You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பிரித்தானியாவில் இடம்பெற்ற “கோடுகளால் பேசியவன்” நூல் அறிமுக விழா

2018-07-31


ஊடகவியலாளர் மறைந்த கேலிச்சித்திரக் கலைஞர் அஸ்வின் சுதர்சனின் கேலிச்சித்திரங்களை ஆவணப்படுத்திய “கோடுகளால் பேசியவன்” நூல் அறிமுக விழா 28 ஆம் திகதி பிரித்தானியாவில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஹரோ பல்கலைக்கழகத்தில் (University of Westminster Harrow Campus, Watford Road ,Northwick Park, HA1 3TP ) நடைபெற்றது.

தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி நூல் அறிமுக விழாவின் சிறப்பு விருந்தினராக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Paul Scully பங்கேற்று நூலினை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் இவ் விழாவில் பிரதம விருந்தினராக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசும்  சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த பலரும்  பங்கேற்று சிறப்பித்திருந்தனர்.