You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




"தொடு­தூ­ரத்தில் விடி­வானம்" கவிதை நூல் வெளியீட்டு விழா

2018-12-05


'தொடு­தூ­ரத்தில் விடி­வானம்' கவிதை நூல் வெளியீட்டு விழா  02ஆம் திகதி (02-12-2018) ஞாயிற்றுக்கிழமை அன்று பம்­ப­லப்­பிட்டி எ.வி.எஸ். மண்­ட­பத்தில் நடை­பெ­ற்றது. இவ் கவிதை நூல் சுப்­ர­மண்ய செல்­வாவின் படைப்பாகும்.


பேரா­தனை பல்­க­லைக்­க­ழக தமிழ்த்­துறை சிரேஷ்ட பேரா­சி­ரியர் வ.மகேஸ்­வரன் தலை­மையில் நடை­பெ­ற்ற  இந்­நி­கழ்வில் அரச மொழிகள் ஆணைக்­குழு தலைவர் பேரா­சி­ரியர் சோ. சந்­தி­ர­சே­கரன் சிறப்பு விருந்­தி­ன­ரா­கவும், நூல் அறி­மு­க­வு­ரையை கல்­விப்­ப­ணிப்­பாளர் சு.முர­ளி­த­ர­னும், ஆய்­வு­ரையை சட்­டத்­த­ர­ணியும் ஊட­க­வி­ய­­லா­ள­ரு­மான இரா.சட­கோ­பனும் வழங்­கி வைத்தனர்.


இவ் நூலின் முதற்­பி­ர­தியை இலங்கை மன­வ­ளக்­கலைமன்ற அறக்கட்டளை தலைவர் வெளியிட யாழ். மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் சி.முருகானந்தவேல் பெற்றுக்கொண்டார்.


வாழ்த்­து­ரையை அருள்­நிதி அ.மது­ரை­வீ­ரனும், அருள்­நிதி சி.முரு­கா­னந்­த­வேலும் வழங்கி வைத்ததுடன் கருத்­து­ரையை வசந்தி தயா­ப­ரனும், சுகந்தி இரா­ஜ­கு­லேந்­தி­ராவும் வழங்­கியிருந்தனர். ஏற்­புரை, நன்­றி­யு­ரையை நூலா­சி­ரியர் சுப்­ர­மண்ய செல்­வா வழங்­கியிருந்தார்.