You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
பாரம்­ப­ரி­ய­க்க­லை­களும் தொழில் முறை­களும்

2018-09-04


கடந்த அரை தசாப்­தங்கள் கிழக்கு மாகா­ணத்தில் குறிப்­பாக அம்­பாறை மாவட்­டத்தில் வெளி­யீட்டு முயற்­சி­களின் பொற்­காலம். கவி­தை-­சி­று­கதை என போட்டி போட்டுக் கொண்டு நூல்­களின் எண்­ணிக்­கையை அதி­கப்­ப­டுத்­திய மாவட்டம் அம்­பாறை. வெளி­யீ­டு­களின் தரம், தர­மின்மை என்­ப­தற்­கப்பால் இவ் வரு­கைகள் எழுத்­துத்­து­றையில் முக்­கி­ய­மைல் கல் என்றே குறிப்­பி­டலாம். இவ் வெளி­யீ­டு­களில் இலக்­கி­யம்சார் முயற்­சிக்­கப்பால் அட்­டா­ளைச்­சேனை எஸ்.எல்.மன்சூர் உள்­ளிட்­ட­விரல் விட்டு எண்ணக் கூடி­ய­சிலர் கட்­டு­ரைசார் வெளி­யீ­டு­களைத் தந்­துள்­ளனர். அவ்­வ­ரி­சையில் ஊட­க­வி­ய­லாளர் எம்.எல்.சரிப்­டீனின் 'பாரம்­ப­ரி­ய­க­லை­களும் தொழில் முறை­களும்'என்ற நூல் மிக­முக்­கி­யா­னது.
சரிப்டீன் பத்­தி­ரி­கை­களில் பத்தி எழுத்­துக்­களை எழு­து­வதில் நீண்­ட­கால அனு­பவம் உள்­ளவர். நல்­ல­தொரு அறி­விப்­பாளர். எத­னையும் நிதா­ன­மாக அணு­கு­கின்ற ஊடக­வி­ய­லாளர். இவ் அனு­பவ ஆளு­மை­யி­னூ­டா­கவே இவ்­வா­றா­ன­தொரு நூலை­அவர் தர­வி­ளைந்­தி­ருக்­கின்றார்.சரிப்­டீனின் முயற்சி எதிர்­கால சமூ­கத்­தி­னரின் பொக்­கிஷம் என்றே  கூற வேண்டும். 


பாரம்­ப­ரியக் கோலாட்டம் முதல் கோழி வளர்ப்பு வரை­யி­லான முப்­பது அம்­சங்­களைத் தன் தேடல் மூலம் ஆவ­ணப்­ப­டுத்­தி­யுள்ளார் சரிப்டீன். எதிர்­காலச் சமூ­கத்­தி­ன­ருக்­கான ஆவ­ணச்­சான்று என்­பதில் மாற்றுக் கருத்­தில்லை. இந் நூலை வெளிக் கொணர்­வ­தற்­காக எழு­தப்­பட்­டுள்ள கட்­டு­ரை­களின் தக­வல்­களைப் பெற நீண்­ட­கால களப் பய­ணங்­க­ளையும் சந்­திப்­புக்­க­ளையும் மேற்­கொண்­டமை நூலி­னைத்­த­ரி­சிக்கும் போது அறி­யக்­கி­டைக்­கி­றது.
அம்­பாறை மாவட்டம், தான் வாழும் அக்­க­ரைப்­பற்று மற்றும் ஏனைய பிர­தேச  தக­வல்­களை திரட்டி கட்­டு­ரைகள் வளர்க்­கப்­பட்­டுள்­ளன. சில கலைகள் மற்றும் தொழிற்­து­றைகள் தொடர்பில் சாதா­ர­ண­மக்கள் அறி­யாத பல தக­வல்கள் இந்­நூலில் பதி­வா­கி­யுள்­ளமை நூலுக்கு வலிமை சேர்த்­துள்­ளது.


'பாரம்­ப­ரியக் கோலாட்டம்' 'சிலம்­புக்­கலை' 'பக்­கீர்பைத்' 'நெசவுக் கைத்­தொழில்' 'செங்கல் உற்­பத்தி' 'காளான் உற்­பத்தி' 'தும்­புக்கைத் தொழில்' 'தேனீ­வ­ளர்ப்பு' முத­லிய கட்­டு­ரைகள் இந் நூலுக்கு பலம் சேர்ப்­ப­தாக அமைந்­துள்­ள­துடன் அரிய பல தகவல் களஞ்­சி­ய­மா­கவும் அவை விளங்­கு­கின்­றன. 


கலை­களை அல்­லது தொழில்­களைக் குறிப்­பிடும் போது அது­பற்­றிய விளக்­கங்­களைத் தரக் கூடிய ஆவ­ணப்­ப­டங்­களை கட்­டு­ரை­க­ளுக்­கி­டையே கொடுத்­தி­ருந்தால் வாசிப்பு ஓட்­டத்தை இன்னும் ருசி­யு­டை­ய­தாக மாற்­றி­யி­ருக்க வாய்ப்­புண்டு.


தொழில்­களை நவீன மயப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் பற்றிக் கட்­டு­ரை­களின் தேவைக்­கேற்ப கோரி­யுள்ள நூலா­சி­ரியர் சில கலை­க­ளாலும் தொழில்­களைச் செய்­வ­தாலும் உட­லுக்கு ஏற்­படும் பலா­ப­லன்கள் குறித்தும் அவ­தானம் செலுத்­தி­யுள்ளார்.
எதிர்கால சமூகம் மறந்து நிற்கப் போகின்ற பல விடயங்களை ஆவணப்படுத்த நூலாசிரியர் எடுத்துள்ள முயற்சி பாராட்டத்தக்கது. கலாபூஷணம் மீரா எஸ். இஸ்ஸடீன் குறிப்பிட்டுள்ளது போல் எதிர்கால ஆய்வுத் தேவையாளருக்கான உசாத்துணை நூலாக இது அமையும் என்பதில் ஐயமில்லை. இந் நூல் ஒருபொக்கிசமாக அனைவரினதும் வீடுகளிலும் அமர்ந்திருக்க வேண்டும். சரிப்டீனின் இம் முயற்சி தொடரவேண்டும். அவரது பயணத்திற்கு எமது வாழ்த்துக்கள்.

(ஜெஸ்மி எம்.மூஸா)