You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
'விமர்­ச­னங்­களை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களே கலை,இ­லக்­கியத்துறைக்கு பொருத்தமானவர்கள்'

June 15, 2017


 கலை, இலக்­கியத்துறையில் செயற்­ப­டுதல் என்­பது கற்­றுக்­கொண்­டி­ருக்­கும்­போதே சாத்­தி­ய­மா­கின்­றது.  வாசிப்பில் அதிகளவு தம்மை ஈடுபடுத்த வேண்டியுள்ளது.

ஆனால், இக்காலத்தில் வாசிப் மீதான ஆர்வம் குறைவடைந்து வருகின்றது. மொழி ஆளுமையும் குறைந்­து­விட்­டது. நிச்­ச­ய­மாக கலை, இலக்­கி­யத்­து­றையில் பிர­கா­சிப்­ப­தற்கு வாசிப்பு மிக  அவ­சி­ய­மா­கின்­றது.

அத்துடன் இத்துறையில் இருக்க வேண்டுமாயின் விமர்­ச­னங்­களை ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருத்தல் வேண்டும் என்கிறார் கலைஞர் ஏ.ஓ.அனல். சங்கமத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பகிர்ந்துக்கொண்ட கருத்துக்கள் எமது வாசகர்களுக்காக...

கவிதை, ஓவி­யத்­து­றையில் செயற்­ப­டு­வ­தற்கு பின்­பு­ல­மாக அமைந்­தவை பற்றி ...?
இத்­து­றை­களில் நான் ஈடு­ப­டு­வ­தற்­கான பின்­புலம்  எனது தந்தை என்றே கூற­வேண்டும். யாதும் அறியா வயசு. தன் மார்பு மீது எனை­ய­ணைத்து உறங்க வைக்க பாடிய பாடல்­களின் இன்­னி­சை­களே இத­யத்தில் இசையின் ரசிப்­புக்­களை அல்­லது விருப்­புக்­களை இயல்­பா­கவே என்னில் ஊன்­றி­விட்­டது.

அதுவே காலப்­போக்கில் கலைத்­துறை ஈடு­பா­டு­க­ளுக்கு அடித்­த­ள­மாக அமைந்­தது. 

பல்­வேறு  சவால்­க­ளுக்கு மத்­தியில் படைப்­பா ள­ராக உரு­வெ­டுத்­தீர்கள்..?
சவால்­களை வெற்றி கொள்ளல் என்­பது வாழ்­த­லுக்­கான சுவையை மனி­த­னுக்குள் ஈர்த்­து­விடச் செய்­தது.

மனதின் ஈர்ப்பு உயிர்­வாழ்­வ­தற்­கான உயிர்ப்பு. அதுவே உயர்­வுக்­கான துடிப்பு. இந்­நி­லை­யில்தான் எனது வாழ்வு இள­மையில் வறு­மை­யோடு இருந்­த­தால் மகிழ்ச்­சிகள் எல்­லாமே மறைந்து கவ­லைகள் மற்றும் சோகங்­களை சுமக்­க­லா­யிற்று. அடுத்த கட்ட நகர்­வு­க­ளுக்குள் இவை தொடர்ந்தும் வந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தனால் வறு­மை­யோடு தினமும் போராட வேண்­டி­ய­தா­யிற்று.

இத­னாலோ என்­னவோ 'வாழ்க்கை என்­பது ஒரு போராட்டம்' என்று சொன்­னார்கள் என்று கூட நினைக்­கத்­தோன்றும்.

  வழி­காட்­டல்கள் இல்­லாத சுய எண்­ணங்­களின் எத்­த­னிப்­புக்­களால் இத்­த­கைய சவால்­களை வெற்றி கொள்­ளத்­து­டித்­தெ­ழுந்தேன். வெறி­கொண்டு விழித்­தெ­ழுந்தேன். விரை­வு­கொண்டு விடிவு கண்டேன். இந்த விடி­வு­களின் விடி­வெள்­ளி­யாக எனது படைப்­புக்கள் உரு­வெ­டுத்­தன. துரோ­கத்தின் நிழல்கள் தொடர்ந்தும் உருக்­கொ­டுத்­தது. அதனால் படைப்­புக்கள் அனைத்தும் கன­தி­யா­னது.காலத்தின் காயத்­திற்கு கட்­டுப்­போட்­டது.  

கவிதை எழுதும் ஆர்வம் ஏன், எவ்­வாறு ஏற்­பட் டது..?
கவிதை எழு­து­கின்ற ஆர்வம் என்­பது பாட­சாலைக் காலத்­தி­லி­ருந்தே உரு­வா­கி­யது .  குறிப்­பாக கவிதை, பாட­லாக்கம், சித்­திரம் போன்ற போட்­டி­களில் பங்­கு­பற்றி பல்­வேறு சான்­றி­தழ்களும் பாராட்­டுக்களும் பெற்­றதன் விளை­வாக இன்னும் இன்னும் எழு­த­வேண்டும் என்ற எத்­த­னிப்­பு அதி­க­மா­யி­ருந்­தது. 

உங்­க­ளது பெரும்­பா­லான கவி­தைகள் எவ்வகை­யான விட­யங்­களை எடுத்­து­ரைப்­ப தாக உள்­ளன..?
எனது கவி­தைகள் சமூ­கத்தில் காணப்­படும் காதல், சமயம், சாதிச்­சண்­டைகள், அர­சியல், ஏமாற்­றங்கள், எதிர்­பார்ப்­புக்கள், தேசியம் மற்றும் விடு­தலை  என்ற ரீதியில் உள்­ள­டக்­கங்­களைக் கொண்டு விரிந்து பரந்து உள்ளம் தொடு­வதாக அமைந்­தி­ருக்­கின்­றது.

எனது கவி­தை­களை பத்­தி­ரி­கை­களில் வாசித்த நட்­புள்­ளங்கள் அன்பு மடல் எழுதி எனக்கு அனுப்­பி­யி­ருந்த வேளை குறிப்­பிட்­டி­ருந்­தார்கள் 'காயப்­பட்ட மன­திற்கு கட்­டுப்­போடும் வல்­லமை உங்கள் கவி­தைக்குள் இருக்­கின்­றது' என்று. பொது­வாக எனது கவி­தைகள் அதி­கமாக விடு­தலை மற்றும் ஆறுதல் பற்­றியே பேசி­யி­ருக்­கின்­றன. இப்­போதும் பேசு­கின்­றன. 

கவிதை, ஓவியம் ஊடாக சமூகத்தை வழிப்­ப­டுத்­த­லாமா..?
நிச்­ச­ய­மாக சமூ­கத்தை வழிப்­ப­டுத்­தலாம் என்றே கூற­வேண்டும். ஒவ்­­வொரு படைப்பும் சமூ­கத்தை நெறிப்­ப­டுத்தும் வல்­லமை கொண்­டது. சொல்­லப்­போனால் கவிதை மற்றும் ஓவியம் போன்ற கலைகள் சமூ­கத்தை சரி­யான முறையில் மாற்­றி­ய­மைப்­ப­தற்­கான இரண்டு வழிகள். இதனை எனது கவி­தைகள்,  ஓவி­யங்­களில் காணலாம்.

குறிப்­பாக எனது ஓவி­யங்களை வட­கி­ழக்கு, சப்­­ர­க­முவ மற்றும் தென்­மா­கா­ணங்­களின் பல பாட­சா­லை­களில் வரைந்­தி­ருக்­கின்றேன். அவை ஒவ்­வொன்றும் சமூக விழிப்­பு­ணர்வு கருத்­துக்­களைக் கொண்­ட­மைந்­த­வை­யா­கவே காணப்­ப­டு­கின்­றன.  

 உங்­க­ளது கவி­தை­களில் எந்த ஆளு­மை­களின் தாக்கம் மிகு­தி­யாக காணப்­ப­டு­கின்­றது..?
2000 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பத்­தி­ரி­கைகள், இணை­யத்­த­ளங்கள் மற்றும் சஞ்­சி­கை­களில் எழு­தி­வ­ரு­கின்றேன். இது­வரை யாரும் ஆளு­மை­யா­ளர்கள் பற்றி குறிப்­பிட்டுக் கூற­வில்லை.

மாறாக நான் கவிதைத் துறையில் பிர­கா­சிப்­ப­தற்கு துணையாக நின்­றவை மு.மேத்தா மற்றும் புரட்சிக் கவிஞர் புதுவை இரத்­தி­ன­துரை ஆகி­யோ­ரது  எழுத்­துக்கள் என்று சொல்­லிக்­கொள்­வதில் மகிழ்­வ­டை­கின்றேன். இது­த­விர உலகின் முன்­னோடிக் கவி­ஞர்­க­ளது கவி­தை­க­ளையும் படித்தும் ரசித்தும் வரு­கின்றேன்.  

 உங்­க­ளது ஆரம்ப கால கவி­தை­க­ளுக்கும் தற்­கால கவி­தை­க­ளுக்­கு­மி­டையே மாற்­றத்தை உண­ரு­கின்­றீர்­களா..?
ஆம். நிச்­ச­ய­மாக, ஆரம்ப காலத்தில் எழு­திய கவி­தை­களையும் இப்­போது எழு­து­கின்ற கவி­தை­க­ளையும் எடுத்­துப்­ப­டிக்­கும்­போது கவி நடை­யிலும், கவி­ந­யத்­திலும் , சொல்­லாட்சிப் பரப்­பிலும் சில வித்­தி­யா­சங்­களை உணர முடி­கின்­றது. 

கவிதை அல்­லது படைப்பு என்­பது காலத்தின் கண்­ணாடி. எனது ஆரம்ப கால கவி­தைகள் அந்தக் காலத்­திற்கு பொருந்­தக்­கூ­டி­யவையாக இருந்­தாலும் தற்­கா­லத்தில் எழு­து­கின்ற கவி­தை­க­ளி­லி­ருந்து சற்று மாறு­பட்ட தன்­மை­யினை அல்­லது மாற்­றத்­தினை கொண்­ட­மைந்­த­தாக அமைந்­து­வி­டு­வ­தை உணர முடி­கின்­றது.

இன்­றைய கவிதை மற்றும் ஓவி­யத்தின் போக்கு எவ்­வாறு உள்­ளது..?
இன்­றைய கவி­தையின் போக்கு என்­பது வேத­னைக்­கு­ரி­யது என்றே கூற­வேண்டும். ஆரம்­பத்தில் பத்­தி­ரி­கை­களில் ஒரு படைப்பு வரு­கின்­றது என்றால் அது அப்­ப­டைப்­புக்­கான அங்­கீ­கா­ர­மாக இருந்­தது.

இன்று சமூக வலைத்­த­ளங்கள் வந்­ததும் தங்­க­ளுக்­கென்று ஒரு பக்­கத்தை உரு­வாக்கி அப்­பக்­கத்தில் அங்­கத்­து­வ­மு­டைய அனை­வ­ருக்கும் கவிஞர் மற்றும் அதை­விட உயர்­வான பட்­டங்­க­ளையும், பத­வி­க­ளையும் மற்றும் விரு­து­க­ளையும் வழங்கி வரு­கின்­றனர்.

அவ்­வா­றா­ன­வர்­களின் கவி­தை­களைப் இன்று படிக்­கும்­போது கவி­தையின் போக்கும் அதன் பெறு­ம­தியும் எந்­த­ள­வுக்கு தரக்­கு­றை­வாக இருக்­கின்­றது என்­பதை நான் சொல்­லித்தான் தெரிய வேண்டும் என்­றில்லை. இக்­க­ருத்­தையே இலக்­கி­ய­வா­திகள், ஆய்­வா­ளர்கள் மற்றும் கவி­ஞர்கள் எனப் பலரும் குறிப்­பி­டு­கின்­றனர். 

இது­த­விர ஓவி­யத்தின் போக்­கினைப் பார்க்­கும்­போது நவீ­னத்­துவம், பின் நவீ­னத்­துவம் என்­ப­தற்கு அமை­வா­கவும் அதற்கு அப்பால் சில கோட்­பாட்டு விதி­மு­றை­களைத் தாண்­டியும் பரி­ண­மித்­துக்கொண்டிருக்கும் ஓவி­யங்கள் காலத்தின் நகர்வில் சுவைக்­கக்­கூ­டி­ய­தா­கவும், ரசிக்­கத்­தக்­க­தா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றன என்னும்­போது ஓவி­யத்தின் நவீ­ன­போக்கு என்­பது வர­வேற்­கக்­கூ­டிய ஒன்­றா­கவே இருக்­கின்­றது. உண்­மையில் கருப்­பொருள் மற்றும் கற்­பனை இரண்­டுமே இன்று ஓவி­யத்தை உயி­ரூட்­டு­கின்­றன.

காலத்தின் நகர்வில் வாழ்ந்­து­கொண்­டி­ருப்­ப­தற்கு வழி­ச­மைக்­கின்­றது. 

  எதிர்­கால சந்­ததியினர் கலை, இலக்­கியத் துறையில் எவ்­வாறு செயற்­பட வேண்டும் என கரு­து­கி­றீர்கள்..?
எதிர்­கால சந்­த­தி­யினர் கலை, இலக்­கியத் துறையில் செயற்­ப­டுதல் என்­பது கற்­றுக்­கொண்­டி­ருக்­கும்­போதே சாத்­தி­ய­மா­கின்­றது. அதா­வது அவர்கள் நிறை­யவே வாசிக்­க­வேண்­டி­யி­ருக்­கின்­றது. இன்­றுதான் வாசிப்பு பழக்­கமே குறைந்­து­விட்­டது. அதனால் மொழி அறி­வாற்றல் என்­பது குறைந்­து­விட்­டது.

நிச்­ச­ய­மாக கலை மற்றும் இலக்­கி­யத்­து­றையில் பிர­கா­சிப்­ப­தற்கு வாசிப்பு மிக மிக அவ­சி­ய­மா­கின்­றது. அத்­தோடு கலை, இ­லக்­கியம் தொடர்­பான விமர்­ச­னங்­களை ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். அப்­போ­துதான் இன்­றைய மற்றும் எதிர்­காலச் சந்­த­தி­யினர் கலை­, இ­லக்­கியத் துறையில் தொடர்ந்தும் பய­ணிக்க முடியும். 

 உங்­க­ளுக்கு கிடைத்­த ­சான்­றி­தழ்கள், கௌர வங்கள் மற்றும் விரு­துகள் பற்றி கூற முடி­யுமா?
2013 இல் கலா­சார அலு­வல்கள் திணைக்­களம் மற்றும் அம்­பாறை மாவட்ட செய­லகம் என்பன இணைந்து நடத்­திய கலை­ஞர்­க­ளுக்­கி­டை­யி­லான சித்­தி­ரப்­போட்­டியில் சிறந்த ஓவி­யர்­களுள் ஒரு­வ­ராக தெரிவு செய்­யப்­பட்டு சான்­றிதழ் மற்றும் பரி­சில்­க­ளையும் பெற்­றுள்ளேன்.

2014 இல் டிசம்­பர் மாதம் தென்­னிந்­திய திரைப்­பட இயக்­குனர் இமயம், கிரா­மத்துக் கலை­ஞானி பாரதிராஜா விடமிருந்து கலைஞர் கௌரவத்தை பெற்றுக்கொண்டேன்.

2015 இல் அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தினால் சிறந்த ஆற்றுகைகான சான்றிதழும் பாராட்டும் பெற்றேன்.

2016 இல் கொழும்பில் தடாகம் கலை, கலாசார இலக்கிய பன்னாட்டு அமைப்பினால் இலக்கியத்துறைக்கு ஆற்றிவரும் சேவைக்காக 'தமிழ் மாமணி' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன்.

2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தடாகம் கலை, கலாசார இலக்கிய பன்னாட்டு அமைப்பினால் சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் எனது கவிதை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டு 'கவித்தீபம்' பட்டமும் சான்றிதழும் பெற்றுக்கொண்டேன்.

2016 ஆம் ஆண்டு உலக கவிதைகள் தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கவிதைகளில் எனது கவிதையும் தெரிவு செய்யப்பட்டு கலாசார திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 'மானுடம் பாடும் கவிதைகள்' எனும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது.