You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




"Bonding Colors" ஓவியக் கண்­காட்சி

2018-09-09


இலங்கை ஓவியர் ஆர். கௌசிகன் "; "Bonding Colors"எனும் தலைப்­பி­லான இரண்டு நாள் ஓவியக் கண்­காட்சி ஒன்றை தனது மாணவன் நேதீஷ் சிவ­கு­மா­ருடன் இணைந்து வட இந்­தி­யா­வி­லுள்ள கொல்­கத்தா நகரில் அமைந்­துள்ள சாந்தி நிகே­தனில்  Santhiniketan Society of Visual Art and Design (SVDA)  ஓவிய கலைக்­கூ­டத்தில் நடத்­தினார். 
இந்த ஓவிய கண்­காட்­சியை விஷ்வ பாரதி பல்­க­லைக்­க­ழக முன்னாள் அதி­பரும், இந்­நிய பாரா­ளு­மன்ற ராஜ்ய சபா அங்­கத்­த­வ­ரு­மான பேரா­சிரியர் ஜொஹென் சௌதாரி அங்­கு­ரார்ப்­பணம் செய்­து­வைத்தார்.


சாந்தி நிகேதன் என்­றதும் நம் நினை­விற்கு வரு­பவை வங்கக் கவிஞர் ரவீந்­திர நாத் தாகூர் அவர்­களால் நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்னர் ஆரம்­பித்­து­வைக்­கப்­பட்டு, கலைகள் கற்­றுத்­த­ரப்­படும் பல்­க­லைக்­க­ழ­கங்கள் தான். உல­கத்தின் பல நாடு­க­ளி­லி­ருந்து ஏரா­ள­மான மாண­வர்கள் இப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் சேர்ந்து ஓவியம், நடனம், இசை, சிற்­பக்­கலை போன்­ற­வற்றை பயின்­று­வ­ரு­கின்­றனர். இப்­ப­டி­யான பாரம்­ப­ரி­யம்­மிக்க சாந்தி நிகே­தனில் ஓவி­ய­க்கண்­காட்சி ஒன்றை வெளி­நாட்­டி­லி­ருப்­ப­வர்கள் நடத்­து­வ­தென்­பது மிகவும் அரி­தான விடயம். அப்­ப­டி­யொரு சந்­தர்ப்பம் ஓவியர் ஆர். கௌசி­க­னுக்கும் அவ­ரது மாண­வ­ருக்கும் கிடைத்­தமை அதிர்ஷ்டம் என்றே கரு­த­ வேண்டும். 


இது­வரை அங்கு நடை­பெற்ற ஓவியக் கண்­காட்­சி­களில் பெரும்­பாலும் நவீன பாணி­யி­லான ((Modern & Abstract paintings)  சித்­தி­ரங்­களே வைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும், அவற்றை விளங்­கிக்­கொள்­ளவோ, ரசிக்கவோ முடியாதிருந்ததாகவும்,  இந்த கண்காட்சி தமது இதயங்களைத் தொட்டதாகவும் சாந்தி நிகேதனைச் சேர்ந்த பேராசியர்கள் பலர் தெரிவித்தார்கள்.

வீரகேசரி