You are here : Archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அழகான அரண்மனைதான் திரிபுரா மாநிலத்தில் உள்ள உஜ்ஜயந்தா அரண்மனை

March 08 , 2018


இயாவின் பல்வேறு மாநிலங்களில் மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டை
களின் ஒரு பகுதியாகவும், பிரத்யேக அமைப் பாகவும் பல்வேறு அழகான அரண்மனைகள் கட்டப்பட்டு அவை இந்தியகட்டிடக்கலையின்நுணுக்கங்களை இன்றளவும் உலகிற்கு பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.

மேலும் இந்த அரண்மனைகள் சுற்றுலா பயணிகள் கூர்ந்து கவனிக்கின்ற வகையில் கலைப்பொக்கிஷங்களாகவும் விளங்கிக்கொண்டிருக்கின்றன. உதாரணமாக, மைசூர் அரண்மனை, ஜெய்ப்பூர் அரண்மனை, உதய்பூர் அரண்மனை ஆகியவற் றைச் சொல்லலாம்.

இவற்றை போன்றதொரு அற்புதமான அழகான அரண்மனைதான் திரிபுரா மாநிலத்தில் உள்ள உஜ்ஜயந்தா அரண்மனையாகும். இந்த அரண்மனை திரிபுரா மாநிலத்தின் தலைநகரமான அகர்த்தலாவில் உள்ளது.

இதனை 1899-ஆம் ஆண்டு முதல் 1901-ஆம் ஆண்டுவரை உள்ள காலகட்டத்தில் திரிபுராவின் அரசரான மகாராஜா ராதா கிஷோர் மாணிக்கியா என்பவர் கட்டினார்.

இந்த உன்னதமான உஜ்ஜயந்தா அரண் மனை “முகல் கார்டனால்” சூழப்பட்ட ஒரு மிகப்பெரிய ஏரியின் கரையில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த அரண்மனை மாணிக்கியா வம்சத்து அரசர்களின் இருப் பிடமாக 1949-ஆம் ஆண்டு வரையிலும் இருந்தது.

பின் வந்த காலங்களில் இந்த ராஜ குடும்பத்திற்கான அரண்மனை திரி புரா அரசாங்கத்தால் 1972-ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் ரூபாய்க்கு வாங்கப்பட்டு 2011-ஆம் ஆண்டு வரை மாநில சட்டசபை கட்டிடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

சில வருடங்கள் கழித்து திரிபுரா மாநில அரசு உஜ்ஜயந்தா அரண்மனையை அரசு அருங்காட்சியகமாக மாற்றியது. இந்த அருங்காட்சியகத்தில் திரிபுராவின் வாழ்க்கை முறை, கலை, பண்பாடு, பாரம் பரியங்கள், மக்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஆசியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரபீந்திரநாத் தாகூர்தான் இந்த அரண்மனைக்கு “உஜ்ஜ யந்தா பேலஸ்” எனப் பெயர் சூட்டினார்.

மன்னர்களால் ஆளப்பட்டு வந்த இந் திய மாநிலங்களில் மிகவும் பழைமை யானதாகக் கருதப்படுவது திரிபுராவாகும். திரிபுராவின் மன்னர் பரம்பரை மகாராஜா மகாமாணிக்கியாவின்ஆட்சியோடும் முடி சூட்டலோடும் 1400-ஆம்  ஆண்டு தொடங்கியது, மாணிக்கியா மன்னர் பரம்பரையும் முதல் அரசரும் மகாராஜா மகா மாணிக்கியா தான்.

1862-ஆம் ஆண்டிலேயே மன்னர் ஈஷான் சந்திரா மாணிக்கியாவால் கட்
டப்பட்ட உஜ்ஜயந்தா அரண் மனை 1897-ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்க பேரிடரின்போது தரை மட்டமாகிப் போனது.

இதற்கு பின்பாக மகாராஜா மகாமா ணிக்கியா இந்த அரண்மனையை அகர்த்தலா நகரத்தில் மீண்டும் அழகுற கட்டி முடித்தார்.

சுமார் மூன்று ஆண்டு காலம் கட்டுவதற்கு எடுத்துக்கொண்ட இந்த அரண்மனையானது ரூபாய் 10 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அரண்மனையை எழிலோடும், நல்ல கட்டுமான நுணுக்கங்களோடும் கட்டு வதற்காக அப்போதைய புகழ்பெற்ற கட்டுமான நிறுவனமான மார்டின் பர்ன் கம்பனியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த கட்டுமான நிறுவனம் உஜ்ஜயந்தா அரண்மனையை மிக நேர்த்தியான முறையில் எகிப்திய பகோரா அரண் மனையின் சாயலாக பிரம்மாண்டமாகவும் பார்ப்போர் பிரமிக்கும் வகையிலும் எழுப்பிக்கொடுத்தது.  

அரசு அருங்காட்சியகமாக உஜ்ஜயந்தா அரண்மனை 2013ஆ-ம் ஆண்டில் உருவாக் கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் 22 கலைக்காட்சி பீடங்களில் வட
கிழக்கு இந்தியாவின் கலை, கலாச்சாரம், சரித்திரம், பாரம்பரியம் ஆகியவை தொடர்பான பொருட்கள் இடம்பெற் றுள்ளன. இவற்றில் சிலைகளும், டெரகோட்டா பொருட்களும், நாண யங்களும், செப்பு மற்றும் பித்தளைப் பொருட்களும், கல்வெட்டுக்களும். வெண்கல சிலைகளும், விலையுயர்ந்த பட்டு மற்றும் ஜவுளி பொருட்களும், ஒயில் பெயிண்டிங்கால் உருவாக்கப் பட்ட ஓவியங்களும், பழங்குடியின மக்களின் ஆபரணங்களும், பழைமை
யான இசைக்கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சிய கத்தை நிலநடுக்கம் போன்ற பேரிடர் களிலிருந்து பாதுகாப்பதற்காக 100 மில்லியன் செலவினத்தில் “சீஸ்மிக் ரெட்ரோபிட்டிங்” பாதுகாப்பு வழிமுறை யானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உஜ்ஜயந்தா அரண்மனை வளாகம் சுமார் 250 ஏக்கர் காணி பரப்பளவில் அமைந்திருக்கின்றது. அரண்மனையில் பொது அறைகள்,  முடிசூட்டு விழாவிற்கான அறை, தர்பார் ஹால், நூலகம், வரவேற்பறை ஆகியவை அடங்கியுள்ளன. அகர்த்தலா நகரத்தின் நடுவில் அரண் மனையின் கட்டிடங்களும் மைதானங் களும் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் வியாபித்திருக்கின்றன.

இந்த அரண்மனை யில் சீனா அறை என்ற ஒன்று இருக் கின்றது. இதனை சீனாவிலிருந்து வந்த கலைஞர்கள் உருவாக்கினார்கள் என்று சொல்லப்படுகின்றது. இந்த இரண்டடுக்கு அரண்மனையானது மிகப் பெரிய இரண்டு குவி மாடங்களை கொண் டுள்ளது.

இந்த அரண்மனையின் கட்டிடக்கலையின் நுணுக்கங்கள் முகலாய, ரோமானிய மற்றும் பிரிட்டிஷ் பாணிகளை உள்ளடக்கியதாக உள்ளது. அரண்மனை யின் பிரதான நுழைவு வாயிலுக்கு முன்பாக தற்போது இசை நீரூற்று உருவாக்கப் பட்டுள்ளது. அரண்மனையை சுற்றிலும் இரண்டு பெரிய செயற்கை குளங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உஜ்ஜயந்தா அரண்மனையைச் சுற்றிலும் லட்சுமி நாராயணா ஆலயம், உமா மகேஸ்வரி ஆலயம், காளி மற்றும் ஜெகன்னாதர் ஆலயம் ஆகியவை அமைந்துள்ளன.