You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
இசைப் பேர­றிஞர் சங்­கீத பூஷணம் வி.கே. குமா­ரசுவாமி

December 05 , 2107


 

நமது நாட்­டில் இசை நிகழ்ச்­சி­களை நடத்த வரும் இசை மேதா­வி­க­ளுக்கு ஈடு­கொ­டுக்கக் கூடிய வகையில் நமது நாட்டுக் கலை­ஞர்­க­ளுக்கு வாய்ப்­புகள் மிக மிக அரிதா­கவே இருந்த நிலை­யிலும் ஒரு சிலர் தமது இசை மேதா­வித்­த­னத்தைப் பதிவு செய்­தே­யுள்­ளனர் என்­பதை மாபெரும் இசை­யா­ளர்­களே பாராட்­டியும் புகழ்ந்தும் உள்­ளனர் என்­ப­தையும் மகிழ்ச்­சி­யுடன் நாம் வர­வேற்­கவே வேண்டும்.

இப்­படிப் பாராட்­டுக்கும், பெரு­மைக்கும் உரி­ய­வரும் இசை வல்­லா­ள­ரான மகா­ரா ­ஜ­புரம் சந்­தானம், மது­ரை ­சோமு, ஏ.கே.சி. நட­ராஜன், கல்­யாண கிருஷ்ண பாக­வதர், டி.எம். தியா­க­ராஜன், டி.கே.கோவிந்­தராவ், டி.கே.ரங்­காச்­சாரி போன்ற பெரும் பெரும் இசை மேதை­க­ளுக்­கெல்லாம் சம­மாகத் தனது வயலின் இசையால் கச்­சே­ரி­களை களை கட்ட வைத்த பெருமை யாழ்/ கரம்­பனைச் சார்ந்த கோகி­லம்­பிள்ளை குமா­ர­சு­வாமியையே சாரும். இவர் ஒரு வயலின் இசை வல்­லவர்.

இவ­ரது இசை வல்­ல­மைக்கும் கீர்த்­திக்கும் பெரு­மைக்கும் பல கார­ணங்­களை நாம் இனங்­காண முடியும். முத­லா­வ­தாக இவர் பிறந்த மண் அகில உல­கத்­திற்கும் தமிழ் மொழியை அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வரும், பல நாடு­க­ளி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களில் தமிழ் மொழி பற்­றிய ஆய்­வினை மேற்­கொள்ளக் கால்­கோ­ளாக அமைந்­த­வரும், தமிழ்த்­தூ­தராகத் திகழ்ந்­த­வரும், தேம­துரத் தமி­ழோசை உல­க­மெலாம் பரவும் வகை செய்­த­வ­ரு­மான தமி­ழ­றிஞர் பேரா. தனி­நா­யகம் அடி­களார் தமி­ழ­றிஞர் வித்­துவான் பண்­டிதர் கா.பொ. இரத்­தினம் போன்ற பெரும் பெரும் மேதா­விகள் பிறந்த சிறப்பைக் கொண்ட ஊர்­கா­வற்­று­றை­யி­லேயே குமா­ர­சு­வாமியும் பிறந்தார்.

பரம்­ப­ரை­யா­கவே ஆசார அனுஷ்­டா­னங்கள், ஒழுக்கம், இறை­பக்தி போன்ற பண்­பா­டு­க­ளை பின்­ன­ணி­யாகக் கொண்ட குடும்­பத்தில் தலைப்­பிள்­ளை­யாக கோகி­லம்­பிள்ளை–பார்­வ­தி­யம்மாள் தம்­ப­திக்கு ஆனந்தவேல் என்ற தம்­பி­யா­ரோடும் தங்­கவேல் அம்மா, சந்­தி­ர­மணி, சந்­தி­ரா­தேவி ஆகிய மூன்று சகோ­த­ரி­க­ளு­டனும் பிறந்­தார்கள்.

இவர்­க­ளோடு மட்­டு­மல்ல, இயற்­கையின் கொடை­யா­கவே இசை வளத்­தோடும் பிறந்தார் எனக் குறிப்­பிடக் கூடி­ய­ளவில் இயல்­பா­கவே பாடவும், இசை நுட்­பங்­களை உணர்ந்து சுவைக்­கவும், அவற்­றோடு சஞ்­ச­ரிக்­கவும் கூடிய வல்­ல­மையும் இவ­ருடன் இணைந்தே இருந்­த­தெனக் குறிப்­பி­டலாம்.

இவற்­றுக்­கெல்லாம் காரணம் இவ­ரது பெற்­றோரே என நாம் குறிப்­பி­டக்­கூ­டிய வகையில் குமார சுவா­மி­யி­னு­டைய தந்­தையார் நாட­கங்­களில் தானே பாடியும், பாடி நடிப்­ப­திலும் வல்­லமை பெற்­றி­ருந்­த­தோடு தாயாரும் இசைத்­து­றையில் பெரும் நாட்­ட­முள்­ள­வ­ரா­கவும், சிறுவன் குமா­ர­சு­வா­மியை எந்த வகை­யிலும் இசைத்­து­றையில் பெரிதும் ஈடு­ப­டுத்­தி­விட வேண்­டு­மென்­பதில் மிகுந்த அக்­கறை கொண்­டி­ருந்தார்.

பெற்­றோரின் விருப்­பிற்­கேற்­பவே சிறுவன் குமா­ர­சு­வா­மியும் தேவாரம், திரு­வா­சகம் போன்ற பக்திப் பாடல்­களை சுவை­மி­குந்த இசை­யோடு பாடிக் கேட்­போரைப் பெரிதும் பர­வ­சப்­ப­டுத்­தினான். சிறு­வனின் போக்கு வாக்­கு­களால் தாயாரின் மகிழ்ச்­சியோ மகனை ஒரு இசைப் புல­வ­னா­கவே ஆக்­கி­விட வேண்­டு­மென்ற கனவில் மிதந்­தது.

சிறந்த ஆளு­மைகள் பலரின் விளைச்சல் நில­மாக திகழ்ந்த ஊர்­கா­வற்­றுறை புனித. அந்­தோ­னியார் கல்­லூ­ரியில் இள­மைக்­காலக் கல்­வியைப் பெற்றுக் கொண்ட இச்­சி­றுவன் இசைத்­து­றை­யிலும் தனது வித்­து­வத்தை கோவில் திரு­வி­ழாக்­களின் போதும் இசை­வி­ழாக்கள் மற்றும் இலக்­கிய விழாக்கள், தமிழ் விழாக்கள் போன்ற வைப­வங்­களின் போதெல்லாம் தனது இனிய குரலால் இசை நிகழ்த்தி பல­ரு­டைய பாராட்­டு­க­ளையும் வாழ்த்­துக்­க­ளையும் பெற்றுக் கொண்டான்.

இயல்­பா­கவே சிறு­வ­னி­ட­மி­ருந்த இசை வல்­ல­மையை வழிப்­ப­டுத்த மாமனார் வைத்­தி­ய­லிங்­கமும் அக்­கறை கொண்டு இவ­ரு­டைய ஸ்ருதி அட்­சர சுத்­தம்­போன்­ற­வற்றை நன்கு தெளி­வு­ப­டுத்தி மென்­மேலும் திற­மை­பெற உத­வினார்.

எனினும் இவர்கள் எதிர்­பார்த்­த­ளவு சிறு­வனின் குரல் வளம் ஒத்­தி­சை­யாது உடல் வளர்ச்சிக் கோளா­றினால் மாறு­ப­டவும் வாத்­திய இசையில் கவ­னத்தைச் செலுத்த வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டது. எனவே பல்­கலைத் திற­மையைத் தன­தாக்கி வளர்த்துக் கொண்ட குமா­ர­சு­வாமி வய­லினைக் கையில் ஏந்திக் கொண்டார்.

பெற்றோர் மக­னது ஆற்­றலை வெளிக் கொணரப் பள்ளிப் படிப்பை விட்­டு­விட்டு இந்­தி­யாவில் கர்­நா­டக இசை ­ப­யில அனுப்பி வைத்­தனர். குமா­ர­சு­வா­மியும் சுமார் ஒரு­வ­ருட காலம் வாய்ப்­பாட்டு இசையை சாம ஐயங்கார், பூச்சி ஸ்ரீநி­வாச ஐயங்கார் போன்­றோ­ரிடம் பாடம் கேட்டுப் பயின்றார்.

இவர்­களிடம் படிக்­கும்­போது கூடவே அரியக்குடி இராமா­னுஜ ஐயங்­காரும் இவ­ரோடு சேர்ந்தே பாடம் கேட்­டவர் என்­பதும் மறக்க முடி­யாத விட­ய­மாகும்.

இசை­யென்ற ஆழ்ந்த சமுத்­தி­ரத்தில் மேற்­கண்ட வல்­ல­ளார்­க­ளிடம் பெற்றுக் கொண்ட இசை அறி­வோடு மென்­மேலும் அக்­க­லையை வளத்­தோடு வளர்த்­தெ­டுக்க மேலும் சில ஆண்­டுகள் கும்­ப­கோணம் இரா­ஜ­மா­ணிக்­கம்­பிள்ளையிடம் குரு­கு­ல­வச முறையை மேற்­கொண்டு  சில ஆண்­டுகள் வயலின் வாத்­திய இசையைக் கற்றார்.

கற்க கற்­கவே கல்­லா­மையின் அளவு தெரியும் என்­ப­தனால் போலும் 1945 தொடக்கம் 1948 ஆம் ஆண்­டு­வரை சென்னை அண்­ணா­மலைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சிறப்­பாக வயலின் இசையை தெளி­வு­பெறக் கற்றார். இவ­ரது அபார திற­மையைக் கணிப்­பிட்ட கழ­கத்­தினர் ‘சங்­கீத பூஷணம்’ என்ற சிறப்புப் பட்­டமும் கொடுத்துப் பாராட்டி மகிழ்ந்­தனர்.

சென்­னை­யி­லி­ருந்து வந்து “சங்­கீத பூஷ­ண­மாக” ஊரில் காலடி வைத்த குமா­ர­சு­வாமி இசைப் புல­மையைப் பயன்­ப­டுத்த பல இசைக் கலை மன்­றங்கள், இலங்கை வானொலி கல்­லூ­ரிகள் எனப் பல அமைப்­புகள் வர­வேற்றுப் பய­ன­டைந்­தன. இந்த ரீதி­யில் இலங்கை வானொலி அதன் தமிழ் இசைப் பிரிவின் வாத்­தியக் குழுவின் உப­த­லை­வ­ராக இவரை நிய­மித்துக் கொண்டு பயன்­பெற்­றது.

அப்­ப­டியே கொ/ சைவ மங்­கையர் கழகம், இசைக் கலை­மன்­றங்­களும் கரம்பொன் சண்­மு­கா­னந்தா வித்­தி­யா­லயம், யாழ்./ சன்­மார்க்க வித்­தி­யா­லயம் எனப் பல பாட­சா­லை­களும் இசை கற்­பிப்­ப­தற்­காக இவரைத் தம்­முடன் இணைத்துக் கொண்­டன. அத்­தோடு தனி வாத்­திய இசை­யா­கவும் பல இசைக் கலை­ஞர்­களின் கச்­சே­ரிகள், விழாக்கள் போன்­ற­வற்­றுக்­கெல்லாம் அனு­ச­ர­ணை­யாகப் பக்­க­வாத்­தி­ய­மாக வயலின் இசையை நல்கி அவர்­க­ளது இசைக்கு மெரு­கூட்டிச் சிறப்பு செய்தார்.

வட இலங்கைச் சங்­கீத சபை உறுப்­பி­ன­ரா­கவும்  பரீட்­ச­க­ரா­கவும் உறுப்­பி­ன­ரா­கவும் பணி­செய்து உத­விய இவர் உரிய பரு­வத்­தி­லேயே தமது ஊரைச் சேர்ந்த மங்கை நல்­லா­ளான புவன சுந்­தரி என்ற பெண்ணைத் திரு­மணம் செய்தார். இல்­லற வாழ்வின் பெரும் பேறாக இத்­தம்­ப­திக்கு நான்கு ஆண் குழந்­தை­களும் இரு பெண் குழந்­தை­களுமாக ஆறு குழந்தைச் செல்­வங்கள் கிட்­டி­யுள்­ளனர்.

இவர்­களும் சுமா­ரான இசை­ய­றி­வுடன் திகழ்ந்­தாலும் தந்­தை­யாரைப் போல நாட­றிந்த இசை விற்­பன்­ன­ராக வரு­வ­தற்குக் காலம் தான் பதில் தர வேண்டும். ஆனாலும் இசை ஆர்­வமும் இவர்­க­ளுக்கு உண்­டென்­பதை  நாம் மறைத்து வைக்க முடி­யாது.

“தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’’ என்ற பொன் வாக்­கிற்­க­மை­ய தான் பெற்றுக் கெண்ட இசை வெள்­ள­த்தை அள்ளி அள்ளி எல்­லோரும் சுவைக்க, அனு­ப­விக்க கொடுக்க வேண்டும் என்ற நோக்­குடன் பல இசை சார்ந்த அமைப்­புக்­க­ளோடு இணைந்து இசைப் பணியில் உத­வினார்.சில காலம் யாழ். இரா­ம­நாதன் நுண்­கலைக் கல்­லூ­ரியில் வயலின் விரி­வு­ரை­யா­ள­ராக பணி­யாற்­றிய இவ­ரது சேவை பாராட்­டிற்­கு­ரி­யதே!

சுமார் 45 ஆண்­டு­க­ளுக்கு மேலாக இசைத்­து­றைக்கு இவர் ஆற்­றிய பணிகள் அளப்­ப­ரி­யவை. இதற்­காக இவர் பெற்றுக் கொண்ட பாராட்­டு­களும் புகழ்­மா­லை­களும் கொஞ்ச நஞ்­ச­மல்ல. இவற்றுள் பல்­லாண்­டு­க­ளாக குறிப்­பி­டக்­கூ­டிய பெரும் புக­ழு­டனும் சிறப்­போடும் வருடா வருடம் நடை­பெற்­று­வரும் கம்பன் இசை விழா­வில் 1994ஆம் ஆண்டு வி.கே. குமா­ர­சு­வாமியின் இசைப் புல­மை­யையும், இசைப் பணி­யையும் பாராட்டி இசைப் பேர­றிஞர் விருது வழங்கி எடுக்­கப்­பட்ட பெரு­விழா உரத்­துக்­கு­றிப்­பி­டக்­கூ­டிய ஒன்றாகும்.

அத்தோடு இந்த இசைக்கொடை ஒரு தனி மனிதனின் சொத்தல்ல. அது பலரும் பங்கு கொண்டு சுவைக்கும் ஊரின் சொத்து, உலகின் சொத்து என்பதை அடையாளப்படுத்துவது போல தந்தையாருக்கான கௌரவ பட்டமளிப்பு விழாவின்போது அவரது பிள்ளைகள் யாவரும் ஒன்றிணைந்து இசை மேதையான “ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பஞ்சரத்ன கீர்த்தனைகள்” என்ற அரும்பெரும் இசைக் களஞ்சியத்தை நூலாக வெளியிட்டு வைத்தமையே பாரம்பரியமாக இசைக்கும் இசைப் பணிக்கும் தம்மை அர்ப்பணித்துள்ள சத்தியவாக்காக நேயர்களை உணர வைத்துள்ளது.

03.03.1925 இல் இம்மண்ணுலகில் பிறந்த வி.கே. குமாரசுவாமி ‘சங்கீத பூஷணம்’, இசைப் பேரறிஞர் என்ற பட்டங்களால் போர்த்தப்பட்டு இசையோடு இணைந்த இப்பெருமகன் 29.03.2009 அன்றோடு தனது மூச்சை நிறுத்திக் கொண்ட வெற்றிடத்தை அவரது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் நிறைவு செய்ய வேண்டுமென்பதே இச் சமுதாயத்தின் வேண்டுகோளாகும்.