You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நல்லூரில் செப்ரெம்பர் 01ஆம் திகதி முதல் நாடகத் திருவிழா - 2018

2018-08-30


நல்லூர் கந்தனின் பெருந்திருவிழா காலத்தில் விழாகோலமாக காட்சிதரும் நல்லூர் மண்ணில் வருடாந்தம் நடைபெறுகின்ற நாடகத் திருவிழா இந்த வருடம் செப்ரெம்பர் மாதம் 01திகதி தொடக்கம் 5 திகதி வரை நடைபெறவுள்ளது. 


செயல் திறன் அரங்க இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆறாவது தடவையாக நடைபெறும் இந்த நாடகத் திருவிழாவில் பல்வேறு வகையான நாடகங்கள் மேடையேற உள்ளன.


அரங்கப் பயிற்சிபெற்ற சிறுவர்கள் பெரியவர்களுக்காக நடிக்கின்ற நாடகங்களை நல்லூர் நாடகத் திருவிழாவிலேயே காணமுடிகின்றது. மறந்து போன  நமது புராண மற்றும் பண்டைய கதைகளை அனைவரும் வியந்து ரசிக்கும் வகையில் மேடையேற்றுகின்றனர் இந்த கலைஞர்கள்.


விழா விபரம்


இடம் - நல்லூர் குறுக்கு வீதியில் அமைந்துள்ள செயல் திறன் அரங்க இயக்கத்தின் திறந்த வெளி அரங்கு


நேரம் - தினமும் மாலை 7.00மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை 
மொத்தம் பத்து நாடகங்கள் மேடையேறவுள்ள இந்த விழாவில் தினமும் இரண்டு நாடகங்கள் மேடையேறவுள்ளன. 

நாடகங்களின் விபரங்கள்


குழந்தை ம. சண்முகலிங்கத்தின் 
 ‘பஞ்சவர்ண நரியார், 
கூடிவிளையாடு பாப்பா  
முயலார் முயல்கிறார் 

தே.தேவானந்தின் 
‘ஒரு மோட்டார் சைக்கிளும் ஒன்பது பேரும்’ 
‘ஏகாந்தம்’ வேடமுக நாடகம்,
 ‘பாட்டி’ பொம்மைகள் நாடகம் 

செந்திலின் 
‘என்னால் முடியும்’ ஓராள் நாடகம்

 நாட்டார் வழக்கியற்கழகத்தின் 
‘சத்தியவான் சாவித்திரி’ 
‘மயானகாண்டம்’ இசைநாடகம் 

முற்றிலும் இலவசமாகக் இந்த நாடகத் திருவிழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள், புலம்பெயர் தேசங்களிலிருந்து வந்திருக்கக்கூடிய தமிழ் உறவுகள் சுற்றுலாப்பயணிகள் எனப்பலரும் ஆர்வத்துடன் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.