You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பிழையின்றி தமிழ் எழுதுவோம் - சொற்களின் உண்மைவடிவம் அறிவது எப்படி?

2018-10-11


அறிவும் என்பது நாம் கற்று தெரிந்து கொள்வதே. அறியாமையினால் நாம் சில பிழைகளை விடலாம். ஆனால் மீணடும் மொழியை ஆராய்ந்து கற்பதன் மூலம் நாம் மொழியை பற்றிய அறியாமையை நீக்கி கொள்ளலாம்.

பெரும்பாலும் நாமறிந்த அன்றாடம் பயன் படத்தும் சொற்களில் நாம் பிழைவிடுவதில்லை. இவை எமக்கு பழக்கப்பட்டவை என்றும் அவற்றில் நாம் பிழைவிடப்புபோவதும் இல்லை. ஆனால் ஒரு புதிய சொல்லை பயன்படுத்தும் போது தான் இப்படியான பிழை ஏற்படுகின்றது. சொற்களின் உண்மை வடிவத்தை அறியும் எளியமுறை  மொழி நுணுக்கங்களை தெரிந்து கொள்ளும் போது அவை இலகுவாக மனதில் பதியும்.

சில சொற்களை நாம் எழுதும் போது அதன் போச்சி வழக்கிலேயே பயன் படுத்துகின்றோம். சில சொற்கள் நீண்டனால் பயனில் இருப்பதால் அதன் உண்மை வடிவம் மறைந்து விடுகின்றது.

உதாரணமாக “பதட்டம்” என்ற சொல்லை எடுத்து கொள்க இங்கு பதட்டம் என்பது பேச்சு வழக்கு இதன் சரியான வடிவம் பதற்றம் என்பதே! இப்படியான சொற்களை வினைவேரிலிராக அறிய முற்படும் போது உண்மையை அறியலாம். 

பதறு என்ற வினைவேரிலிருந்தே பதற்றம் என்ற சொல் உருவாகிறது. பதடு என்ற வினைவேரோ சொல்லோ நமக்கு இல்லை…” என்று ஒருமுறை மனதில் பதிய செய்து விட்டால் எப்போதும் பதட்டம் என்று எழுதமாட்டீர்கள். 

அவ்வாரான சில சொற்கள்

பேச்சு வழக்கு எழுத்து வழக்கு

நாட்கள்            -               நாள்கள்

ஒத்துமை - ஒற்றுமை

சுவற்றில் - சுவரில்