You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அரச சாகித்திய விருது விழா 61! எழுத்தாளர்களின் இலக்கிய பணிக்கான கௌரவம்

2018-09-12


அரச இலக்கிய ஆலோசனை பேரவை, இலங்கை கலா மன்றம், கலாசார அலுவல்கள் திணைக்களம், உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும் இந்த விருது விழா, 61வது முறையாகவும் நேற்று 11.09.2018 சிறப்பாக இடம்பெற்றது. 

2017 ஆம் ஆண்டில் இலங்கையின் இலக்கிய துறைக்கு தமது இலக்கிய படைப்புக்களின் ஊடாக பங்களிப்பு வழங்கியமையை பாராட்டும் வகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்ட  இவ் விழாவில் எழுத்தாளர்கள்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

இலங்கையின் இலக்கிய துறைக்கு அருஞ்சேவை ஆற்றிய சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான இலக்கிய படைப்பாளர்களுக்கு வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் “சாகித்ய ரத்ன” கௌரவ விருது ஜனாதிபதி அவர்களால் இதன்போது வழங்கப்பட்டது.

சிங்கள மொழியில் பேராசிரியர் கே.என்.ஓ.தர்மதாச, தமிழ்மொழியில் முருகேசு பொன்னம்பலம் மற்றும் ஆங்கில மொழியில் பேராசிரியர் கனநாத் ஒபேசேகர ஆகியோரே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் தமிழில் எழுதப்பட்ட சிறந்த சுய பாடலாக்கம், கவிதை, சிறுகதை  சுயநாவல் ஆகிய எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன

சிறந்த சுய பாடலாக்க இலக்கியத்திற்கான விருது அப்துல் புத்தூசுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த கவிதை இலக்கியத்திற்கான விருதினை யு.எல்.எம். ஆதிக் பெற்றுக்கொண்டார்.

சிறந்த சிறுகதை இலக்கியத்திற்கான விருதினை பதுளை சேனாதிராஜா பெற்றுக்கொண்டார்.

சிறந்த சுயநாவல் இலக்கியத்திற்கான விருதினை ஜோன் ராஜன் பெற்றுக்கொண்டார்.