You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தமிழ்மாருதம் 2019 - சிறப்புற நடைபெற்ற முதல் நாள் நிகழ்வுகள்

2019-03-10


வருடம் தோறும் தமிழ் மாமன்றத்தினால் ஏற்பாட்டு செய்யப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன  பண்பாட்டு பெருவிழாவான “தமிழ்மாருதம்” வவுனியா நகரசபைக் கலாசார மண்டபத்தில் நேற்றைய தினம் காலை  8.30 மணிக்கு வவுனியா விபுலானந்தர் சிலை முன்பிருந்து வவுனியா நகரசபை கலாசார மண்டம்பம் வரையான பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமானது.

 


நேற்றைய நாளின் சிறப்பு அதிதியான தமிழகத்தின் பிரபல பேச்சாளரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமாகிய இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தியிருந்தார். ஏனைய நிகழ்வுகளான வில்லுபாட்டு, ஆடலரங்கம், நாடகம், விவாதம் என்பனவற்றுடன் விழாவின் முதல் நாள் அமர்வு சிறப்பாக இடம்பெற்றது.


விழாவின் மற்றொரு விசேட நிகழ்வாக இலங்கையின் பிரபல புத்தக நிலையங்களின் ஒன்றிணைவில் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் இரண்டு நாட்கள் இடம்பெறுவதுடன், இரண்டாம் நாள் அமர்வுகள் இன்றையதினம் காலை 8.00 மணி முதல் நடைபெறுகின்றமை  குறிப்பிடத்தக்கது.