You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இந்த பாகுபலியை தெரியுமா?

June 17 2016


மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் பாகுபலியும் ஒன்று. இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் உண்மையில் ஒரு பாகுபலி இருந்திருந்திருக்கிறார். அவருக்கான பிரமாண்ட சிலையும் ஓரிடத்தில் அமையப்பெற்றுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?

இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஹஸன் மாவட்டத்தில் உள்ளது சரவணபெலகுளா. அங்குதான் பகுபாலி என்று அறியப்படும் கோமதீஸ்வரருக்கு ஒரே கல்லில் 67 அடி உயரமும் 60 தொன் எடையும் கொண்ட சிலை‍யையெழுப்பப்பட்டுள்ளது.

யார் இந்த பகுபாலி? 
சமணர்களின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபா மன்னனுக்கு 100 மகன்கள். அதில் பரதன் எனும் தலைமகனுக்கு தக்கசமயத்தில் முடிசூட்டு விழா நடக்க இரண்டாவது மகனான பகுபாலி கோபம் கொள்கிறார்.

தனக்கு ராஜ்யத்தை ஆளும் தகுதி இல்லையா? என கேட்டு சகோதரன் பரதனோடு போரிட்டு வெற்றி வாகை சூடுகிறார். ஆனால், மறுநாளே போரில் தோற்ற பரதனின் வாடிய முகம் கண்டு பதறும் பகுபாலி, துறவறம் மேற்கொள்கிறார். இதனால் பின்னாளில் பாகுபலியை மக்கள் கோமதீஸ்வரராக வணங்க ஆரம்பித்தனர்.

சரவணபெலகுளா என்ற ஊரில் பாகுபலிக்கு வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஒற்றைக் கல்லால் ஆன கோமதீஸ்வரர் சிலைக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தகாபிஷேக திருவிழாவில் அபிஷேகம் செய்யப்படுகிறது.