You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கூத்து நாடக நூல்களின் வெளியீட்டு விழா

2018-09-05


பழமையான கலைகளின் மீதான ஆர்வம் இன்று நம் மத்தியில் அதிகரித்துள்ளது. இவ் கலை அம்சங்களில் கூத்து மிக முக்கிய இடம் வகிக்கின்றது. ஒவ்வொரு கூத்தும் ஒரு இனத்தின் வரலாற்றை அல்லது ஒரு புராண கதையைத் தழுவி அமைந்துள்ளது. 


இவ்வாறாக மன்னார் மாவட்டத்தின் பறப்பாங்கண்டல் கிராமத்தில் மேடையேற்றப்படும் 'சந்திரகாசன் நாடகம்' என்ற மூன்று இரவுக் கூத்தும் காத்தான்குளம் கிராமத்தில் மேடையேற்றப்படும் 'மரிகருதாள் நாடகம்' என்ற ஓர் இரவுக் கூத்தும் இவ் ஊர்களின் பண்பாட்டு அம்சங்களை கொண்டு விளங்குகின்றன. 
இவ் கூத்து கலையினை எமது எதிர்கால சந்ததியினரும் அறியும் பொருட்டு அவற்றை நூல் வடிவில் வெளியிடும் நிகழ்வு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த (25.08.2018) அன்று உயிலங்குளம் றோ.க.த. பாடசாலையில் இடம்பெற்றது. 


நூல்களின் வெளியீட்டு விழாவினை மன்னார் பிரதேசச் செயலாளர் திரு. ம. பரமதாசன் அவர்கள் தலைமை வகித்திருந்தார். முதன்மை விருந்தினராக வடமாகாண முதன்மைச் செயலாளர் திரு. அ. பத்திநாதன் அவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நூல்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.