You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




16 வயதில் கவிதை நூல் வெளியிடும் இந்திய சிறுவன்

2019-01-09


இந்தியாவின் மஹாராஷ்டிராவில், 16 வயதுடைய  ஆர்ய மான் தாத்ரா எனும் சிறுவன், எழுதிய, 'ஸ்னோ பிளேக்ஸ்' என்ற கவிதை தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.


மஹாராஷ்டிராவின் பிரபல மராத்தி செய்தி தாளான, 'லோக்மாத்' பத்திரிகையின், முகாமைத்துவ பணிப்பாளர் தேவேந்திரா தாத்ராவின் மகன், ஆர்யமான் தாத்ரா,  ஆங்கிலத்தில்,எழுதிய 'ஸ்னோ பிளேக்ஸ்' எனப்படும், பனித்துளிகள் என்ற கவிதை தொகுப்பு நூல் மும்பையில்  சமீபத்தில் நடந்த விழாவில், வெளியிடப்பட்டது.


விழாவில், பங்கேற்ற பாலிவுட் பாடலாசியர் ஜாவேத் அக்தர் பேசும் போது இன்றைய இளைய தலைமுறையினர், எண்ணங்கள், கருத்துகள், மதிப்பீடுகள் ஆகியவற்றில், முந்தையை தலைமுறையினரை விட, மாறுபட்டுள்ளனர். நல்ல சிந்தனைகளை, குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு நேரமில்லாமல், மகிழ்ச்சியை தேடி ஓடுகின்றனர். ஆனால், கலாசாரம், ஒழுக்கம் ஆகியவற்றை பெற்றோரிடம் கற்று, ஆர்யமான், கவிதை எழுத பழகியிருக்கிறார். என பாராட்டியுள்ளார்.


இதன் பேது இயற்கை மற்றும் வன உயிரினங்கள் மீது ஆர்வம் உடைய ஆர்யமான், தற்போது வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு மூலம் கிடைக்கும் விற்பனை தொகையை, இயற்கை பாதுகாப்புக்காக செலவிடப் போவதாக தெரிவித்தார். எதிர்காலத்தில், ஹிந்தி மொழியில் கவிதை எழுத உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.