You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சர்வதேச அரங்கில் கிராமிய நடனப்போட்டியில் முதலிடம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள்

2019-01-07


ஏழாவது முறையாக இந்தியாவின் காஞ்சிபுரத்தில் இடம்பெற்ற ஹிடின் ஐடோல் (Hidden Idol ) சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் கிராமிய நடன பிரிவில் முதலாமிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளனர்.


கடந்த வாரம் நடைபெற்ற இந்த கிராமிய நடனப்போட்டியில் பங்கேற்ற யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் சிவலிங்கம் தாகியன், சிவலிங்கம் தாருஜன், சதீஸ் யனோஜ், இராஜரட்ணம் மோனாலிஷன், துரைசிங்கம் றஜீவன், உதயகுமார் சுலக்சன், தங்கராசா தனுஜன், ரமேஷ் விஷ்வா ஆகிய எட்டு  மாணவர்களும் தமது திறமையை வெளிப்படுத்தி இலங்கைக்கும்  இலங்கை தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.


இவர்கள் பிரபல நடன ஆசிரியர் நடன வித்தகன் துரைசிங்கம் வாகீசனால் பயிற்றப்பட்டனர் எனவும் குழுவுக்கு பொறுப்பாசிரியராக சிங்கராஜா செந்தூரன் பெரும்பங்காற்றினார் என்றும்  யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததுள்ளது.