2018-08-16
கேரள கோவில்களில் ஆண்டுதோறும் மிக விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு விழா நிறைபுத்தரிசி பூஜை. சகல ஐஸ்வர்யங்களும் அருளும் இப் பூஜை நாட்டில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பசியின்றி வாழவும் வேண்டி விளைந்த நெற்கதிர்களை வைத்து பூஜித்து அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று கேரளாவில் அனைத்து கோவில்களிலும் நிறை புத்தரிசி பூஜை நடந்தது.
சபரிமலையில் பலத்த மழை மற்றும் பம்பையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று காலையில் சபரிமலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் தலைமையில் பக்தர்கள் இன்றி நிறை புத்தரிசி பூஜை மிக எளிமையாக நடந்தது. இந்த பூஜைகளில் சன்னிதான பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், ஒரு சில அதிகாரிகள் மற்றும் கீழ் சாந்திகள் மட்டுமே கலந்து கொண்டனர். சபரிமலை வரலாற்றில் முதன் முறையாக பக்தர்கள் இன்றி நிறை புத்தரிசி பூஜை எளிமையாக நடைபெ்றுள்ளதாக குறிப்பிடப்பதுகின்றது.