You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஓவியத்திரமையால் தனி ஆளாக சாதித்த தாத்தா

2019-01-09



ஆனால் தனி ஒருவனாக தனது கிராமத்தை காப்பாற்றி தாத்தா தான் இன்று உலகம் முழுக்க டிரெண்டிங்க் ஆகியுள்ளார். இவர் செய்த காரியத்தால், உலக நாடுகளே இன்று வியந்து வருகின்றது. மேலும் அந்த கிராமம் உலக சுற்றுலாத்தளமாகவும் மாறியுள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! கிராமத்தை அழிக்க திட்டம்: 


தைவான் நாட்டில் எந்தவித அபிவிருத்தியம் இல்லாத தைச்சுங் எனும் கிராமம் உள்ளது. இவ் கிராமத்தி அபிவிருத்தி வலயமாக மாற்றும் நோக்கில் தைவான் அரசு தொழில்நுட்பம் சாந்த தொழில் சாலைகளை உருவாக்க திட்டமிட்டது. இதனால்  மக்களை வெறியேறுமாறு உத்தரவிட்டது. 


தாம்  வாழ்ந்த மன்னை விட்டக்கொடுக்க முடியாத தாத்தா தனது தனி முயற்சியால் கிராமத்தில்  மாற்றத்தை ஏற்பத்து முட்பட்டார். தற்போது 96 வயதான தாத்தா ஹூவாங் அதில் போராடி வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு அவர் ஆயுதமாக கையில் எடுத்தது தனது ஓவியத் திறமயை.


ஒரு கட்டத்தில் 1200 வீடுகளைக் கொண்டது தாய்சங்க் கிராமததில் மக்கள் அனைவரும் வெளியேறி விட, ஒரு கட்டத்தில் 12 வீடுகளில் மட்டுமே மக்கள் வசித்தனர். மூன்று வயது முதல் சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்ட ஹூவாங் தாத்தா தமது சொந்த செலவில் இவ் வீடுகளின் சுவர்களில் ஓவியம் வரைய தொடங்கினார். ஹூவாங்கின் இந்த முயற்சி அருகில் இருந்த பல்கலைக்கழக மாணவர்களின் கவனத்தையும் ஈர்த்தது. எனவே, அவர்களும் ஹூவாங்கோடு சேர்ந்து ஓவியங்கள் வரையத் தொடங்கினர்.


தொடர்ந்து ஏழு  வருடங்கள் கைவிடப்பட்ட வீடுகளின் சுவர்களில் ஓவியங்களை வரைந்து இவ் கிராமத்தை  ஓவியம் சூழ்ந்த கிராமமாக உருவாக்கி உள்ளார். வானவில் கிராமம் என அழைக்கப்படும் இவ் கிராமம் தற்போது ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கும் மேலான சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக  மாறி உள்ள இவ் கிராமம் தைவான் அரசினால் கலாச்சார சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.