You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




”தமிழுக்காக நாம் தமிழராய் நாம்”

2018-07-08


தமிழ் மொழியையும் தமிழரின் இன அடையாளத்தையும் பாதுகாக்கும் நோக்குடன் “தமிழுக்காக நாம் தமிழராய் நாம்” எனும் தொனிப் பொருளில் கிழக்கில் தமிழ் மொழியை முதன்மை படுத்தும் விசேட செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ் நிகழ்வானது எதிர்வரும் திங்கட்கிழமை 09.07.2018 அன்று செங்கலடி பிரதேச செயலக மண்டபத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வுக்கு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

எனவே தாய் தமிழ் மொழியை வளர்த்து தமிழினத்தை பாதுகாப்பதற்கு இளைஞர்கள்,யுவதிகள்,சமூக ஆர்வலர்கள்,என அனைவரையும் தமிழுக்காக நாம் தமிழராய் நாம் என்ற கோசத்துடன் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றார்  சதாசிவம் வியாழேந்திரன் .