You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இலண்டனில் நாவலர்விழா

2019-01-03


பிரத்தானிய சைவ முன்னேற்றச் சங்கத்தின் அனுசரணையில் திரு. வாமானந்தன் தலைமையில்  ஸ்ரீலஸ்ரீ ஆறுகப் பெருமானின் குரு பூசை விழா சிறப்பாக நடைபெற்றது. 

இதன் போது அடுத்தவருடம் முதல்  இலண்டனில் நாவலர்  விழாவை தேசிய விழாவாக நடத்தவேண்டுமென வேண்டுகோல் முன்வைக்கப்பட்டது. நாவலர் பெருமானின் கல்விப் பணிமூலம் தமிழ்மக்களிடையே சைவத் தமிழ் உணர்வை ஏற்படுத்த வேண்டும் அதற்காக ஸ்ரீலஸ்ரீ ஆறுமக நாவலர் சபை ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிதியத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு நல்க வேண்டுமென நாவலர் சபையின் சர்வதேச இணைப்பாளர் ஐ.தி.சம்பந்தன் கேட்டுக்கொண்டார் சைவமுன்னேற்றச் சங்கத்தின் வெளியீடான தோரனம் ஆசிரியர் திரு.சிவனெறிச் செல்வா் “நாவலா் நெறி” பற்றி விளக்கமளித்தார்.

அடுத்து பிரதம பேச்சாளா் சட்டத்தரணி கு.சிதம்பரப்பிள்ளை அவா்கள் நீண்ட உறை ஒன்றை நிகழ்தினார்

 

சைவசமய வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த ஆளுமையாக விளங்கியவர் இவர். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் சைவசமயத்தில் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்திய மகான். சிவம் ஆகமம் சைவம் என்பதை தன்உயிரினும் மேலாக போற்றி பாதுகாத்தவர். அஞ்சா நெஞ்சம் கொண்டவர். துணிச்சலும் தீர்க்கதரிசனமும் கொண்டவர்.

மரபுச் சைவத்தை மிகமிகத் தீவிரமாகக் கடைப்பிடித்தவர். நாவலரின் சைவப் பணியிலேயே இன்று உலகம் முழுவதும் சைவம் பரவி நிற்கிறது. அவர் வாழ்ந்த காலம் சொற்பம். (1822-1879) 56 வருடங்கள் 11 மாதங்கள் மட்டுமே. ஆனால் அவர் சைவசமயத்திற்கும் சைவ பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கும் செய்த முயற்சிகள் அளப்பரியன. நாவலர் பெருமானுடைய சிந்தனைகள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மகாஜானா, ஸ்கந்தவரோதயா, இராமநாதன் கல்லூரி போன்றவை.

அத்தோடு சைவபரிபாலன சபை, சைவவித்தியா விருத்திச் சங்கம் உருவாக்கம் இவரின் முயற்சியே. இது மட்டுமல்ல தமிழ் மொழிக்கும் பெரிதும் தொண்டாற்றியவர். 1951இல் பெரியபுராணத்தை முதல் முறையாக வசனமுறையில்“ பெரியபுராண வசனம்” என்று தமிழ் மொழியில் உரைநடை நூலாக ஆக்கிய பெருமை இவரைச் சாரும். அத்தோடு இளம்தலைமுறையினரை ஊக்குவிப்பதற்காக பாலபாடம் நூல்கள் வெளியிட்டார். இவ்வாறு இளைய தலைமுறையை முன்னிறுத்தி பாலபாடத்தை இயற்றியோர் தமிழக வரலாற்றில் எவரும் இல்லை.

கருத்துரையாடலில் திருமதி அருளாம்பிகை குணராசா, திருமதி.சரோசா கனகசபேசன், திருமதி பத்மா குணராசா, திருமதிபுவனேஸ்வா் சபாரத்தினம், திருமத வசந்தா மாதேவன்ஆகியோர் பங்குபற்றினார்கள்.