You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

2018-08-21


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலி மலை என்னும் இடத்தில் அமைந்திருக்கும் முருகன் ஆலயத்தில் கடைசித் தேவதாசியாக இருந்தவர் முத்துக்கண்ணம்மாள். புதுக்கோட்டை மகாராஜா விராலி மலை கோயிலுக்கு வருகிறபோதெல்லாம் ஆங்கில அணிநடை இசைக்கு நடனமாடியவர் முத்துக்கண்ணம்மாள். இவ்வகையான நவீன நடனமும் சதிர்க்கச்சேரியின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டு விட்டது. தஞ்சாவூர் புதுக்கோட்டை மகாராஜாக்களின் அரசவை நடனத்திலும் இவை இடம்பெறலாயின.

1930 அளவில் தேவதாசி நடனங்கள் சடங்கு சார்ந்த ஆடல் மரபிலிருந்து மெல்ல மெல்ல விலகிப்போக, சதிர்க் கச்சேரி மட்டுமே எஞ்சியிருந்தது. தேவதாசி முறை சென்னை மாகாணத்தில் 1947ம் ஆண்டு ஒழிக்கப்பட்டபோது அந்த முறையின் கீழ் கோயில்களில் நடனமாடி வந்தவர்களில் தற்போது உயிருடன் உள்ளவர் 80வயதுடைய முத்துக்கண்ணம்மாள் மட்டுமே


உடலில் வயதுக்கான தளர்வு இருந்தாலும் சதிர் நடனத்தின் மீதான ஆர்வமும் பற்றும் அவரை இன்றும் ஆடத் தூண்டுகின்றன. தாளத்திற்கு பாடிக்கொண்டே ஆடுகிறார் இவர்.