You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சர்வதேச ஆய்வுமாநாட்டில் விரிவுரையாற்றி அனைவரையும் பிரம்மிக்கச் செய்த இலங்கை தமிழர்

2019-01-08


 இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச ஆய்வு மாநாட்டில் வளவாளராகக்கலந்துகொண்ட இலங்கையின் ஊவா வெல்லஸ பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட நூலகர் கலாநிதி துரையப்பா பிரதீபன் தமது விரிவுரை  மூலம் பலரது பாராட்டையும் பெற்றார்.


மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலய பழைய மாணவனான கலாநிதி பிரதீபன் கடந்த 7ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை இந்தியா சென்னை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் விரிவுரையாற்றியிருந்தார்.


உலகின் பலபாகங்களிலுமிருந்து கல்வியியலாளர்கள் பேராசிரியர்கள் கலந்துகொண்ட இவ் மாநாட்டில்  இவர் சர்வதேச ஆய்விதழ்களில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பணம் செய்தலிலுள்ள சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்கள் எனும் தலைப்பில்  விளக்கமாக 3மணிநேரம் எடுத்துக்கூறியிருந்தார்  என்பது குறிப்பிட தக்கது.