2018-07-30
ஆரோக்கிய வாழ்வினை இயற்கையுடன் இனைந்த வாழ்க்கையே எமக்குத் தருகின்றது. இன்று நாம் நவீன வாழ்க்கை முறைகளுக்குப் பழக்கப்பட்டாலும் எமது பழமையான நடைமுறைகள் சிறந்தவை என்பதை யாராலும் மறுக்க முடிவதில்லை. பன் பாய்கள் முதல் மண் குவலை வரை அனைத்தும் எமக்கு ஆரோக்கியத்தைத் தருகின்றவையே! இவற்றின் பயன்பாடு இன்று குறைவடைந்து காட்சிப்பொருட்களாக மட்டுமே காணப்படுகின்றது.
யாழ்.பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற “முதுசம்” என்ற காண்பியல் கண்காட்சியில் மட்டக்களப்பு பன் பாய்கள் கண்காட்சி படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்சி பாய் இழைப்பதைத் தனது வாழ்வாதாரமாகக் கொண்ட சுலைமான் ஆச்சியின் முயற்சியினால் மட்டக்களப்பு பன் பாய்களின் சமூக அழகியலைப் பேசுகின்றதாக அமைந்துள்ளது.