You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




146 ஆண்டுகளின் பின் வெளிப்பட்ட சுனை லிங்கம் பக்தர்கள் பக்தர்கள்

2019-01-06


இந்துதுதியாவில் எண்ணிலடங்கா அற்புதங்கள் பல உள்ளன ஒச்வொன்றும் காண்பவரையும் கேட்பவரையும் மெய்சிலிர்க்கச்செய்கின்றன. இவ்வாறான ஒரு அதிசயம் தான் சுனை லிங்கம் என்பதும். 


இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை எனும் கிராமத்தில் மேலமலையில் விஜயாலீசுவர் கோயில் மற்றும் குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. அந்த மலையில் தலவிரி சிங்கம் என்னும் நீர் நிரம்பிய சுனை உள்ளது. இவ் சுனையில் மூழ்கிய நிலையில் லிங்கம் ஒன்று உள்ளது. 


இறுதியாக இவ் சுனை நிரை இறைத்து 1872-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் ராணி லிங்கத்தை வழிபட்டதாக இங்கு உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 146 ஆண்டுகளுக்குப் பிறகு, சுனை நீரை இறைத்து சிவலிங்கத்தை வழிபடும் முயற்சி கடந்த 31-ம் தேதி தொல்லியல் துறையின் அனுமதி பெற்றுத்  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அமைப்பினரால் தொடங்கப்பட்டது.


இவ் குழுவினர் தொடர்ந்து ஐந்து நாள்கள் கடுமையாக உழைத்ததன் பலனாக 04-01-2019 திகதி  லிங்கம் வெளிப்பட்டு பக்தர்களைப் பக்தி பரவசத்திற்கு உள்ளாக்கியது. சுனை லிங்கத்திற்கு பக்தர்கள், தேவாரம் பாடி வழிபாடு மேற்கொண்டனர்.


இது குறித்து இந்தப் பணியை ஒருங்கிணைத்த  'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ குழுமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரிடம் பேசினோம். 


“இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்தன்ன வாசல் சுனையில் மூழ்கியிருந்த நீரை இறைத்து சிவபெருமானுக்குப் பூஜை செய்தோம். இங்கு கல்வெட்டைப் படித்ததும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று சுனை நீரை இறைத்து லிங்கத்தைத் தரிசிக்க வேண்டும் என்று எண்ணி தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்றோம். 31-ம் தேதி காலையில் நீரை இறைக்கத் தொடங்கிய பணி மறுநாள் மதியம் வரை தொடர்ந்தது. நீருக்கு அடியில் 7 அடிக்கும் மேலே சேறு சேர்ந்திருந்தது. இயந்திர மோட்டார் மூலம் சேற்றை வெளியேற்றுவதற்கு முயற்சி செய்தோம். ஆனால், முடியவில்லை. அதன் பிறகு வாளியால் சேரை இறைத்து வெளியேற்றத் தொடங்கினோம். அதன் பிறகு, கிராம மக்களும் சிவனடியார்களும் என்று நூற்றுக்கு மேற்பட்டோர் உதவிக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். அனைவரின் உழைப்புடன் சுனையில் தேங்கியிருந்த சேற்றை வெளியேற்றியதன் பலனாக நான்காவது நாள் சிவபெருமான் காட்சியளித்தார். ஐந்தாவது நாளான 4.01.2019 அன்று இடத்தை சுத்தம் செய்து முறைப்படி வழிபாடு செய்தோம்’’ என்று பரவசத்துடன் தெரிவித்தார்.


சுனைலிங்கம் வெளிப்பட்டத்தை அடுத்து நார்த்தாமலை திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. கிராம மக்களும், சிவனடியார்களும் பரவலாக வந்து சுனை லிங்கத்தைத் தரிசித்து சென்றனர். மழை பெய்து மீண்டும் சுனை நிரம்பும் வரை லிங்கத்தைத் தரிசிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இங்கு வருபவர்கள் ஒருமுறையாவது சுனை லிங்கத்தைத் தரிசித்து, இறைவனின் அருள் பெறலாம்.