You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
நூல் அறிமுகம் - எரி­மலை

2019-02-12


ஞானம் கலை இலக்­கிய சஞ்­சி­கையின் ஆசி­ரி­யரும் "புதிய சுவ­டுகள்"(1977), "குரு­தி­மலை"(1979), "லயத்துச் சிறைகள்" (1994), "கவ்­வாத்து"(1995) ஆகிய நான்கு நாவல்­களை ஏற்­க­னவே தந்­துள்­ள­வ­ரு­மான தி.ஞான­சே­க­ரனின் புதிய நாவலே "எரி­மலை" (2018) ஆகும்.


ஞானம் பதிப்­ப­கத்தின் 53 ஆவது நூலாக வெளி­வந்­தி­ருக்கும் இந்த "எரி­மலை" என்னும் நாவலும் ஈழத்து நாவ­ல் இ­லக்­கிய வர­லாற்றில் அவ­ருக்­கான இடத்தையும் அடை­யா­ளத்தையும் மிகவும் ஆழ­மா­கப் பதிவு செய்யும் வல்­லமை கொண்­ட­தா­கவே அமை­ந்துள்ளது என்றால் அது மிகையாகாது.


இந் நூலுக்­கான முன்­னுரை மற்றும் அணிந்­து­ரை­களை அளித்­தி­ருக்கும் இரு ஓய்வுநிலைப் பேரா­சி­ரி­யர்­களும் இக் கருத்­தையே மிகவும் அழுத்­த­மாகப் பதி­விட்­டுள்­ளனர்.


"இலங்­கையின் புகழ்­பெற்ற நாவ­லா­சி­ரி­யர்­களுள் ஒரு­வ­ராக விளங்கும்  தி.ஞான­சே­க­ரனின் "குரு­தி­மலை" ஒரு குறிப்­பிட்ட காலத்து இலங்­கையின் மலை­யக அர­சியல் வர­லாற்றுப் பின்­ன­ணியில் அமைந்­தது. இப்­போது வெளி­வரும் "எரி­மலை" என்னும் இந்த நாவல் அதி­லி­ருந்து வேறு­பட்டு ஒரு குறிப்­பிட்ட காலத்து யாழ்ப்­பா­ணத்து அர­சியல் வர­லாற்றைப் பேசு­கி­றது. இந்­த நா­வலில் அர­சி­யலே பேசு­பொ­ரு­ளாக விளங்­கு­கி­றது. அந்த வகையில் இது ஒரு தனித்­துவம் மிக்க நாவ­லாக அமை­கி­றது. இது­வரை நாவலின் பேசாப்பொருளை இது பேசு பொருளாக்­கி­யி­ருக்­கி­றது. இந்­த நா­வலின் வருகை ஒரு குறிப்­பிட்ட காலத்து இனப்­போ­ராட்ட வர­லாற்றின் வெட்­டு­முகத் தோற்­றத்தை வாச­கர்­க­ளுக்கு உணர்த்­து­கி­றது…." என்று சொல்­கி­றது பேரா­சி­ரியர் துரை மனோ­க­ரனின் முன்­னுரை.
பேரா­சி­ரியர் செ.யோக­ராசா தனது அணிந்­து­ரையில்,
"இலங்­கையின் இன முரண்­பாடு பற்றி  பேசு­கின்ற அர­சியல் நாவல்கள் சில அவ்­வப்­போது வெளி­வந்­தி­ருப்­பினும் "எரி­மலை" என்னும் இந்த நாவல் அவை அனைத்­தி­லி­ருந்தும் நோக்­கிலும் போக்­கிலும் வித்­தி­யா­ச­மா­ன­தாக தனித்­து­வ­மு­டை­ய­தாக முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருப்­ப­தாக என்னால் கருத முடி­கி­றது. மலை­ய­கத்தைக் குரு­தி­ம­லை­யாகக் கண்ட இந்­நா­வலின் ஆசி­ரியர் இப்­போது ஒட்­டு­மொத்­த­மான தமிழ் சமூ­கத்­தி­னரை ஏன், 1983 ஆம்  ஆண்டின் பின் இலங்­கையின் அனைத்து சமூ­கத்­தி­ன­ரது உள்­ளங்­க­ளையும் அவ­ரவர் நிலையில் எரி­ம­லை­யாகக் காண்­கின்றார் என்றே கரு­து­கின்றேன்" என்­கிறார். 


"1984 ஆம்  ஆண்டு காலப்­ப­கு­தியில் என்னால் எழு­தப்­பட்ட நாவலிது. ஆரம்­பத்தில் சாத்­வீக முறையில் அமைந்த இலங்கைத் தமி­ழரின் இன விடு­தலைப் போராட்டம் பின்னர் ஆயுத போராட்­ட­மாக மாறி­யது ஏன் என்­ப­தற்­கான காரண காரியத் தொடர்­பு­களை இந்த நாவல் ஆராய்­கின்­றது. ஆயுத போராட்டம் நில­விய மூன்று தசாப்த காலத்தில் இந்த நாவலை வெளி­யி­டக்­கூ­டிய அர­சியல் சூழ்­நிலை இருக்­க­வில்லை. 


இந்த நாவல் ஆயுத போராட்­டத்­துக்கு முற்­பட்ட 35 வருட கால தமி­ழர்களின் சாத்­வீக போராட்டச் சம்­ப­வங்­களை  முழு­மை­யாக வெளிக்­கொ­ண்டு வரும் வகையில் எழு­தப்­பட்­டதாகும்.
சமீ­பத்தில் இந்த "எரி­மலை" நாவலை எடுத்து வாசித்­த­போது ஆவணப் பெறு­மானம் மிக்க இந்த அர­சியல் வர­லாற்று நாவலை வெளிக்­கொ­ண்டு வர வேண்­டி­யதன் முக்­கி­யத்­துவம் அதி­க­மா­கவே என்னால் உண­ரப்­பட்­டது. அதன்­பே­றா­கவே இதந் நாவல் தற்­போது உங்கள் கைகளின் தவழ்­கி­றது…" என்று நாவல் பிறந்த கதையை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்து  கொள்­கின்றார் நாவ­லா­சி­ரியர் தி.ஞான­சே­கரன் (என்­னுரை) தி.ஞான­சே­கரன் ஒரு பன்­முக ஆளு­மை­யாளர். 60களில் சிறு­கதை எழுத்­தா­ள­ராக (கலைச்­செல்வி) ஆரம்­பித்த இலக்­கியப் பயணம் இந்த "எரி­மலை" நாவல் வரையும் பன்­முக வெற்றித் தளங்­க­ளினூ­டா­கவே தொடர்­கி­றது. 1965 ஆம் ஆண்டு "கலைச்­செல்­வி"யில் சிறு­கதை எழுத ஆரம்­பித்து 1973 ஆம் ஆண்டு "கால­த­ரி­சனம்" சிறு­கதைத் தொகு­தி­, 1998  ஆம் ஆண்டு "அல்­சே­ஷனும்  பூனைக்­குட்­டியும்" மற்றும் 2005 ஆம் ஆண்டு "ஞான­சே­கரன் சிறு­க­தை­க­ள்" என  மூன்று சிறு­கதைத் தொகு­தி­க­ளையும் வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.
சிறு­க­தையும் நாவலும் இவ­ருக்கு ஆரம்­பத்­தி­லி­ருந்தே புகழ் சேர்த்­தவை என்­றாலும் 2000 ஆம் ஆண்­டி­லி­ருந்து இன்­று­வரை "ஞானம்" இதழை மாதம் தவ­றாது வெளி­யிட்டும் ஈழத்துச் சஞ்­சி­கை­யா­ளர்கள் எவ­ராலும் நினைத்துப் பார்க்­கவும் முடி­யாத விதத்தில் ஞானம் சிறப்பு மலர்­களை வெளி­யிட்டும் சாதனை படைத்­தவராக விளங்குகிறார்.
ஒரு படைப்­பா­ளி­யாக மேலெ­ழுந்து ஒரு இத­ழா­ள­ராக மாறிய பிறகும் அதன் அடுத்த கட்ட நகர்­வாக ஒரு பதிப்­பாளராகவும் மாறிய பின்பும் அதே ஆரம்ப வீறு­டனும் எழுத்­தாற்­ற­லு­டனும் வீச்­சு­டனும் ஒரு படைப்­பா­ளி­யாக இந் நாவலைத் தந்­தி­ருப்­பது வியப்பை மட்­டு­மல்ல, மகிழ்ச்­சி­யு­ட­னான திகைப்­பையும் தரு­கின்றது!


"ஈழத்துச் சஞ்­சி­கை­யா­சி­ரி­யர்­களுள் பல்­வேறு ஆளு­மைகள் கொண்­ட­வ­ரான தி.ஞான­சே­கரனின் எழுத்­தியல் ஆற்­றல்­களும் உயிர்ப்பும் எரி­ம­லை­யாக வெளிப்­பட்டுக் கொண்­டி­ருக்க" என்னும் பேரா­சி­ரியர் செ.யோக­ர­ாசாவின் அணிந்­துரை வரி என்னை மிகவும் ஈர்த்தது.
இந்த "எரிமலை" நாவல் "குருதிமலை" போன்று சிங்களமொழியிலும் மொழிமாற்றம் செய்யப்படல் வேண்டும் என்பதும் கவனத்துக்குரியது.
உயிர்ப்பு எரிமலையின் செந்தீ பரவும் முன்னட்டை ஓவியத்துடன் சதா கோபியின் நூல் வடிவமைப்புடன்  230 பக்கங்களில் ஞானம் பதிப்பகத்தின் 53 ஆவது வெளியீடாக வந்திருக்கும் இந்த "எரிமலை" நாவலின் விலை 600/= ரூபா.
வாசிக்க மட்டுமல்ல, ஒரு வரலாற்று ஆவணமாக வைத்திருக்கவும் வேண்டிய நூலிது.
தொடர்புகளுக்கு : ஞானம் 33, 46 th Lane, Colombo– 06

நன்றி - வீரகேசரி