You are here : Archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பண்டைய நூற்றாண்டுகளில் சிறப்பு பெற்ற கோவிந்தன் மலை..!

February 11, 2016




கொழும்பிலிருந்து கிழக்கே 341 கிலோமீற்றர் தூரத்தில் மொனராகலை மாவட்டம் சியம்பலாண்டுவ பிரதேச சபை பிரிவின் கீழ் 'கோவிந்தன் மலை' என்ற ஏறத்தாள 558 மீற்றர் உயரம் கொண்ட குன்று கிழக்கு மேற்காக சியம்பலாண்டுவ நகரிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

'வெஸ்மினிஸ்டர் அபே ' என்று ஆங்கிலேயரால் அழைக்கப்பட்ட இக்குன்று பிரித்தானியரால் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சிங்கள மக்களினால் 'கோவிந்த ஹெல' எனவும் 'கோவிந்திசீல' எனவும் அழைக்கப்படுகின்றது.

கருமைநிறம் கொண்ட கற்பாறையாக காட்சியளிக்கும் இதன் தோற்றத்தை வைத்து கர்ண பரம்பரைக் கதையொன்று வழக்கத்தில் இருந்து வருகின்றது.

ஒரு சதுர கிலோமீற்றருக்கு 49 பேர் என்ற சனத்தொகை அடர்த்தி கொண்டு காணப்படும் இந்தக் குன்றின் அடிவாரத்தில் பௌத்த ஆலயமும் பௌத்த மடமுமே கல்லாலான கட்டிடங்களாகக் காணப்படுகின்றன.

கோவிந்தன் மலையில் நுழைவாயிலில் பெரியதொரு அரசமரமும் அதனையடுத்து பௌத்த மடமும் ஸ்ரீ பரகும்பா விகாரையும் அமைந்திருக்கின்றன.

மலையடிவாரப் பிரதேசம் குளுகுளு என்று இதமாகவும் மிதமான காற்றும் வீசிக் கொண்டிருப்பதனால் மனதில் உற்சாகமும் ரம்மியமும் நிறைந்திருக்கும்.

இங்கு அடிக்கடி மழை பெய்வதால் நீர் நிலைகளில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். மேலும் ''பண்டைய நூற்றாண்டுகளில் சிறப்புப் பெற்ற கோவிந்தன் மலை'' குறித்து பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன் அவர்களின் கட்டுரையை படிப்பதற்கு.........

இக்கட்டுரையை முழுமையாக வாசிக்கவும், மேலும் சில அரிய கட்டுரைகளை வாசிக்கவும் 2016 ஜனவரி மாத கலைக்கேசரியை வாங்குங்கள். தொடர்புகளுக்கு :  ‘கலைக்கேசரி.

Contact : 
+11-7322700/746 / kalaikesari@expressnewspapers.lk