திலேயே அவர்களின் உயிர் பிரிந்து விட்டதாம்.

அதனால் உள்ளே மக்கள் அப்பகுதியையே சற்று அச்சத்துடன் தான் கடக்கிறார்கள். சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் உள்ளே சென்று புகைப்படம் எடுத்து வந்தது பயங்கரமாய் பேசப்பட்டது.

 கேப்ச்சின் க்ரிப்ட் : ஐந்து அறைகள் கொண்ட கட்டிடம் இது. ஆராய்சியாளர்களின் தீர்வுப்படி 1732 லிருந்து 75 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டிருக்கலாம்.

 கிட்டத்தட்ட தரையிலிருந்து மேற்சுவர் வரை முழுவதும் எலும்புக்கூடுகளாலேயே கட்டியிருக்கிறார்கள். சில பிணங்கள் பதப்படுத்தியும் வைத்திருக்கிறார்கள். அறைகள் முழுவதும் பிணங்களின் எலும்புக்கூடுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

இங்கே பல்வேறு சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்வையிட்டு வருகிறார்கள். உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லையாம்.

பேச்சிலர் க்ரோவ் : அமெரிக்காவில் மிகவும் சர்ச்சைக்குரிய கல்லறை இது. இங்கே 82 கல்லறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றிண்டு இடங்கள் பயன்படுத்தப்படாமல் காலியாக இருக்கிறது.

இப்படி ஒரு இடம் இருக்கிறது என்பதை பதினெட்டாம் நூற்றாண்டில் தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். இங்கே பெரும்பாலும் திருமணமாகாதவர்களை தான் புதைத்திருப்பதாகவும் அதனால் இந்தப் பகுதியில் பேய்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்றும் நம்பப்பட்டு வந்திருக்கிறது.

இங்கே சில காலங்களுக்கு முன் பெண் பேயின் நடமாட்டம் இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியானது.

அவள் அந்த ஆண்களின் மடோனா என்றும் வர்ணிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த பேய் முழு நிலவு நாளன்று வருகிறாள், கையில் குழந்தை வைத்திருக்கிறாள் என்று பல்வேறு கதைகளும் கிளம்பின.