You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சமூக விழிப்புணர்வு பவணியுடன் சிறப்பாக இடம் பெற்ற மாந்தை மண்ணின் கலாசார விழா

2018-09-09


வட மாகாண பண்பாட்டடலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில், மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து வருடாந்தம் நடத்தப்படுகின்ற கலாசார விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. 


கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இவ் நிகழ்வில்  அதிதிகள் பாரம்பரிய இசையுடன் வரவேற்கப்பட்டதுடன், கலாசார நடனங்களும் இடம்பெற்றிருந்தன.

இதன் போது சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற ஊர்தி பவணியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ் பவணியில் கிராமவாசிகள் பலரும் பங்குபற்றியிருந்ததுடன் பாரம்பரிய வாழ்க்கைமுறைகளும் சமூக சீர்கேடுகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


இக் கலாசார விழாவில் இவ்வருடம் தெரிவு செய்யப்பட்ட கலைஞர் ஒருவர் கௌரவிக்கப்பட்டதோடு, விசேடமாக மாந்தை கிழக்கு பிரதேசத்தில் காணப்படுகின்ற இயற்கை எழில்கள் மற்றும் வரலாற்று தொன்மையினை வெளிப்படுத்துகின்ற புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பான மாந்தை எழில் புகைப்படத் தொகுப்பு பிரதேச செயலாளர்  செல்வி ரஞ்சனா  அவர்களால் வெளியிட்டு வைக்க முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் பெற்றுக்கொண்டார். 


இதனை தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்வுகளுடன் கலாசார விழா சிறப்பாக இடம்பெற்று நிறைவுற்றது