You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நூல்களின் அறிமுக விழா

2018-08-14


ஈழத்தமிழரின் வரலாற்றுச்சின்னங்களையும் அவர்களின் வரலாறு மற்றும் கலைகலாசார பண்பாட்டு விடயங்களை ஆவணப்படுத்திய இரண்டு நூல்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் மற்றும் பணிப்பாளர், மத்திய கலாசார நிதியம், யாழ்ப்பாணம் - சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் அவர்களினால் எழுதப்பட்டு வெளியிடப்பட உள்ளது. 


இன் நிகழ்வு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர்  சி.தில்லைநாதன் அவர்களின் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.08.2018) மாலை 5.00 மணிக்கு கொழும்பு - 06 உருத்ரா மாவத்தையில் அமைந்துள்ள கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


தனது தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் மூலம் ஈழத்தமிழர் வரலாறு, பண்பாடு, தமிழர் மரபுரிமை தொடர்பான விடயங்களை முதன்மைப்படுத்தி தமிழரின் இருப்பு பற்றிய விடயங்களை அறிவியல் சார்ந்தும், தொல்லியல் ஆய்வுகள் முன்வைத்த முடிவுகள் சார்ந்தும் ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ என்ற நூலும், ஈழம் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஈழத்தமிழரின் மறைந்து போகும் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாத்து, ஆவணப்படுத்துவது தொடர்பாக ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ என்ற நூலும்  இதன்போது வெளியிடப்பட உள்ளன.