You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
கொலம்பஸ் அமெ­ரிக்­கா­வுக்குச் செல்ல வழி­காட்­டிய வரை­படம்

2018-08-26


பல நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்பு மெகஸ்­த­னிஸும் மார்­கோ­போ­லோவும் யுவான் சுவாங்கும் உலகம் முழுக்கச் சுற்றித் திரிந்­த­போது அவர்­க­ளது கைகளில் இருந்த வரை­படம் எப்­படி இருந்­தி­ருக்கும்? அன்­றைய கால­கட்­டத்தில் பய­ணங்­களின் வழி­யேதான் உலகம் அறிந்­தி­ராத பல புதிய புதிய நிலப்­ப­ரப்­புகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.அப்­படி ஒரு பய­ணத்­தில்தான் தவ­று­த­லாக அமெ­ரிக்கக் கண்­டத்தை கண்­ட­றிந்தார் கொலம்பஸ். இன்று வரை உலக வர­லாற்றில் அது ஒரு முக்­கிய கண்­டு­பி­டிப்பு.


15ஆம் நூற்­றாண்டு கால­கட்­டத்தில் ஐரோப்­பிய நாட்­டினர் உலகின் பல்­வேறு மூலை­க­ளுக்கும் வழி கண்­டு­பி­டிக்­கத்­தொ­டங்­கினர். 
அவர்கள் உலகின் பல்­வேறு பகு­தி­க­ளுக்கும் பய­ணித்த குறிப்­பு­க­ளின்­படி வள­மான பகு­தி­க­ளுக்குச் செல்­வதைக் குறிக்­கோ­ளாகக் கொண்­டி­ருந்­தனர். அந்தப் பய­ணி­களின் குறிப்­பு­களைத் தாண்­டியும் பல்­வேறு நிலப்­ப­ரப்­புகள் ஐரோப்­பி­யர்­க­ளுக்குத் தெரி­யா­மல்தான் இருந்­தன. அப்­போ­தைய பய­ணி­களின் குறிப்­பு­க­ளின்­படி ஆசி­யாதான் உல­கி­லேயே வள­மான பகு­தி­யாக நம்­பப்­பட்­டது. 


1492ஆம் ஆண்டு ஆசி­யா­வுக்கு விரை­வாகச் சென்­ற­டையும் வகையில் ஒரு பாதையைக் கண்­டு­பி­டிக்கப் பய­ணத்தை மேற்­கொண்டார் கிறிஸ்­டோபர் கொலம்பஸ். ஆனால்இ அவர் தவ­று­த­லாகப் போய் சேர்ந்­தது அமெ­ரிக்கக் கண்டம். இதே போன்று மீண்டும் மீண்டும் நான்கு முறை பயணம் செய்தும் அவர் ஆசி­யாவை அடை­யவே இல்லை. அமெ­ரிக்கக் கண்­டத்தின் பல்­வேறு பகு­தி­களைக் கண்­ட­றிந்து ஐரோப்­பா­வுக்குக் காட்­டினார். அது­வரை அப்­படி ஒரு நிலப்­ப­ரப்பு இருப்­பதே பல­ருக்கும் தெரி­யாது. 


கி.பி. 1491இல் புளோ­ரன்ஸைச் சேர்ந்த ஹென்­றிகஸ் மார்­டெல்லஸ் (Hநசெiஉரள ஆயசவநடடரள) உரு­வாக்­கிய வரை­ப­டம்தான் கொலம்­பஸின் பய­ணத்­துக்கு வழி­காட்­டி­யாக இருந்­தி­ருக்­கக்­கூடும் என்­கின்­றனர். 527 ஆண்­டு­க­ளுக்கு முன்பு உரு­வாக்­கப்­பட்ட அந்த வரை­படம்இ தற்­போது ஆய்­வா­ளர்­களால் மீளு­ரு­வாக்கம் செய்­யப்­பட்டு டிஜிட்­ட­லுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. இந்த வரை­படம் 1962ஆம் ஆண்டு யேல் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு வந்­த­டைந்­தது. அதன்­பி­றகு தற்­போ­துதான் அது­கு­றித்த ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. பெய்­னெகே ரேர் பு ரூ மூலப்­பி­ரதி நூல­கத்தைச் (டீநiநெஉமந சுயசந டீழழம ரூ ஆயரௌஉசipவ டுiடிசயசல) சார்ந்த ஐந்து ஆய்­வா­ளர்கள் மார்­டெல்­லஸின் வரை­ப­டத்தை ஆய்வு செய்­துள்­ளனர். வரை­ப­டத்தில் பல்­வேறு தக­வல்­களும் படங்­களும் தெளி­வற்ற முறையில் அழிந்­து­போ­ன­நி­லையில். "மல்­டிஸ்­பெக்ட்ரல் இமேஜிங்" எனும் முறையின் மூலம் வரை­ப­டத்தின் பெரும்­பான்­மை­யான தக­வல்­களை ஆய்­வா­ளர்கள் மீட்­டெ­டுத்­துள்­ளனர். 


மார்­டெல்­லாஸின் வரை­படம் மேற்கில் அட்­லாண்­டிக்­கி­லி­ருந்து கிழக்கில் ஜப்பான் வரை விரிந்­துள்­ளது. இதற்­கி­டையில் இருக்கும் நிலப்­ப­ரப்பும் கடற்­ப­ரப்பும் ஓர­ளவு சரி­யா­கவே சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளன. ஆசி­யாவைச் சித்­தி­ரித்­தது மட்­டு­மல்­லாமல் அதன் ஒவ்­வொரு பகு­தி­யிலும் வாழும் மக்­களை பற்­றியும் குறித்­துள்­ளனர்.   
மேலும்இ இந்த வரை­ப­டத்தில் சுவா­ரஷ்­ய­மான விஷ­ய­மாக ஆய்­வா­ளர்கள் குறிப்­பி­டு­வது என்­ன­வென்றால்இ தென்­னா­பி­ரிக்­கா­வி­லுள்ள ஆறு­களின் அமைப்­புகள்இ இடங்­களின் பெயர்கள் மிகத்­துல்­லி­ய­மாக இருக்­கின்­றன. ஒரு­வேளை இதனை தொல­மியின் புவி­யியல் புத்­த­க­மான "இஜிப்டஸ் என் ஒவெலோ" வரை­ப­டத்­தி­லி­ருந்து (நுபலிவரள N ழஎநடழ அயி)  பெற்­றி­ருக்­கலாம் என்­கின்­றனர். 
மேலும்இ எத்­தி­யோப்­பி­யாவைச் சேர்ந்த மூன்று பிர­தி­நி­திகள் புளோரன்ஸ் கவுன்­சி­லுக்கு 1441 ஆம் ஆண்டு வந்­துள்­ளனர். அவர்­க­ளி­ட­மி­ருந்தும் தக­வல்கள் பெறப்­பட்­டி­ருக்­கலாம். மார்­டெல்­லசின் வரை­ப­டம்தான் அவ­ருக்குப் பின் வந்த  உலகின் மற்ற வரை­படத் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு முன்­னோ­டி­யா­கவும் முன்­மா­தி­ரி­யா­கவும் இருந்­தி­ருக்கும் என்­கிறார் இந்த ஆராய்ச்­சியின் தலை­வ­ரான வன் துசர்வ்.


கொலம்­பஸும் மார்­டெல்­லஸும் இத்­தா­லியைச் சேர்ந்­த­வர்கள் என்­பதால் கொலம்பஸ் கண்­டிப்­பாக மார்­டெல்­லஸின் வரை­படம் பற்றி கேள்­விப்­பட்­டி­ருப்பார். இந்த வரை­படம் தயா­ரிக்­கப்­பட்­ட­தற்கு அடுத்த ஆண்டே கொலம்பஸ் தனது பய­ணத்தில் அமெ­ரிக்கக் கண்­டத்தை கண்­ட­றிந்தார். அட்­லாண்டிக் பெருங்­க­டலின் வழியே மேற்கே செல்ல ஜப்­பா­னையும் அதற்­க­டுத்து ஆசி­யா­வையும் அடை­வதே இவர்கள் குறிக்­கோ­ளாக இருந்­தது. அதற்கு மார்­டெல்­லஸின் வரை­ப­டமும் ஒரு காரணம். கொலம்­பஸின் முதல் பய­ணத்தில் ஒரு தீவில் இறங்­கி­யதும் பலரும்  ஜப்பான் என்றே நினைத்துள்ளனர்.
இதனிடையேஇ கொலம்பஸ் வட அமெரிக்காவில் கால் பதிக்கவே இல்லை. அவரின் பயணம் கீழே உள்ள கரீபியன் தீவுகளோடு முடிந்துவிட்டது என்றும் வரலாற்று ஆதாரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. எது எப்படியோஇ அப்போதைய உலக வரைபடங்களின் மூலம் வரலாற்றின் முரண்களையும் பயணங்களின் விளைவுகளையும் பயணத்துக்கான உந்துதலையும் பெற முடியும். 


பயணங்களுக்கான வழிகாட்டியாக எப்போதும் இருப்பது வரைபடம்தான். அதற்கான வரலாறும் முக்கியமானதுதான்.

- ஞாயிறு  வீரகேசரி