Kalaikesari
You are here : Archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அம்பாறை மடத்தடியில் புராதன ஆலயம் கண்டுபிடிப்பு!

April 26.2018


12ஆம் நூற்­றாண்டின் சோழர் காலத்­துக்­கு­ரி­ய­தென நம்­பப்­படும் புரா­தன ஆல­ய­மொன்று சிதைந்த நிலையில் மடத்­த­டியில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அம்­பாறை மாவட்­டத்தின் நிந்­தவூர் பிர­தே­சத்­தி­லுள்ள மாட்­டுப்­பளை எனு­மி­டத்தில் வயல்­வெ­ளி­களால் சூழப்­பட்­டுள்ள மடத்­தடி மீனாட்சி அம்மன் ஆல­யத்­துக்கு அருகில் இப்­பு­ரா­தன ஆலயம் அமைந்­துள்­ளது.

இலங்­கையின் மிகவும் தொன்­மை­வாய்ந்த மடத்­தடி மீனாட்சி அம்மன் ஆலயம் மாட்­டுப்­ப­ளையில்  அமைந்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வெகு­வாகச் சிதைந்த நிலையில் வயல்­வெ­ளிக்கு மத்­தி­யி­லுள்ள பரந்த மேட்­டு­நி­லப்­ப­கு­தியில் காடு­மண்டி இவ்­வா­லயம் காணப்­ப­டு­கின்­றது.

இப்­பு­ரா­தன ஆல­யத்தைப் பார்­வை­யிட மக்கள் முண்­டி­ய­டிப்­ப­தைக்­கா­ணக்­கூ­டி­ய­தா­யுள்­ளது.

நேற்று முன்­தினம் அங்­கு­சென்­ற­வர்­களை  ஆல­யத்­த­லைவர் கோவிந்­த­சாமி கம­ல­நாதன் செய­லாளர் கே.சண்­மு­க­நாதன்    பொரு­ளாளர் உள்­ளிட்ட ஆலய நிரு­வாக சபை­யினர் அழைத்­துச்­சென்று அப்­பு­ரா­தன இடங்­களைக் காண்­பித்­தனர்.

பொல­ந­று­வைக்­கா­லத்தில் அவ் இரா­ச­தா­னியை ஆண்ட சோழர் இவ்­வா­ல­யத்தை இங்கு அமைத்­தி­ருக்­க­லா­மென நம்­பப்­ப­டு­கின்­றது.  பொல­ந­றுவைச் சிவன் ஆல­யத்தை நிர்­மா­ணிப்­ப­தற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டதைப் போன்ற செங்­கற்­களே இந்த ஆல­ய­த­திலும் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வ­ரு­கி­றது

14 அங்­குல செங்­கற்­க­ளா­லான இவ்­வா­லய சிதை­வு­க­ளுடன் சுற்­ற­வ­ர­உள்ள கட்­ட­டத்தின் ஒரு­சில பகு­திகள் காணப்­ப­டு­கின்­றன.

காடு­மண்டி மரம் புற்­க­ளுக்கு மத்­தியில் செடி­கொ­டி­க­ளுக்­கி­டையில் இவ்­வ­ள­வு­கா­லமும் இப்­பு­ரா­தன ஆலயம் மறைந்­தி­ருந்­தது.

இவ்­வா­ல­ய­ம­ருகில் சுமார் 50அடி தொலையில் தீர்த்­தக்­கு­ள­மொன்றும் இவ்வாறு காடுமண்டிய நிலையில் காணப்படுகிறது.

இங்கு புதிதாக அமைக்கப்பட்டுவரும் ஆலயத்தில் மிகவிரைவில்  கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுவருவதாகவும்  ஆலயத்தலைவர் கோ.கமலநாதன் மேலும் தெரிவித்தார்..